தொழிலாளி உடல் தோண்டி எடுத்து பரிசோதனை

புதுக்கோட்டை அருகே மர்மமாக இறந்த தொழிலாளி உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடைபெற்றதுதாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை
தொழிலாளி உடல் தோண்டி எடுத்து பரிசோதனை
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே குன்றாண்டார் கோவிலில் சந்தேகத்தின் பேரில் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் இறந்து புதைக்கப்பட்ட மகனின் சடலத்தை போலீசார் தோண்டி எடுத்தனர்.

புதுக்கோட்டை அருகே குன்றாண்டார் கோவிலை சேர்ந்த சங்கிலி முத்து என்பவரின் மகன் அறிவழகன்(வயது 36). கூலித் தொழிலாளரான இவர், கடந்த நவம்பர் 10-ந்தேதி உயிரிழந்தார். உறவினர்கள் முன்னிலை யில் அங்குள்ள மாயா னத்தில் அவரின் உடல் புதைக்கப்பட்டது. இந்நிலை யில் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அறிவழகனின் தாய் சாந்தி உடையாளிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் கொளத்தூர் வருவாய் துறையினர் முன்னிலையில் அறிவழகனின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர், உடல் மீண்டும் உறவினர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அறிவழகனின் மரணம் குறித்த விபரங்கள் தெரிய வரும் என உடையாளிபட்டி போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com