என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கார்த்திகை மாதம் நாளை பிறப்பதை முன்னிட்டு மாலை போடுவதற்காக சரண கோஷத்துடன் அய்யப்ப பக்தர்கள் தயாராகி வருகின்றனர்
    • துளசி மாலை, கருப்பு வேட்டிகள் விற்பனை மும்முரம்

    புதுக்கோட்டை,

    ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளன்று சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை தொடங்கியதையடுத்து, ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள். இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு விரதம் இருந்து இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை  முதல் நாளில் மண்டல பூஜைக்காக சபரிமலைக்குச் செல்பவர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர்.

     புதுக்கோட்டை கீழ ராஜ  வீதிலுள்ள காதி பவனில் அய்யப்ப பக்தர்களின் விரதத்துக்கான பொருட்கள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. துளசி, சந்தனம், மணி

    மாலை ஆகியவை, கோர்க்கப்பட்டு  சுவாமி உருவம் பொறித்த டாலர்கள், வேட்டிகள்   விற்பனைக்கு குவிந்துள்ளன.

    இது குறித்து  காதி பவன் நிர்வாகி ரமேஷ் கூறுகையில், துளசிமாலை ருத்திராட்ச மாலை மணி மாலைகள் பல்வேறு அளவு களிலும் விற்பனைக்கு  வைத்துள்ளோம்.

    மேலும், கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட மாலைகளில் 54 மற்றும் 108 எண்ணிக்கையில் மணிகள் இருக்கும்.

    இதேபோன்று அய்யப்பன், முருகன்,உருவ டாலர்கள் மும்பை யிலிருந்து வரவழைக்கப்பட்டு உள்ளன. மேலும் சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு,  நீலம், காவி  போன்ற வண்ணங்களில் வேட்டிகளு ம்  இருக்கின்றன. அய்யப்ப பக்தர்களும், பழனிக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களும் இவற்றை வாங்கி செல்கின்றனர் என்றார்.

    அய்யப்ப பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் மேற்கொண்டு, மகர ஜோதியைக் காண பலரும் செல்வர். அதுவரை தினமும் காலை,  மாலை வேளை களில் குளித்து சரண கோஷம் சொல்லி, ஐயப்பனை வணங்கி விரதம் மேற்கொள்கிறார்கள். சபரிமலைக்கு தமிழகத்தில் இருந்துதான் அதிகமான பக்தர்கள் செல்கின்றனர். இதனால் தமிழகத்தில் நாளை முதல் சரண கோஷம் ஒலிக்க தொடங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

    பொதுவாக சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19-ந் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிவார்கள். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிவார்கள்.

    துளசி மணி மாலை என்றால் 108 கொண்டதாகவோ, ருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிவார்கள். குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிகின்றனர். குருசாமி இல்லாவிட்டால் கோவிலில் சாமி பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து அய்யப்பனையே குருவாக நினைத்து மாலை அணிவார்கள். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    • கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்குரூ.3 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது
    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

     கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வை யிட்டு ஆய்வு செ ய்தார். மருத்துவமனையின் செயல்பாடுகளை பற்றியும் வசதிகளை பற்றியும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோச னைகளை வழங்கி னார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கறம்பக்குடி அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்து 36 படுக்கைகள் கொண்ட தாலுக்கா மருத்து வமனையாக கடந்த 2015 -ம் ஆண்டு மேம்ப டுத்தப்ப ட்டு செயல்ப டுத்த ப்பட்டு வருகிறது. மருத்து வம னையில் படுக்கை வசதிக்கு தான் கூடுதல் கட்டிடம் கட்ட கோரிக்கை வைக்க ப்பட்டது.

    அதன் அடிப்படையில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயும் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2 கோடியும் பெறப்பட்டு 50 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிட வசதிகள் மருத்து வமனைக்கு ஏற்படுத்தி தரநடவடிக்கை மேற்கொள்ளப்படும் மருத்துவர்கள் பணியா ளர்கள் காலிபணியி டங்க ளை நிரப்புவதற்கும் அவர்களு க்கான தங்கும் இடம் கட்டுவதற்கும் நிதிநி லை அறிக்கையில் உரிய நட வடிக்கை மேற்கொ ள்ள ப்படும்.

    மருத்துவமனையில் பிணவறை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய அறிவுறுத்த ப்பட்டுள்ளது. எக்ஸ்ரே வசதி ஸ்கேன் கருவி வழங்குவதற்கு நட வடிக்கை மேற்கொ ள்ளப்படும்.

    குறிப்பாக மருத்துவ மனையில் நிரந்தர பணியி டங்களை மூன்று மாதத்தி ற்குள் ஏற்படுத்தித் தந்து அரசாணை வெளியி டப்படும். இதன் மூலம் கரம்பக்குடி பகுதி மக்களின் நீண்ட நாள் மருத்துவ வசதி கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று அவர் கூறினார். இந்த ஆய்வி ன்போது மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கந்தர்வ கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சின்னத்து ரை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே கே செல்ல பாண்டியன் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் அறந்தாங்கி மருத்துவத் துறை துணை இயக்குனர் நமச்சிவாயன் புதுக்கோட்டை மருத்துவத் துறை துணை இயக்குனர் ராம் கணேஷ் கரம்பக்குடி வட்டார மருத்துவ அலுவலர் பஜ்ருல் அகமது கரம்பக்குடி பேரூராட்சி தலைவரும் திமுக நகர செயலாளருமான முருகேசன் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பாஞ்சாலன் ஒன்றிய குழு தலைவர் மாலா ராஜேந்திர துரை ஆத்மா சேர்மன் முத்துகிருஷ்ணன் மற்றும் வருவாய் துறை மருத்துவத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கந்தர்வகோட்டை பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்

    கந்தர்வகோட்டை,

    ஆதனக்கோட்டை புதுப்பட்டி பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

    இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆதரக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மண விடுதி, சோத்துப் பாளை, சொக்கநாத பட்டி, மாந்தான் குடி, காட்டு நாவல்., மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம் விடுதி, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான் பட்டி, மோகனூர், பகட்டுவான் பட்டி. பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி வெள்ளாள விடுதி, சொந்தம் பட்டி, ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.

    இந்த தகவலை கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    • நேரு பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை பள்ளியில் புத்தகமில்லா தினம் கொண்டாடப்பட்டது
    • நடனம், பாடல், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளால் குழந்தைகள் மகிழ்ச்சி

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா புத்தகமில்லா தினமாக கொண்டாடப்பட்டது.

    குழந்தைகளின் மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருக்கும் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

    பள்ளிக்கு வருகை தந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். குழந்தைகளைக் கொண்டாடுகின்ற இந்த நாளில் மாணவச் செல்வங்கள் வண்ண உடையணிந்து பள்ளி வளாகம் முழுதும் மகிழ்ச்சியை விதைத்துச் சென்றனர்.

    புத்தகமில்லா தினம் என்பதால் மாணவர்கள் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், எதுவுமில்லாமல் கைகளை வீசியபபடி பள்ளிக்கு வந்தனர். பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் ஆசிரியர்கள் குழுக்களாகப் பிரிந்து பாடல், நாடகம், கண்ணைக் கவரும் வகையில் நடனம், நகைச்சுவை நிகழ்சிகள், கதைகள் மற்றும் விளையாட்டுகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கொளரி, அபிராமசுந்தரி, வரவெலட்சுமி, கோபமதிப்பிள்ளை மற்றும் உதயகுமார், காசாவயல்கண்ணன், கணியன் செல்வராஜ் மற்றும் ஏராளமான அசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை ஆசிரியை சிவதர்சினி செய்திருந்தார்.

    புத்தகமில்லா தினம் கொண்டாடிய போது எடுத்தப்படம்.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
    • மழை நின்ற பின்னர் மீண்டும் கடலுக்கு செல்ல மீனவர்களூக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது

    புதுக்கோட்டை,

    வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியான ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் இன்று (புதன்கிழமை) முதல் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மழை நின்ற பின்னர் மீண்டும் கடலுக்கு செல்ல மீனவர்களூக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • புதுக்கோட்டையில் கோவிலுக்கு சொந்தமான ஜல்லிகட்டு காளை உயிரிழந்தது
    • கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் வடமலைநாடு தெம்மாவூர் முத்து மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமாக ஜல்லிக்கட்டு காளை இருந்தது.

    இந்த காளை புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி திருச்சி , தஞ்சா வூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடு பிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் பல பரிசுகளை வென்றுள்ளது.

    இந்த காளை மாடு பிடி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்து வந்தது.

    இந்நிலையில் அந்த காளைக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்கு றைவு ஏற்பட்டது. கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காளை உயிரிழந்தது.

    இந்த காளையின் இறப்பு அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து கோவிலுக்கு கிராம மக்கள் மட்டுமின்றி, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஒன்று திரண்டு வந்து காளையின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி னர். பின்னர் காளையின் உடல் லோடு வேனில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தாரை தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து கிராமம் முழுவதும் காளையின் இறுதி ஊர்வலம் நடை பெற்றது. இதில் அந்த கிராமத்தினர் ஏராளமா னவர்கள் கண்ணீருடன் கலந்து கொண்டனர். பின்னர் காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    • புதுக்கோட்டை அருகே மர்மமாக இறந்த தொழிலாளி உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடைபெற்றது
    • தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அருகே குன்றாண்டார் கோவிலில் சந்தேகத்தின் பேரில் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் இறந்து புதைக்கப்பட்ட மகனின் சடலத்தை போலீசார் தோண்டி எடுத்தனர்.

    புதுக்கோட்டை அருகே குன்றாண்டார் கோவிலை சேர்ந்த சங்கிலி முத்து என்பவரின் மகன் அறிவழகன்(வயது 36). கூலித் தொழிலாளரான இவர், கடந்த நவம்பர் 10-ந்தேதி உயிரிழந்தார். உறவினர்கள் முன்னிலை யில் அங்குள்ள மாயா னத்தில் அவரின் உடல் புதைக்கப்பட்டது. இந்நிலை யில் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அறிவழகனின் தாய் சாந்தி உடையாளிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் கொளத்தூர் வருவாய் துறையினர் முன்னிலையில் அறிவழகனின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர், உடல் மீண்டும் உறவினர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அறிவழகனின் மரணம் குறித்த விபரங்கள் தெரிய வரும் என உடையாளிபட்டி போலீசார் தெரிவித்தனர்.

    • காளைக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • தாரை தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து கிராமம் முழுவதும் காளையின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வடமலைநாடு தெம்மாவூர் முத்து மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமாக ஜல்லிக்கட்டு காளை இருந்தது.

    இந்த காளை புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் பல பரிசுகளை வென்றுள்ளது. இந்த காளை மாடுபிடி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்து வந்தது.

    உயிரிழந்த ஜல்லிகட்டு காளை 

    உயிரிழந்த ஜல்லிகட்டு காளை 

    இந்நிலையில் அந்த காளைக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காளை உயிரிழந்தது. இந்த காளையின் இறப்பு அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து கோவிலுக்கு கிராம மக்கள் மட்டுமின்றி, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஒன்று திரண்டு வந்து காளையின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் காளையின் உடல் லோடு வேனில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தாரை தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து கிராமம் முழுவதும் காளையின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் அந்த கிராமத்தினர் ஏராளமானவர்கள் கண்ணீருடன் கலந்து கொண்டனர். பின்னர் காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

    • லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர்.
    • புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 6-வது முறையாக வழக்கு விசாரணைக்கு வந்தது.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர் சி.விஜயபாஸ்கர். தற்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்தாக புகார் எழுந்தது.

    அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அப்போது விஜயபாஸ்கர் தொடர்புடைய 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

    இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த மே மாதம் 210 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    இதுவரை 5 முறை இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில் 3 முறை விஜயபாஸ்கரும் ஒருமுறை அவரது மனைவி ரம்யாவும் 2 முறை அவர்களது வக்கீல்களும் விசாரணைக்கு ஆஜராகினர்.

    6-வது முறையாக இந்த வழக்கு இன்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கரும் அவரது மனைவி ரம்யாவும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வக்கீல்கள் ஆஜரான நிலையில் இந்த வழக்கை அடுத்த மாதம்(டிசம்பர்) 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவு பிறப்பித்தார்.

    • பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    • மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    புதுக்கோட்டை

     புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று பள்ளி முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

    பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வங்கக்கடலில் பலத்த காற்று வீசும். இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்
    • 18-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது

    விராலிமலை,

    தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலும் ஒன்றாகும்.இங்கு அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்து அஷ்டமா சித்தி வழங்கி திருப்புகழ் பாடச் செய்த தலமாக விளங்கி வருகிறது. 

    திருவண்ணாமலைக்கு ஈடாக ஏராளமான ஞான சித்தர்கள் தவம் செய்த மலை, திருவாரூர் தட்சிணா மூர்த்தி அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம், ஜெனகர், செனந்தர், செனாதனர், செனக்குமாரர் நால்வருக்கும் தியானம் செய்த போது முருகனே தோன்றி அருள் தந்த திருத்தலம் என்ற பல்வேறு சிறப்புகளை கொண்டது இந்த கோவில்.

    அருணகிரிநாதரை முருகன் விராலிமலைக்கு வரச் சொல்லியதால் இங்கு அருணகிரி நாதர் வந்துள்ளார். வயலூரிலிருந்து கிளம்பிய அருணகிரிநாதர் முருகப்பெருமான் சொன்ன விராலிமலை எங்கிருக்கிறது என்று வழி தெரியாமல் தவிக்கவே வேடன் ரூபத்தில் முருகப்பெருமான் வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி அழைத்து வந்தாராம்.

    இங்கு பலகாலம் தங்கியிருந்த அருணகிரி நாதர் இத்தலத்து முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளது இதன் பெருமைக்கு சான்று. மலைமேல் உள்ள சுப்பிமணியசுவாமி 6 முகங்களுடன் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்லித கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா, தை திருவிழா, கந்தசஷ்டி திருவிழா, பங்குனி உத்திர திருவிழா உட்பட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

    இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. முன்னதாக, காலையில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.

    அதனை தொடர்ந்து சுவாமி முன்பு உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியர்கள் ஓம்,வேல், சேவல் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றி வைத்து ரக்ஷாபந்தனம் என்ற காப்பு கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு தரிசனம் பெற்று காப்பு கட்டி விரதத்தை தொடர்ந்தனர்.

    அதனை தொடர்ந்து தினமும்  காலையில் கேடயத்திலும் மற்றும் மாலையில் நாகம், பூதம் யானை, சிம்மம்  உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சுவாமியின் திருவீதி உலாநடைபெறும்.

    வருகிற 16-ந் தேதி கஜமுக சூரன், 17-ந்தேதி சிம்மமுக சூரன் முருகனுடன் சூரன் போர் புரியும் நிகழ்வும் நடக்கிறது. தொடர்ந்து விழாவின் முக்திய நிகழ்ச்சியாக 18-ந் தேதி காலை பானுகோபன், மாலை 6 மணிக்கு சூரபத்பநாபன் வேடத்திலும் வந்து முருகனுடன் போர் புரியும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகிறது.

    சூரனை வதம் செய்த பின் முருகன் தங்க கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்திறார். இதையடுத்து 19-ந் தேதி மலையில் உள்ள முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுதிறது. தொடர்ந்து 20-ந்தேதி திருக்கல்யாண ஊர்வலமும், 21-ந் தேதி ஏகாந்த சேவையுடன் கந்த சஷ்டி விமா நிறைவடைகிறது விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், சிவாச்சாரியார்கள், மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருதின்றனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முத்தமிழ் தேர் புதுக்கோட்டைக்கு வருகை
    • அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வரவேற்றனர்

    புதுக்கோட்டை, 

    கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 'முத்தமிழ்த்தேர்" என்ற அலங்கார ஊர்தி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்தது. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் முத்தமிழ்தேரை வரவேற்று, உள்ளே வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இந்த அலங்கர ஊர்தியானது திருமயம் வட்டம், லேனாவிளக்கு மற்றும் புதுக்கோட்டை நகராட்சி, அண்ணாசிலை ஆகிய பகுதிகளில், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்நிகழ்வுகளில், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர்செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், முன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன், தாசில்தார் கவியரசன், நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, மாவட்ட சமூகநல அலுவலர் கோகு லப்பிரியா, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயல ட்சுமிதமிழ்ச்செல்வன், மருத்துவரணி அமைப்பாளர் முத்துகருப்பன், இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் ராமகிருஷ்ணன், நகர் மன்ற உறுப்பினர் மதியழகன், பழனிவேல், வர்த்தக அணி துணை த்தலைவர் ஆதிமூலம், த.சந்திரசேகரன், சாத்தையா,

    ஊராட்சி மன்ற தலைவர் கள், திருமயம் சிக்கந்தர் , குழிபிறை அழகப்பன், பெருங்களுர் சரண்யா ஜெய்சங்கர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×