என் மலர்
புதுக்கோட்டை
- எங்களைப் பொறுத்தவரை ரம்மிக்கும் ஆன்லைன் ரம்மிக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது.
- பா.ஜ.க. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவதில்லை.
புதுக்கோட்டை:
ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டமசோதா நிறைவேற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர். அதில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சூதாட்ட தடை சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க முடியாது. ஆனால், திறமை சார்ந்த ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்று கூறி தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேநேரம், அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லும். மேலும் ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகியவற்றை விளையாடுவதற்கான வயது, நேரம் ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையில் அரசு புதிதாக விதிகளை உருவாக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆன்லைன் தடைச்சட்டத்திற்கு அரசாங்கம் சட்டம் ஏற்றுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பதை நீதிமன்றம் தெளிவாக சொல்லி உள்ளது. ஆனால் தமிழ்நாடு கவர்னர் அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என்று கூறியிருந்தார்.
நாங்கள் அவரிடம் எங்களுக்கு உரிமை உள்ளது என்பதை எடுத்துக் கூறியிருந்தோம். இந்நிலையில் இன்று நீதிமன்றம் நாங்கள் கூறியதைப் போல் அரசு சட்டம் ஏற்றுவதற்கு உரிமை உள்ளது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
இணைய வழி சூதாட்டம் ஒழுங்குமுறை படுத்துதல் தடை செய்தல் என்பதுதான் அந்த சட்டத்திற்கு பெயர். ஒழுங்குமுறைபடுத்துவது என்பது எந்தெந்த விளையாட்டுகளை எப்படி ஒழுங்குமுறைபடுத்த வேண்டும் அதற்கான குழுக்கள் அமைக்க வேண்டும் அந்த குழுக்களுக்கு மனுக்கள் போட்டு பரிசீலினை செய்து ஒழுங்குமுறைப்படுத்தி அந்த இணைய வழி விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும் என்பது முதலாவது கட்டம்.
இரண்டாவது கட்டம் ரம்மி மற்றும் போகர். இந்த 2 விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டும். ஏனென்றால் அதில் பெரும்பாலான மக்கள் பணத்தை இழந்து தற்கொலைக்கு ஆளாகிறார்கள். அதனால் போகர், ரம்மி இரண்டையும் தடை செய்ய வேண்டும் என்பதற்காக தனி பட்டியலில் அதை தந்துள்ளோம்.
எங்களைப் பொறுத்தவரை ரம்மிக்கும் ஆன்லைன் ரம்மிக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. ரம்மி என்பது திறமைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் ரம்மியில் திறமைக்கு வாய்ப்பில்லை. அது ஒரு ப்ரோக்ராம். விளையாட்டை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி அமைக்கலாம் அது திறமை அடிப்படையில் வராது. அதனால் அதனை தடை செய்ய வேண்டும் என்பது எங்களின் கருத்து.
ஆனால் நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்றவாறு அந்த வாதத்தை முன்வைக்கவில்லையோ என்று நாங்கள் நினைக்கிறோமே தவிர தீர்ப்பை பற்றி எதுவும் சொல்ல முடியாது, எங்களது வழக்கறிஞர்கள் வாதத்தை சிறப்பாக முன் வைத்திருந்தாலும் கூட நீதிபதி அந்தக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அவரை திருப்திபடுத்தும் வகையிலும் கருத்துக்களை எடுத்து வைக்கவில்லையோ என்ற எண்ணுவதைப் போல ஒரு தோற்றம்தான் வருகிறது தவிர வேறு எதுவும் கிடையாது. தீர்ப்புகளைப் பற்றி விமர்சிக்கும் உரிமை எனக்கு கிடையாது.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்டத்துறை பரிசீலனை செய்யும். மேல்முறையீடு தேவை என்று சொன்னால் அதன்படி மேல்முறையீடு செய்வோம். சட்டத்துறை அரசு வழக்கறிஞர்களுடைய கருத்துக்களைப் பெற்று அடுத்த நடவடிக்கை தொடரும்.
முறைப்படுத்துவது சட்டத்திலே உள்ளது கமிட்டி அமைக்கின்றோம் அந்த விளையாட்டுகளை ஒழுங்குமுறை படுத்துகின்றோம். சட்டப்படி ஒழுங்குமுறை படுத்துகின்ற விளையாட்டுகளை முறைப்படுத்தி நடத்தப்படும். ரம்மிக்கும் போகருக்கும் வயது வரம்பு கால வரம்பு எல்லாம் நிர்ணயிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி எந்த அளவுக்கு பரிசீலனை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பரிசீலனை செய்து எந்த அடிப்படையில் அவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அதனை நாங்கள் செய்வோம்.
அரசியலில் பா.ஜ.க. கூறும் கருத்துக்களை எல்லாம் தமிழ்நாடு மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை, இந்த சமய அறநிலையத்துறை என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயிலுடைய சொத்துக்களை பாதுகாப்பதற்கும் அதை நிர்வகிக்க அறக்கட்டளை நியமிப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பையே எடுத்து விடுவோம் என்று சொன்னார்கள் என்றால் எந்த அடிப்படையில் அவர்கள் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.
எங்களை பொறுத்தவரை பா.ஜ.க. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அதனால் இந்து சமய அறநிலையத் துறையை அவர்கள் எடுக்கப் போவதுமில்லை. அவர்கள் போற போக்கில் எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு பா.ஜ.க.விற்கு உரிமை உண்டு. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவது இல்லை என்பதால் என்ன வேண்டுமானாலும் அவர்கள் கூறலாம். சுதந்திர நாட்டில் கருத்து சொல்ல உரிமை உண்டு.
அண்ணாமலை தன்னை பற்றி பிறர் பேச வேண்டும் என்பதற்காக விமர்சனங்களை அவர் முன் வைக்கின்றார். தன்னை பிரபலப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தவிர வேறு ஏதும் இல்லை.
ஒருத்தர் மீது பழியை சொல்லிவிட்டு போனால் அவர்கள் அதற்கு பதில் கூறுவார்கள் அதன் மூலம் தனக்கு விளம்பரம் கிடைக்கும் தன்னுடைய எஜமானர்களை திருப்திபடுத்த முடியும் என்று அண்ணாமலை எண்ணுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா கியாஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிக்கலாம்
- மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவிலான உஜ்வாலா கமிட்டி கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது ஏழை, எளிய பொது மக்களுக்காக எண்ணற்றத் திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகி ன்றன. அந்தவகையில் உஜ்வாலா திட்டத்தின்கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப பெண்களுக்கு முன்வைப்பு தொகை இன்றி, எரிவாயு உருளை, எரிவாயு அடுப்பு உள்ளி ட்டவைகள் விலை யின்றி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற பொதுமக்கள் அருகிலுள்ள எரிவாயு உருளை வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் கமிட்டி உறுப்பினர்கள் பொது மக்களிடையே இத்திட்டம் தொடர்பாக விழிப்பு ணர்வை ஏற்படு த்திடவும், பயனாளிகள் சேர்க்கை விவரம் குறித்து அறிக்கை யினை வாரந்தோ றும் சமர்ப்பித்திட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் மாவட்ட பிரதிநிதி மற்றும் அரசு அலுவலர் கள் பலர் கலந்துகொண்டனர்.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி அருகே கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
- விற்பணை செய்வது கண்டறி யப்ப ட்டால் அக்கடை உரிமை யாளர்மீது தக்க நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்.
புதுக்கோட்டை,
மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா ஆணை யின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளின் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து ஆய்வு குழு மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மேலும் இதுகுறித்து பள்ளி மாணவ ர்களிடையே விழிப்புணர்வு வழ ங்கிடவும் அறிவுறுத்த ப்பட்டது.
அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, ஆலயவயல், நகரப்பட்டி ஆகிய பகுதிகளில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவல ர்வசந்தகுமார் , உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரவீன்கு மார்ஆகியோர்அடங்கிய ஆய்வுக்குழு மூலம் 6 கடைகளில் ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது. இதில் ஆலவயல் அரசு மேல்நிலை ப்பள்ளி அருகில் அமைந்து ள்ள மளிகைக் கடையில் புகையிலை பொருட்கள் விற்பணை செய்தது கண்டறி யப்பட்டது. அக்கடை உரிமையாளருக்கு ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு புகையிலைப் பொ ருட்கள் கைப்பற்ற ப்பட்டது.
மேலும் இதுபோன்று புதுக்கோட்டை மாவ ட்டத்தில் பள்ளி அருகில் அமைந்துள்ள கடைகளில் தொடர்ந்து இக்குழு ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டு புகையிலைப் பொருட்கள் விற்பணை செய்வது கண்டறி யப்ப ட்டால் அக்கடை உரிமை யாளர்மீது தக்க நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்.
- கறம்பக்குடியில் அனுமதியின்றி விற்பனை செய்த ரூ.3.25 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
- கூடுதல் கடைகளில் விற்பனை செய்வது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் பாதுகாப்பற்ற வகையில் விற்பனை போன்ற விதிமீறல்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் உரிமம் பெறாமல் அனுமதி இன்றி தீபாவளி பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கறம்பக்குடி தாசில்தார் நாகநாதன் தலைமையில் வருவாய் துறை அலுவலர்களும் கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் தலைமையில் போலீசார் கறம்பக்குடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தனியாருக்கு சொந்தமான கடையில் பட்டாசுகள் விற்பனை செய்வது தெரியவந்தது. அதை தொடர்ந்து தாசில்தார் நாகநாதன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
உரிமம் பெராமல் அனுமதி பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் 13 பட்டாசு கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூடுதல் கடைகளில் விற்பனை செய்வது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் பாதுகாப்பற்ற வகையில் விற்பனை போன்ற விதிமீறல்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
- தீபாவளி போனஸ் கேட்டுகூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டம் 2-வது நாளாக நீடிப்பு
- இதில் நிரந்தர தொழிலாளர்கள் 22 பேர் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 260க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் அரசு கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் நிரந்தர தொழிலாளர்கள் 22 பேர் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 260க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த ஆண்டுகள் வரை அரசு அறிவித்த பண்டிகை கால போனஸ் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது ஆலை நிர்வாகம் சார்பில் இந்தாண்டு தீபாவளி பண்டி கைக்கு தற்காலிக தொழிலா ளர்களுக்கு போனஸ் வழங் கப்பட மாட்டாது என அறிவித்ததாக கூறப்படு கிறது.
இதனையடுத்து வேதனை அடைந்த தற்காலிக தொழி லாளர்கள், தாங்கள் ஏற்க னவே குறைந்த ஊதியத்திற்கு வேலை பார்த்து வருகின்ற சூழ்நிலையில் தற்போது தீபாவளி போனஸ் கிடை யாது என நிர்வாகம் கூறியி ருப்பதை கண்டித்து ஆலை வாயில் முன்பு கண்டன ஆர்பாட்டம் 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் தற்கா லிக தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பண்டிகை கால போனஸ் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட் டது.
ஆர்பாட்டத்தில் தமிழ் நாடு பஞ்சாலை தொழிலா ளர் சம்மேளன மாவட்ட தலைவர் அலாவுதீன், டிஎம்பிடிஎஸ் மாவட்ட செயலாளர் கர்ணா உள்ளிட்ட தற்காலிக தொழி லாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டையில் தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் வாகன போக்குவரத்து மாற்றம்
- கடை வீதிகளில் அதிகளவு கூட்டம் காரணமாக நடவடிக்கை
புதுக்கோட்டை,
தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் கடை வீதிகளில் கூட்டம் காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் அரசு மகளிர் கல்லூரி ரவுண்டானா, பி.எல்.ஏ. ரவுண்டானா, பால்பண்ணை ரவுண்டானா, சங்கரமடம் வீதி, வடக்கு 4-ம் வீதி வழியாக செல்லும்.
தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வரும் பஸ்கள் வடக்கு 3-ம் வீதி, திலகர் திடல், பால்பண்ணை ரவுண்டானா, பி.எல்.ஏ. ரவுண்டானா, அரசு மகளிர் கல்லூரி ரவுண்டானா வழியாக புதிய பஸ் நிலையம் வந்தடையும்.
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆலங்குடி, அறந்தாங்கி செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையம், பேராங்குளம் வழியாக செல்லும். மேற்கண்ட தகவலை நகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- தஞ்சை ஓவியக்கலையில் சத்தமின்றி சாதனை படைத்து வரும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஓவியர்
- ஓவியக்கலைஞர்களுக்கு அரசு உதவி செய்ய கோரிக்கை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மணவாள அண்ணாநகரை சேர்ந்தவர் சி.காத்தான். இவர் தஞ்சை பெயிண்டிங் போர்டு தயாரிக்கும் பணியில் கடந்த 30 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.
சத்தமின்றி சாதனை படைத்து வரும் சி.காத்தான் பல கலைஞர்களை உருவாக்குவதே தனது நோக்கம் என கூறுகின்றார்.
இவரிடம் சென்னை, திருச்சி, செட்டிநாடு, கோயம்புத்தூர், ஹைதராபாத் போன்ற ஊர்களிலிருந்து ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.
இதன் மதிப்பு குறைந்தபட்சம் ரூ.3000லிருந்து பல லட்சம் வரை நீடிக்கிறது. சுத்த தங்கத்தில் தகடு செய்து வைப்பதால் தங்கம் விலை நிர்ணயித்து மதிப்பீடு செய்யப்படுகிறது.
பெரும்பாலும் கிருஷ்ணர், விநாயகர்,பெருமாள் படங்கள் தஞ்சை பெயிண்டிங்கில் தயாரிக்கின்றார். மேலும் இவர் தயாரித்துள்ள காமதேனு,நரசிம்மர் ஓவியங்கள் அவரது கலை திறமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. தனது கலை திறமையை அப்பகுதி இளைஞர்களுக்கு சொல்லி தருகின்றார்.
மேலும் அவருடன் 6 பெண்கள் தொடர்ச்சியாக பயிற்சி பெற்று தயாரிப்பு பணியில் உதவி செய்து வருகின்றனர்.
இவர் ஓவியங்களை புதுக்கோட்டையை சேர்ந்த ஓவியர் ராஜா பாலசுப்பிரமணியன் போன்றவர்களிடம் பயின்றுள்ளார்.
ஓவியத்தின் மீது ஆசையால் தனது வாழ்க்கை துணையாக ஓவிய ஆசிரியர் பேபி தமிழரசியை திருமணம் செய்துள்ளார். அவரும் இவருடைய கலை திறமைக்கு உதவியாக உள்ளார். இவரின் தஞ்சை பெயிண்டிங் ஓவியம் திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ளது, புதுக்கோட்டை மக்களுக்கு மதிப்பை கூட்டி தரும் என்பதில் ஐயமில்லை.
தற்போது உள்ள நவீன உலகில் ஓவிய கலை நலிவடைந்து வரும் வேளையில் காத்தான் போன்ற ஓவியர்கள் தொடர்ந்து ஓவிய கலையை வளர்த்து வருகின்றனர். இதுபோன்றவர்களுக்கு அரசு தன்னால் ஆன உதவி சிறுசிறு உதவிகளை செய்தால் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்க்கின்றனர் ஓவிய கலைஞர்கள்.
குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு 5 படங்களை தயாரிக்கிறார் காத்தான்.
தான் வருமானத்திற்காக இக்கலையை செய்ய வில்லை. ஓவிய கலையையில் முன்னணி நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசையில்தான் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தஞ்சை பெயிண்டிங் சி.காத்தான் ஆர்வத்துடன் கூறுகிறார். புதுக்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் நபர்களில் சி.காத்தானும் ஒருவர் என்றால் மிகையல்ல.
- சாதியை சொல்லி திட்டியதால் தற்கொலை செய்த வாலிபர் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது
- தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், கொப்பம்பட்டி கிராமம், பெரியார் நகரைச் சேர்ந்த வீரமுத்து என்பவரின் மகன் விஷ்ணுகுமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து உள்ளனர். வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொப்பம்பட்டி கிராமத்தில் தேசிய தாழ்த்த ப்பட்டோருக்கான ஆணைய இயக்குநர் ரவிவர்மன் விசாரணை மேற்கொண்டு, வன்கொடுமை சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டு இறந்துவிட்ட விஷ்ணுகுமாரின், தந்தை வீரமுத்துவிடம், உதவித் தொகை ரூ. 6 லட்சம் ரூபாய் (50 சதவீதம்) காசோலை யினை, தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய இயக்குநர் ரவிவர்மன் வழங்கினார்.
முன்னதாக இந்நிகழ்வு குறித்து, அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் துறை ரீதியான நடவடிக்கை கள் குறித்து, புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யாவுடன், தேசிய தாழ்த்த ப்பட்டோருக்கான ஆணைய இயக்குநர் ரவிவர்மன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் க.ஸ்ரீதர், இலுப்பூர் வருவாய்
கோட்டாட்சியார் தெய்வநாயகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்எம்.மஞ்சுளா, குளத்தூர் வட்டாட்சியர் காமராஜ், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
- தமிழ்நாட்டில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை ஒரு டிரில்லி யன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த, நிலையான வளர்ச்சிக்கான இலக்கு களில் கூட்டுறவு அமைப்புக ளின் பங்கு என்ற பிரதான பொருளில் கொண்டா டப்பட உள்ளது.
- இதற்கு கூட்டுறவு சங்கங் களின் மண்டல இைணப்ப திவாளரும் கூட்டுறவு வார விழாக்குழு தலைவருமான கே.ராேஜந்திரபிரசாத் தலைமை வகித்தார்.
புதுக்கோட்டை
தமிழ்நாட்டில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை ஒரு டிரில்லி யன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த, நிலையான வளர்ச்சிக்கான இலக்கு களில் கூட்டுறவு அமைப்புக ளின் பங்கு என்ற பிரதான பொருளில் கொண்டா டப்பட உள்ளது.
இதற்கு ஏதுவாக புதுக் கோட்டை மாவட்டத்தில் வருகின்ற 7 நாட்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச் சிகள், கருத்தரங்கம், இலவச சிறப்பு முகாம்கள், மரக் கன்று நடுதல்,
கால்நடை சிகிச்சை முகாம், ரத்ததான முகாம், உறுப்பினர் சந்திப்பு கூட்டங் கள் மாணவ-மாணவிக ளுக்கு பரிசு வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிளான விழா நடத்து வது தொடர்பான ஆலோச னைக் கூட்டம் புதுக் கோட்டை மண்ட இணைப்ப திவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு கூட்டுறவு சங்கங் களின் மண்டல இைணப்ப திவாளரும் கூட்டுறவு வார விழாக்குழு தலைவருமான கே.ராேஜந்திரபிரசாத் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் புதுக் கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்ப திவாளரும் செயலாட்சியரும் கூட்டுறவு வாரவிழாக்குழு துணைத்தலைவருமான மு. தனலெட்சுமி மற்றும் வார விழாக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.
- தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநா ளாகும்.
- சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கட மையும் பொறுப்பும் ஆகும்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா விடுத்துள்ள செய்தி குறிப் பில் தெரிவித்துள்ளதா வது:-
தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநா ளாகும். இத்திருநா ளில் சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின் றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அள விலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கிறார்கள்.
சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கட மையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் சுற்றுச் சூழ லுக்கு அதிக மாசு ஏற்படுத் தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவ ளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொ ள்ளப்படுகிறது. என்று கலெக்டர் தெரிவித்துள் ளார்.
- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.
- தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்காக தொடர்ந்து பல நல்லத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனை அதிகாரிகள் உரிய முறையில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திக்கேயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 28 ஊராட்சிகளை சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதி குறைநிறைகளை முன்வைத்து பேசினர். அதற்கு அந்தந்த துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திக்கேயன் பேசுகையில்,
தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்காக தொடர்ந்து பல நல்லத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனை அதிகாரிகள் உரிய முறையில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும், உள்ளாட்சி பிரதிநிதிகளால்தான் மக்களை எளிதில் சந்தித்து அவர்களின் குறைகளை கண்டறிய முடியும். அந்த வகையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக அரசின் பல நல்ல திட்டங்களை மக்களிடையே எடுத்துச் சென்று உதவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் ஒன்றியக்குழு துணை தலைவர் சீனியார் உள்ளிட்ட உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நடிகர் விஷால் நடிக்கும் புதிய திரைபடத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
- அதற்குள் கட்டுப்பாட்டை இழந்த படிப்பிடிப்பு வேன் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்து 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
புதுக்கோட்டை
நடிகர் விஷால் நடிக்கும் புதிய திரைபடத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தூத்துக்குடி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, கிமரசக்கனாபுரம் கிராமத்திற்கு குடிநீர் தொட்டி கட்டி கொடுத்தார்.
இந்நிலையில் காரைக்குடி பகுதியில் அடுத்த கட்ட படிப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படிப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து படப்பிடிப்பு குழுவினர் பல்வேறு குழுக்களாக காரைக்குடி புறப்பட்டு வந்துள்ளனர்.
இதில் படிப்பிடிப்பிற்கு தேவையான ஜெனரேட்டர், மின் விளக்கு உள்ளிட்ட படப்பிடிப்பு உபகரணங்கள் ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று காரைக்குடி நோக்கி வந்துள்ளது. இந்த வேனை திருவண்ணாமலை, சேத்துப்பட்டுவை சேர்ந்த நாதன்(வயது 23) என்பவர் ஓட்டி வந்துள்ளார். வேனில் படப்பிடிப்பு குழுவை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்த மகேஷ்(33), சென்னை சாலி கிராமத்தை சேர்ந்த துரை(40) உள்ளிட்ட 4 பேர் வந்துள்ளனர்.
வேன் திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை, தஞ்சாவூர் பிரிவு ரோடு, ஈபி ஆபிஸ் எதிரே வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. டிரைவர் நாதன் வேனை நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள் கட்டுப்பாட்டை இழந்த படிப்பிடிப்பு வேன் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்து 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருக்கோகர்ணம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையிலான போலீசார் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை போலீசார் சரி செய்தனர்.
படபிடிப்பு உபகரணங்கள் ஏற்றப்பட்ட வேன் என்பதால் பாரம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக வேனை அப்புறப்படுத்த கிரைன் வரவழைக்கப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் வேன் அப்புறப்படுத்தப்பட்டது.
விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் டிரைவர் தூக்கியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.






