search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலுக்கு சொந்தமானஜல்லிகட்டு காளை உயிரிழப்பு
    X

    கோவிலுக்கு சொந்தமானஜல்லிகட்டு காளை உயிரிழப்பு

    • புதுக்கோட்டையில் கோவிலுக்கு சொந்தமான ஜல்லிகட்டு காளை உயிரிழந்தது
    • கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் வடமலைநாடு தெம்மாவூர் முத்து மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமாக ஜல்லிக்கட்டு காளை இருந்தது.

    இந்த காளை புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி திருச்சி , தஞ்சா வூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடு பிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் பல பரிசுகளை வென்றுள்ளது.

    இந்த காளை மாடு பிடி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்து வந்தது.

    இந்நிலையில் அந்த காளைக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்கு றைவு ஏற்பட்டது. கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காளை உயிரிழந்தது.

    இந்த காளையின் இறப்பு அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து கோவிலுக்கு கிராம மக்கள் மட்டுமின்றி, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஒன்று திரண்டு வந்து காளையின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி னர். பின்னர் காளையின் உடல் லோடு வேனில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தாரை தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து கிராமம் முழுவதும் காளையின் இறுதி ஊர்வலம் நடை பெற்றது. இதில் அந்த கிராமத்தினர் ஏராளமா னவர்கள் கண்ணீருடன் கலந்து கொண்டனர். பின்னர் காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    Next Story
    ×