search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் புத்தகமில்லா தின கொண்டாட்டம்
    X

    பள்ளியில் புத்தகமில்லா தின கொண்டாட்டம்

    • நேரு பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை பள்ளியில் புத்தகமில்லா தினம் கொண்டாடப்பட்டது
    • நடனம், பாடல், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளால் குழந்தைகள் மகிழ்ச்சி

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா புத்தகமில்லா தினமாக கொண்டாடப்பட்டது.

    குழந்தைகளின் மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருக்கும் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

    பள்ளிக்கு வருகை தந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். குழந்தைகளைக் கொண்டாடுகின்ற இந்த நாளில் மாணவச் செல்வங்கள் வண்ண உடையணிந்து பள்ளி வளாகம் முழுதும் மகிழ்ச்சியை விதைத்துச் சென்றனர்.

    புத்தகமில்லா தினம் என்பதால் மாணவர்கள் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், எதுவுமில்லாமல் கைகளை வீசியபபடி பள்ளிக்கு வந்தனர். பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் ஆசிரியர்கள் குழுக்களாகப் பிரிந்து பாடல், நாடகம், கண்ணைக் கவரும் வகையில் நடனம், நகைச்சுவை நிகழ்சிகள், கதைகள் மற்றும் விளையாட்டுகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கொளரி, அபிராமசுந்தரி, வரவெலட்சுமி, கோபமதிப்பிள்ளை மற்றும் உதயகுமார், காசாவயல்கண்ணன், கணியன் செல்வராஜ் மற்றும் ஏராளமான அசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை ஆசிரியை சிவதர்சினி செய்திருந்தார்.

    புத்தகமில்லா தினம் கொண்டாடிய போது எடுத்தப்படம்.

    Next Story
    ×