என் மலர்
புதுக்கோட்டை
- விராலிமலை பழைய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது.
- அலுவலகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட கருவறையில் பழங்கால ஓலைச்சுவடிகள், பட்டயங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
விராலிமலை
விராலிமலை பழைய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் நீதிமன்றமாக இயங்கி வந்த அந்த கட்டடம் காலப்போக்கில் பத்திரப்பதிவு அலுவலகமாக மாற்றப்பட்டு இன்றளவும் உறுதி தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
பழங்கால பர்மா தேக்கு உள்ளிட்ட உறுதியான அக்கால பொருட்கள் கொண்டு கட்டப்பட்ட அந்த அலுவலக கட்டடம் இன்றும் உறுதி தன்மையுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. மேலும், அலுவலகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட கருவறையில் பழங்கால ஓலைச்சுவடிகள், பட்டயங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
உதரணமாக கடந்த 1967- ம் ஆண்டு அண்ணா முதல்-அமைச்சராக இருந்த போது புதுக்கோட்டை நியூ இனாம் எஸ்டேட் ஒழிப்பு சட்டம் முன் வடிவுக்கு மன்னர் காலத்தில் எழுதி பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த செப்பு பட்டய ஆவணம் தற்போதைய விராலிமலை பத்திர பதிவு அலுவலகத்தில் உள்ள கருவறையில் இருந்து எடுக்கப்பட்டு சட்ட முன் வடிவுக்கு பின்னர் மீண்டும் கருவறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து விராலிமலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்,சமூக நல அமைப்பினர், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா தலைமை வகித்தார்.
ஜெயராமன், அய்யாதுரை, மணி, ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட துணைச்செயலாளர் தர்மராஜன் பங்கேற்று ஆர்பாட்டத்தை தொடங்கிவைத்து கட்டடத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.
இதில், பழமை வாய்ந்த புராதன சின்னமாக போற்றி பாதுகாக்க வேண்டிய கட்டிடத்தை இடிக்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும் என்றும்.கட்டடம் அருகில் பயன்பாடற்று இருக்கும் இடத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட வேண்டும், பழைய கட்டிடத்தை ஆவண காப்பகமாக பாதுகாக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
- புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்த தாவது;- பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொ கை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 332 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செய்யது முகம்மது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- புதுக்கோட்டையில் கால்நடைகளுக்கு 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி திட்ட முகாம் நடைபெற்றது
- மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், திருமலைரா யசமுத்திரத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், கால்நடைகளுக்கு 4 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி திட்ட முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தொடங்கி வைத்தார்.சிறந்த கிடாரி கன்று வளர்ப்போருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்க ளையும், சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு விவசாயி விருதுகளையும், பயனாளிகளுக்கு தாதுஉப்பு கலவைகளையும் வழங்கினார்.பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது:-புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை களுக்கு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ், அனைத்து பசுக்களுக்கும், எருமைகளுக்கும் 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி, தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 38 குழுக்கள் அமைத்து 3,21,926 கால்நடை களுக்கு இலவசமாக இன்று முதல் தொடங்கி தொடர்ச்சி யாக 21 நாட்கள் அனைத்து கிராமங்களிலும் போடப்பட வுள்ளது.
நோய் தடுப்பு முறைக ளான, நோய் பாதித்தவுடன் சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் அலுவல ரிடம் தெரிவிக்க வேண்டும். நோய் பாதித்த கால்நடை களை உடனடியாக அகற்றி தனியே வேறு இடத்தில் பராமரிக்க வேண்டும். மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. கொட்டகையினை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும். நோயுற்ற பகுதியிலிருந்து புதிய கால்நடைகளை வாங்க கூடாது.வருடத்திற்கு இருமுறை தடுப்பூசி போட வேண்டும். நோய் பாதித்த கறவை மாடு பாலை கன்றுகளுக்கு அளிக்க கூடாது. சிறந்த பராமரிப்பு, தடுப்பூசி மட்டும் இந்நோயினை தடுக்க உகந்த வழி ஆகும் என்றார்.
இம்முகாமில், மண்டல இணை இயக்குநர் (கால்ந டைத்துறை) ராமச்சந்திரன், கால்நடை உதவி மருத்து வர்கள் தெட்சி ணாமூர்த்தி, தினேஷ்குமார், பிரபு, சுப்ரமணியன், அபிநயா, விக்னேஷ்,ரவிச் சந்திரன், தாசில்தார் கவியரசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- விராலிமலை புதிய பேருந்து நிலையத்துக்குள் பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது
- முதல்வரின் தனிப்பிரிவுக்கு மாவட்ட கவுன்சிலர் சிவசாமி மனு அனுப்பி உள்ளார்
விராலிமலை,
விராலிமலையில் ரூ. 3.18 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் சில பேருந்துகள் தவிர மற்ற எந்த பேருந்து களும் நிலையத்திற்குள் வந்து செல்வதில்லை. அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையத்தில் காவ லர்களை அதிகப்படுத்த வேண்டும். மற்றும் தீய ணைப்பு நிலையம் உடன டியாக அமைத்து தர வேண் டும்.
இவ்வாறு விராலிமலை மேற்கு மாவட்ட கவுன்சிலர் ஆர். கே. சிவசாமி, தமிழக முதல் வர் மு.க. ஸ்டாலின் தனிப்பி ரிவு மற்றும் அனைத்து துறை செயலர்களுக்கும் பொதுமக்கள் சார்பில் மனு அனுப்பி உள்ளார்
- ஆலங்குடி அருகே மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார்
- உறவினர்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் இடையன்வயல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(25) பொட்டாத்திக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(30) மேலும் இரண்டு நபர்கள் என மின்வாரிய கேங்க்மேன்கள் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர்-கச்சிரான்பட்டி சாலையில் மின்வாரியப் பணியில் தனித்தனி மின்கம்பங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கியதில் அஜித் மற்றும் முருகேசன் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்து கீழே விழுந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆலங்குடி போலீசார் அஜித்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த அஜித்குமாரின் உறவினர்கள் மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து உயிரிழப்பிற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுக்கோட்டை- பேராவூரணி நெடுஞ்சாலையில் உள்ள ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த ஆலங்குடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதிகாரிகள் வந்து கொண்டிருப்பதாகவும், அது வரை போராட்டத்தை கைவிட்டு அமைதியாக இருக்குமாறும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விராலிமலையில் ரூ.1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விராலிமலை ஆட்டு சந்தை களை கட்டியது
விராலிமலை,
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடந்த ஆட்டுச் சந்தையில் விற்பனை களைகட்டியது.
இங்கு ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர். அதேபோன்று உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வியாபாரிகளும் ஆடுகள் வாங்க திரண்டனர்.
இதில் அதிகபட்சமாக 5 கிலோ எடை கொண்ட ஆடு ரூ. 8000 வரையிலும், 8 கிலோ ஆடு ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலும், 10 கிலோ ஆடு ரூ.17 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இருப்பினும் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் அதிக விலை கொடுத்து ஆடுகளை வாங்க தயக்கம் காட்டினர்.
பின்னர் வேறு வழியில்லாமல் விற்பனை செய்ய கொண்டு வந்த ஆடுகளை திரும்ப கொண்டு செல்ல மனமில்லாமல் கிடைத்த விலைக்கு விவசா யிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்தனர்.
தீபாவளி நெருங்குவதால் தீபாவளி அன்று இறைச்சி கடை அமைக்க வியாபாரி கள் அதிக அளவில் ஆடு களை வாங்கிச் சென்றனர். அதிகாலை முதல் நடை பெற்ற இந்த ஆட்டு சந்தையில் சுமார் ரூ.1 கோடியே 25 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடை பெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவில் 58 வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு , பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
- இந்த முகாம்களில் புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் க.ஸ்ரீதரன் ஆய்வுகள் மேற்கொண்டு முகாம் அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினா
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவில் 58 வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு , பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாம்களில் புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் க.ஸ்ரீதரன் ஆய்வுகள் மேற்கொண்டு முகாம் அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ராமசாமி, வட்ட வழங்கல் அலுவலர் உத்திராபதி,கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட் டில் யாரும் இல்லாத நேரத் தில் விஷ்ணுகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- . அதில் ஜாதி ரீதியாக என் மகனை சக மாணவர்கள் துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்துள்ளார். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட் டம், கீரனூர் அருகே குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் உள்ள கொப்பம் பட்டி ஊராட் சியை சேர்ந்தவர் வீரமுத்து. மகன் வஷ்ணுகுமார் (வயது 16). இவர் கீரனூர் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட் டில் யாரும் இல்லாத நேரத் தில் விஷ்ணுகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த உடையாளிபட்டி போலீசார் விரைந்து வந்து விஷ்ணுகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பிவைத்த னர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாணவரின் இறுதி சடங்குகள் நடைபெற்றன.
காதல் தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் விஷ்ணு குமாரின் பெற்றோர் தாசில்தா தாரிடம் ஒரு மனு அளித்தனர். அதில் ஜாதி ரீதியாக என் மகனை சக மாணவர்கள் துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்துள்ளார். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரை ஜாதி ரீதியாக துன்புறுத்திய மாணவர்கள் யார்? என்று விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இவருக்கு சொந்தமான 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று அப்பகுதியில் உள்ளது.
- இந்நிலையில் தேசிய பறவையான மயில் ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த நரங்கியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்.
இவருக்கு சொந்தமான 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில் தேசிய பறவையான மயில் ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
இது குறித்து சென்னை தீ தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கு சுப்பிரமணியன் தகவல் கொடுத்தார். உயர் அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் கந்தர்வகோட்டை தீயணைப்பு போலீசார் விரைந்து சென்று கிணற்றில் உயிருக்கு போராடிய மயிலை உயிருடன் மீட்டு வனத்தில் விட்டனர்.
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, தாலுகா தலைமையிடமாகவும் சட்டமன்ற தொகுதியின் தலைமை இடமாகவும் விளங்குகிறது. .
- சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடப்பதற்கும், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும் போதிய இடம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, தாலுகா தலைமையிடமாகவும் சட்டமன்ற தொகுதியின் தலைமை இடமாகவும் விளங்குகிறது.
மேலும் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் ஒரு வளர்ந்து வரும் நகரமாகவும் திகழ்கிறது. தினசரி கந்தர்வகோட்டைக்கு அரசு அலுவலர்கள், மற்றும் பள்ளி ,கல்லூரி, மாணவ, மாணவிகள், கிராம பொதுமக்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். கந்தர்வகோட்டை முக்கிய கடைவீதியானது தஞ்சை மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
இதனால் எந்த நேரமும் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடப்பதற்கும், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும் போதிய இடம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் நாட்களில் மக்கள் அதிகம் இந்த சாலையில் கூடுவதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- பொன்னமராவதி - புதுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் ஸ்டீல் கடையில் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கம்பிகள் திருடப்பட்டது
- கைது செய்யப்பட்ட டீசல் முருகேசன் இதே போன்ற 77 கம்பித்திருட்டு வழக்கில் தேடப்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னமராவதி
பொன்னமராவதி - புதுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் ஸ்டீல் கடையில் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கம்பிகள் திருடப்பட்டு விட்டதாக கடையின் உரிமையாளர் சாதிக் பாட்சா அளித்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான காவல்து றையினர் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட தடயங்களை கைபற்றி தொடர்ந்து நடத்திய விசாரணையில் கம்பிகளை திருடிய புதுக்கோட்டை பூசத்துறையை சேர்ந்த டீசல்முருகேசன்(வயது 54) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட டீசல் முருகேசன் இதே போன்ற 77 கம்பித்திருட்டு வழக்கில் தேடப்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- காதல் தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
- வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் உள்ள கொப்பம் பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் வீரமுத்து. மகன் வஷ்ணுகுமார் (வயது 16). இவர் கீரனூர் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட் டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ்ணுகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த உடையாளிபட்டி போலீசார் விரைந்து வந்து விஷ்ணுகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாணவரின் இறுதி சடங்குகள் நடைபெற்றன.
காதல் தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் விஷ்ணுகுமாரின் பெற்றோர் தாசில்தாதாரிடம் ஒரு மனு அளித்தனர். அதில் ஜாதி ரீதியாக என் மகனை சக மாணவர்கள் துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்துள்ளார். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரை ஜாதி ரீதியாக துன்புறுத்திய மாணவர்கள் யார்? என்று விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






