என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை அருகே-கிணற்றில் தவறி விழுந்த மயில்-தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
- இவருக்கு சொந்தமான 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று அப்பகுதியில் உள்ளது.
- இந்நிலையில் தேசிய பறவையான மயில் ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த நரங்கியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்.
இவருக்கு சொந்தமான 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில் தேசிய பறவையான மயில் ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
இது குறித்து சென்னை தீ தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கு சுப்பிரமணியன் தகவல் கொடுத்தார். உயர் அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் கந்தர்வகோட்டை தீயணைப்பு போலீசார் விரைந்து சென்று கிணற்றில் உயிருக்கு போராடிய மயிலை உயிருடன் மீட்டு வனத்தில் விட்டனர்.
Next Story






