search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Appeals"

    • தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநா ளாகும்.
    • சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கட மையும் பொறுப்பும் ஆகும்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா விடுத்துள்ள செய்தி குறிப் பில் தெரிவித்துள்ளதா வது:-

    தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநா ளாகும். இத்திருநா ளில் சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

    அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின் றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அள விலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கிறார்கள்.

    சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கட மையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் சுற்றுச் சூழ லுக்கு அதிக மாசு ஏற்படுத் தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவ ளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொ ள்ளப்படுகிறது. என்று கலெக்டர் தெரிவித்துள் ளார்.

    • சிறப்பு முகாம்கள் வருகிற 4 மற்றும் 5-ந் தேதியும், 18 மற்றும் 19-ந் தேதியும் நடைபெறும்.
    • வாக்குச்சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடி நிலைமுகவர்களும் தனிகவனம் செலுத்த வேண்டும்.

    கோவை,

    வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியானவர்களை சேர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்

    எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் வருகிற 4 மற்றும் 5-ந் தேதியும், 18 மற்றும் 19-ந் தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    முக்கியத்துவம் வாய்ந்த இந்த முகாம்களில் கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய நகர பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளை கழக செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடி நிலைமுகவர்களும் தனிகவனம் செலுத்த வேண்டும்.

    18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போது உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தம் செய்வதற்கும், தேவையான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அதனை சம்பந்தப்பட்ட முகாம்களில், வழங்கி இந்த பணியை சிறப்பாக செய்து முடித்து தகவல்களை கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3, 6 மாதங்களில் 60 லட்ச மதிப்பிலான 180 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உள்ளனர்.
    • சைபர் கிரைம் குற்றவாளிகள் செல்போன் மூலம் வலைவீசி வருகின்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் மூலம் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீஸ் எஸ்.பி பிரபாகர் கலந்து கொண்டு போலீசார் மீட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படை த்தார்.

    இதனை தொடர்ந்து போலீஸ் எஸ்.பி பிரபாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3, 6 மாதங்களில் 60 லட்ச மதிப்பிலான 180 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உள்ளனர். இதே போல் ஒரு கோடியே 23 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது அதன் ஒரு பகுதியாக இன்று 80 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து உள்ளோம்.

    சைபர் கிரைம் குற்றவாளிகள் செல்போன் மூலம் வலைவீசி வருகின்றனர். அவர்கள் அதிக வட்டி தருவதாகவும், பணத்தை இரட்டிப்பு செய்து கொடுப்ப தாகவும் ஆசைவார்த்தைகள் கூறி வருகின்றனர்.

    எனவே பொதுமக்கள் யாரும் சைபர்கிரைம் குற்றவாளிகளிடம் ஏமாறவேண்டாம். சைபர் கிரைம் சார்ந்த கு்ற்றங்களில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் கோவையில் மட்டும் 62,659 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
    • கோவை மாவட்டத்தில் 5817 விவசாயிகள் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் மட்டும் 62,659 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ள வங்கி கணக்கில் மட்டும் தான் பணம் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. கோவை மாவட்டத்தில் 5817 விவசாயிகள் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. எனவே அவர்கள் உடனடியாக வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும்.

    இதற்காக அவர்கள் சேமிப்பு கணக்கு வைத்து உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று ஆதாரை இணைக்கலாம். வங்கியில் கணக்கு இல்லாத விவசாயிகள் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலம் ஜீரோ பேலன்ஸ் அடிப்படையில் கணக்கு தொடங்கலாம். அப்போது அவர்களின் ஆதார் எண் 48 மணி நேரத்துக்குள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு விடும்.

    இதுகுறித்து மேலும் விவரங்கள் பெற விரும்புவோர் அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் வருகிற ஜூன் 3-வது தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • கலைஞர் புகைப்படத்திற்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு. முபாரக் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் 100-வது பிறந்தநாள் வருகிற ஜூன் 3-வது தேதி நடக்க உள்ளது.

    இதனை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வர் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும், கழக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்திலும் அறிவுரை வழங்கி உள்ளனர்.

    திராவிட இயக்கத்தை கண் இமைப்போல பாதுகாத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக கடைசி மூச்சு வரை பாடுபட்ட மகத்தான தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா, கழக தோழர்கள் வெகு சிறப்புடன் கொண்டாட வேண்டிய பொன்நாள். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்து உள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து நகர-ஒன்றிய-பேரூர் –ஊராட்சி பகுதிகளிலும் கல்வெட்டுகள் அமைத்து, கட்சிக்கொடியேற்றறி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

    பொது இடங்களில் கலைஞர் புகைப்படத்தை அலங்கரித்து வைத்து, கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    ஜூன் 3-ந்தேதி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் காணும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அதில் நகர-ஒன்றிய-பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

    கலைஞருக்கு மலர் அஞ்சலி செய்வதோடு, அன்னாரின் அடிச்சுவட்டை பின்பற்றி, கழகத்தை காத்து வரும் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழகம் உயர உழைப்போம் என்ற உறுதி மொழியை நாம் அனைவரும் ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

    • மத்திய அரசு திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என பா.ஜ.க. கட்சி மாநில நிர்வாகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கான மானியம் ரூ.50 ஆயிரம் வழங்குவது குறித்து எடுத்துரைத்தார்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    பா.ஜ.க. கட்சி மாநில நிர்வாகி வேலூர் இப்ராஹிம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    நேற்று ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி பகுதிக்கு வருகை தந்தார். அவருக்கு ஆர்.எஸ்.மங்கலம் பா.ஜ.க. கட்சியின் ஒன்றிய தலைவர் நரசிங்கம் தலைமையில் சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் அஜ்மல்கான், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. அணியின் முன்னாள் பொதுச்செயலாளர் சசி கனி, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய பொதுச்செயலாளர்கள் செந்தில்குமார், கிஷோர், ஒன்றிய பொருளாளர் பாண்டித்துரை ஆகியோர் முன்னிலையில் திருப்பாலைக்குடி பழங்கோட்டை பஸ்நிறுத்தம் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து திருப்பாலைக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சென்று ஊராட்சி மன்ற தலைவர் முகமது உமர் பாரூக் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களை சந்தித்து பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டம் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை பிரிவினருக்கான திட்டம், மகளிர்குழு தொழில் தொடங்குவதற்கான மானியத்துடன் கூடிய கடன் திட்டம் குறித்து விளக்கினார்.சிறுபான்மையினருக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கான மானியம் ரூ.50 ஆயிரம் வழங்குவது குறித்து எடுத்துரைத்தார்.

    இதனைத் தொடர்ந்து திருப்பாலைக்குடி பாண்டி கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருப்பாலைக்குடி மாரியம்மன்கோவில் காந்திநகர் கிராம தலைவர் தமிழ்கண்ணன், செயலாளர் ஆதிரைமன்னன் ஆகியோர் தலைமையில் மீனவர்சங்கம் சார்பாக வேலூர் இப்ராஹிம்க்கு பரிவட்டம் கட்டப்பட்டது.

    பின்னர் அ.தி.மு.க. நகர செயலாளர் குட்லக் ரஹ்மத்துல்லாவை சந்தித்து மத்திய அரசு முஸ்லீம் சிறுபான்மையினருக்கான கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து இத்திட்டங்கள் குறித்து முஸ்லிம் மக்களிடையே எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சசிகுமார், ஆர்.எஸ்.மங்கலம் இளைஞரணி தலைவர் தம்பிதுரை, ஊடகப்பிரிவு செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×