முத்தமிழ் தேர் புதுக்கோட்டைக்கு வருகை

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முத்தமிழ் தேர் புதுக்கோட்டைக்கு வருகை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வரவேற்றனர்
முத்தமிழ் தேர் புதுக்கோட்டைக்கு வருகை
Published on

புதுக்கோட்டை, 

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 'முத்தமிழ்த்தேர்" என்ற அலங்கார ஊர்தி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்தது. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் முத்தமிழ்தேரை வரவேற்று, உள்ளே வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த அலங்கர ஊர்தியானது திருமயம் வட்டம், லேனாவிளக்கு மற்றும் புதுக்கோட்டை நகராட்சி, அண்ணாசிலை ஆகிய பகுதிகளில், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்நிகழ்வுகளில், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர்செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், முன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன், தாசில்தார் கவியரசன், நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, மாவட்ட சமூகநல அலுவலர் கோகு லப்பிரியா, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயல ட்சுமிதமிழ்ச்செல்வன், மருத்துவரணி அமைப்பாளர் முத்துகருப்பன், இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் ராமகிருஷ்ணன், நகர் மன்ற உறுப்பினர் மதியழகன், பழனிவேல், வர்த்தக அணி துணை த்தலைவர் ஆதிமூலம், த.சந்திரசேகரன், சாத்தையா,

ஊராட்சி மன்ற தலைவர் கள், திருமயம் சிக்கந்தர் , குழிபிறை அழகப்பன், பெருங்களுர் சரண்யா ஜெய்சங்கர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com