மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை மழை நின்ற பின்னர் மீண்டும் கடலுக்கு செல்ல மீனவர்களூக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on

புதுக்கோட்டை,

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியான ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இன்று (புதன்கிழமை) முதல் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மழை நின்ற பின்னர் மீண்டும் கடலுக்கு செல்ல மீனவர்களூக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com