search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரண கோஷத்துடன் மாலை அணிய தயாராகும் அய்யப்ப பக்தர்கள்
    X

    சரண கோஷத்துடன் மாலை அணிய தயாராகும் அய்யப்ப பக்தர்கள்

    • கார்த்திகை மாதம் நாளை பிறப்பதை முன்னிட்டு மாலை போடுவதற்காக சரண கோஷத்துடன் அய்யப்ப பக்தர்கள் தயாராகி வருகின்றனர்
    • துளசி மாலை, கருப்பு வேட்டிகள் விற்பனை மும்முரம்

    புதுக்கோட்டை,

    ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளன்று சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை தொடங்கியதையடுத்து, ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள். இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு விரதம் இருந்து இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மண்டல பூஜைக்காக சபரிமலைக்குச் செல்பவர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர்.

    புதுக்கோட்டை கீழ ராஜ வீதிலுள்ள காதி பவனில் அய்யப்ப பக்தர்களின் விரதத்துக்கான பொருட்கள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. துளசி, சந்தனம், மணி

    மாலை ஆகியவை, கோர்க்கப்பட்டு சுவாமி உருவம் பொறித்த டாலர்கள், வேட்டிகள் விற்பனைக்கு குவிந்துள்ளன.

    இது குறித்து காதி பவன் நிர்வாகி ரமேஷ் கூறுகையில், துளசிமாலை ருத்திராட்ச மாலை மணி மாலைகள் பல்வேறு அளவு களிலும் விற்பனைக்கு வைத்துள்ளோம்.

    மேலும், கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட மாலைகளில் 54 மற்றும் 108 எண்ணிக்கையில் மணிகள் இருக்கும்.

    இதேபோன்று அய்யப்பன், முருகன்,உருவ டாலர்கள் மும்பை யிலிருந்து வரவழைக்கப்பட்டு உள்ளன. மேலும் சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு, நீலம், காவி போன்ற வண்ணங்களில் வேட்டிகளு ம் இருக்கின்றன. அய்யப்ப பக்தர்களும், பழனிக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களும் இவற்றை வாங்கி செல்கின்றனர் என்றார்.

    அய்யப்ப பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் மேற்கொண்டு, மகர ஜோதியைக் காண பலரும் செல்வர். அதுவரை தினமும் காலை, மாலை வேளை களில் குளித்து சரண கோஷம் சொல்லி, ஐயப்பனை வணங்கி விரதம் மேற்கொள்கிறார்கள். சபரிமலைக்கு தமிழகத்தில் இருந்துதான் அதிகமான பக்தர்கள் செல்கின்றனர். இதனால் தமிழகத்தில் நாளை முதல் சரண கோஷம் ஒலிக்க தொடங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

    பொதுவாக சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19-ந் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிவார்கள். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிவார்கள்.

    துளசி மணி மாலை என்றால் 108 கொண்டதாகவோ, ருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிவார்கள். குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிகின்றனர். குருசாமி இல்லாவிட்டால் கோவிலில் சாமி பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து அய்யப்பனையே குருவாக நினைத்து மாலை அணிவார்கள். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    Next Story
    ×