என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குவிடுமுறையில் பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்
    • ஓவியங்களை ரசித்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்

    புதுக்கோட்டை

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்தது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்ன வாசல் சுற்றுலா தளத்தில் அதிகளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள சிற்பங்கள், ஓவியங்களை மாணவர்கள் ரசித்து பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். 

    • கந்தர்வகோட்டையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
    • மருத்துவ முகாமில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை, 

    கந்தர்வகோட்டை ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர்.பகுதியில் காய்ச்சல் அறிகுறியுடன் கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் அறிவுறுத்தலின்பேரில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியாளர்கள் கொண்ட குழு கந்தர்வகோட்டைஊராட்சி மன்ற தலைவர்தமிழ்ச்செல்வி முன்னிலையில், டெங்குத்தடுப்பு நடவடிக்கைகள், டயர்களை அகற்றுதல், ஒட்டுமொத்த தூய்மைப்பணி, ஏடீஸ் கொசு அழிக்க புகைமருந்து அடிக்கப்பட்டது.பொதுமக்களுக்கு பொதுசுகாதார விழிப்புணர்வு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மருத்துவ முகாமில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    • நள்ளிரவு ஆராயி மர்மமான முறையில் இறந்தார்.
    • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    புதுக்கோட்டை:

    ஆந்திரா மாநிலம் தருமபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(45).

    பேப்பர் உள்ளிட்ட காகிதங்களை பொறுக்கி தொழில் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி லட்சுமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். முதல் மனைவி மூலம் அவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இந்நிலையில் புதுக்கோட்டைக்கு வந்த வெங்கடேசுக்கு ஆதரவின்றி தர்மம் எடுத்து வந்த ஆராயி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனிடையே நேற்று நள்ளிரவு ஆராயி மர்மமான முறையில் இறந்தார். அவரது உடல் டி.வி.எஸ். கார்னரில் இருந்து ரெயில்வே நிலையம் செல்லும் சாலையில் உள்ள புதிதாக கட்டப்பட்டு நிறைவு பெறாமல் உள்ள கோவில் அருகே புதைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். வெங்கடேஷ் ஆராயியை கொன்று புதைத்தாரா? அல்லது தற்செயலாக இறந்ததால் புதைத்து ள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுக்கோட்டையில் பெண் கொன்று புதைப்பா என்று கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    • ரெயில்வே நிலையம் செல்லும் சாலையில் உடல் புதைப்பு

    புதுக்கோட்டை,

    ஆந்தாரா மாநிலம் தருமபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(45). பேப்பர் உள்ளிட்ட காகிதங்களை பொறுக்கி தொழில் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி லட்சுமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். முதல் மனைவி மூலம் அவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் புதுக்கோட்டைக்கு வந்த வெங்கடேசுக்கு ஆதரவின்றி தர்மம் எடுத்து வந்த ஆராயி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனிடையே நேற்று நள்ளிரவு ஆராயி மர்மமான முறையில் இறந்தார். அவரது உடல் டி.வி.எஸ். கார்னரில் இருந்து ரெயில்வே நிலையம் செல்லும் சாலையில் உள்ள புதிதாக கட்டப்பட்டு நிறைவு பெறாமல் உள்ள கோவில் அருகே புதைக்கப்பட்ட நிலையில் இருந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். வெங்கடேஷ் ஆராயியை கொன்று புதைத்தாரா? அல்லது தற்செயலாக இறந்ததால் புதைத்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுக்கோட்டை அருகே மது போதை தகராறில் கட்டிட தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்
    • தீபாவளி கொண்டாட்டத்தில் விபரீதம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அருகே வடவாளம் கதுவாரிப்பட்டி அம்பாள்புரம் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி(வயது 40) கட்டிட தொழிலாளி. இவர் நேற்று தீபாவளி பண்டியை கொண்டாடினார். இரவு நண்பர்களுடன் சென்ற அவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது வீட்டினர் அக்கம்பக்கத்தில் தேடினர். எனினும் அவரை காணவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை சேகர் என்பவரது வயல் பகுதியில் தலையில் கல்லால் பயங்கரமாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில் மதுபாட்டில்கள் கிடந்தன.

    இதை அந்த பகுதியினர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் எஸ்.ஐ. செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது

    தொடர்ந்து தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கலிய மூர்த்தி தீபாவளி கொண்டாட்டத்தின்போது தனது நண்பர்கள் 4 பேருடன் மது அருந்தியதாக தெரிகிறது.

    அப்போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சேகர், அரங்கன், முருகன் ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட கலியமூர்த்திக்கு சாமியம்மாள் என்ற மனைவியும், யாழினி என்ற மகளும் உள்ளனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கந்தர்வகோட்டை அருகே கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது
    • உதவித் திட்ட அலுவலர் கோவிந்தன் கற்பித்தல் உபகரணங்கைளை வழங்கி பேசினார்

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டார வளமைய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தன்னார்வலர்களுக்கு கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலர் (தொடக்க கல்வி) கோவிந்தன் கற்பித்தல் உபகரணங்கைளை வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார்.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன், புதுக்கோட்டை மாவட்ட இல்லம் தேடிக் கல்வித் திட்ட மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கலையரசன் ஆகியோர் தன்னார்வலர்களை வாழ்த்தி பேசினார்கள்.

    முடிவில் கந்தர்வகோட்டை இல்லம் தேடி கல்வித் திட்ட ஒன்றிய ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா நன்றி கூறினார்.

    • மணமேல்குடி, ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்
    • உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா?, குறைகள் ஏதேனும் உள்ளதா? என நோயாளிகளிடம் கேட்டறிந்தார்

    புதுக்கோட்டை,

    மணமேல்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பற்றாக்குறை உள்ளதாகவும், மருத்துவமனை சுகாதாரமற்று இருப்பதாகவும் மணமேல்குடி வர்த்தக நல சங்கத்தினர் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மணமேல்குடி அரசு மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கு இருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் வர்த்தக நல சங்க நிர்வாகிகளிடம் குறைகள் அனைத்தும் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மணமேல்குடி தாசில்தார் சேக் அப்துல்லா, மணமேல்குடி இன்ஸ்பெக்டர் குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அரசமணி, வர்த்தக சங்க தலைவர் கணேசன், வணிகர் சங்க நிர்வாகி சாமியப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    இதேபோல் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்கு நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா?, குறைகள் ஏதேனும் உள்ளதா? என நோயாளிகளிடமும், போதிய மருத்துவ உபகரணங்கள் உள்ளனவா? என டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார். இந்த ஆய்வில் ஆவுடையார்கோவில் தாசில்தார் மற்றும் மருத்துவத்துறையினர், வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

    • குப்பகுடி ஊராட்சி மூட்டாம்பட்டியில் ௧௦ ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறந்து வைக்கப்பட்டது
    • அமைச்சர் மெய்யநாதன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடி ஊராட்சி மூட்டாம்பட்டி பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் பேரில் புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது.  புதிதாக கட்டப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். இவ்விழாவில்  திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை, திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, சுப்பையா, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    காற்று மாசுபாடு தவிர்த்து, விபத்தில்லா தீபாவளி கொண்டாடபுதுக்கோட்டை ஏ.வி.சி.சி. மழலையர் பள்ளி மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு

    புதுக்கோட்டை,  

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்படும் பட்டாசுகளால் காற்று எவ்வாறு மாசுபடுகிறத. அதனால் விளையும் தீமைகள் யாவை என்பது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கம், புதுக்கோட்டை திலகர் திடல் ஏ.வி.சி.சி. மழலையர் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் மல்லிகாகணேசன் தலைமை வகித்தார்.

    மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தீபாவளி பலகாரம் அடங்கிய பைகளையும், மாசில்லா தீபாவளி கொண்டாட்டம் என்ற பிரசுரங்களையும் பள்ளியின் நிறுவனரும், முன்னாள் ஊரக வளர்ச்சி திட்ட அலுவலருமான ஏவிசிசி கணேசன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    பள்ளி ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், மாசில்லா தீபாவளியை மனதார கொண்டாடுவோம் என்று

    பெற்றோர்கள் முன்னிலையில் ஒவ்வொரு குழந்தையும் ஆர்வத்துடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை பார்வையாளர்களும், பொதுமக்களும் பெரிதும் பாராட்டினர்.

    தீபாவளி பண்டிகையையொட்டிபுதுக்கோட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    புதுக்கோட்டை  

    புதுக்கோட்டை அருகே உள்ள சிறுவாச்சூர் வாரந்தோறும்  ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். மற்ற நாட்களை விட, தீபாவளி, பொங்கல், பக்ரீத், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் ஆடு விற்பனை களைகட்டும். அதன்படி நாளை தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சிக்காக 100க்கும் மேற்பட்ட ஆடுகள் திருச்சி, அரியலூர், கடலூர், தஞ்சாவூர் என பல் வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இச்சந்தை களுக்கு கொண்டு வந்தனர்.  இவற்றை வாங்கி செல்வதற்கு ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.  அவர்கள் போட்டிப்போட்டு வாங்கிதாலும், ஆடுகளின் வரத்து குறைவாக இருந்ததாலும் ஆடுகளின் விலை அதிகரித்தது.  ஒரு நாள் ஆடு விற்பனை ரூ.2 கோடி என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கந்தர்வகோட்டையில்விடுபட்ட பயனாளிகளுக்கு உரிமை தொகை வழங்கும் விழா
    • அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டையில் 2ம்- கட்டமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் சண்முகா திரையரங்க வளாகத்தில் மகளிர் உரிமைத் தொ கைக்கு மேல் முறையீடு செய்தவர்க ளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு மேல் முறையீடு செய்த குடும்ப தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டையை வழங்கி விழா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை, கோட்டாட்சியர் முருகேசன் ,தாசில்தார் ராமசாமி ,தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், தமிழ் அய்யா, நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்தி ரன், ஒன்றிய குழு உறுப்பி னர் திருப்பதி, வைர க்கண்ணு, ஊராட்சி மன்ற தலை வர்கள் தமிழ்ச்செல்வி, ராணி முருகேசன், சிவரஞ்சனி சசிகுமார் ,இளைஞரணி அமைப்பா ளர் கலையரசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் நெல் சாகுபடியில் இலைசுருட்டு புழு தாக்குதல்
    • கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குனர் ஆலோசனை

    புதுக்கோட்டை,  

    தற்பொழுது நிலவும் தட்பவெப்பநிலை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் ஆங்காங்கே காணப்படுகிறது. இதனை விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

    இலைச்சுருட்டு புழுக்கள் நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்துக் கொண்டு அவற்றிலுள்ள பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகளில் வெள்ளை வெள்ளையாகக் காணப்படும். இவ்வாறு பச்சையம் முழுவதும் சுரண்டப்பட்ட நிலையில் பயிர் காணப்படும். இதன் தாக்குதல் வயல் ஓரங்களில் நிழலான பகுதிகளிலும் அதிகமாக தழைச்சத்து யூரியா உரம் இடப்பட்ட பகுதிகளிலும் மிகுந்து காணப்படும். புரட்டாசி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரை தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.

    இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வரப்புகளை புல், புண்டுகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தழைச்சத்தினைப் பரிந்துரை அளவுக்கு மேல் இடாமல், தேவையான தழைச்சத்தினை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இட வேண்டும்.

    விளக்குப்பொறியினை மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒளிரவிட்டுத் தாய் அந்துப்புச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம். முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஏக்கருக்கு இரண்டு சி.சி. அளவு, நடவு செய்த 37, 44 மற்றும் 51ம் நாட்களில் காலை நேரத்தில் வயலில் விட்டு இப்புழுவின் முட்டைக் குவியலை அழிக்கலாம்.

    இலைச்சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்திட ஒரு கூடைத் தவிட்டில் 100 மி.லி. மண்ணெண்ணெய்யைக் கலந்து வயலில் விசிறுதல் வேண்டும். பின்னர், ஏறத்தாழ எட்டடி நீளமுள்ள வைக்கோல் பிரிகயிறு மூலம் வயலின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கொருவர் பிடித்துக்கொண்டு நெற்பயிரின் மேல் நன்கு படுமாறு இழுத்துச்செல்ல வேண்டும்.

    இதனால் நெல்லின் இலைப்பகுதி வைக்கோல் பிரியில் பட்டு நிமிரும்போது மடக்கப்பட்ட இலைப்பகுதி விரிந்துவிடும்.

    இதனால் இப்புழுக்கள் கீழே விழுந்து மண்ணெண்ணெய் கலந்த நீரில் விழுந்து இறந்துவிடும். மேலும், மூன்றடி உயரம் கொண்ட குச்சிகளைப் பறவை இருக்கையாக அமைத்துப் பறவைகளைக் கவர்ந்து அவை தாய்ப் பூச்சிகளைக் பிடித்துண்ண வழிவகை செய்யலாம். இவ்வாறு ஒருங்கிணைந்த முறையில் இப்புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    விவசாயிகள் தங்கள் பயிர்சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் அறிகுறிகள் தென்பட்டால்

    உடன் உழவன் செயலி மூலம் படம் பிடித்து அனுப்பினால் 24 மணி நேரத்திற்குள் தங்களுடைய அலைபேசிக்கு உரிய பரிந்துரை அனுப்பி வைக்கப்படும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திடவும் கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    எனவே விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையில் நெற்பயிரினை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தி டுமாறு வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

    ×