search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி அருகே கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X

    பள்ளி அருகே கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி அருகே கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
    • விற்பணை செய்வது கண்டறி யப்ப ட்டால் அக்கடை உரிமை யாளர்மீது தக்க நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்.

    புதுக்கோட்டை,

    மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா ஆணை யின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளின் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து ஆய்வு குழு மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மேலும் இதுகுறித்து பள்ளி மாணவ ர்களிடையே விழிப்புணர்வு வழ ங்கிடவும் அறிவுறுத்த ப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, ஆலயவயல், நகரப்பட்டி ஆகிய பகுதிகளில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவல ர்வசந்தகுமார் , உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரவீன்கு மார்ஆகியோர்அடங்கிய ஆய்வுக்குழு மூலம் 6 கடைகளில் ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது. இதில் ஆலவயல் அரசு மேல்நிலை ப்பள்ளி அருகில் அமைந்து ள்ள மளிகைக் கடையில் புகையிலை பொருட்கள் விற்பணை செய்தது கண்டறி யப்பட்டது. அக்கடை உரிமையாளருக்கு ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு புகையிலைப் பொ ருட்கள் கைப்பற்ற ப்பட்டது.

    மேலும் இதுபோன்று புதுக்கோட்டை மாவ ட்டத்தில் பள்ளி அருகில் அமைந்துள்ள கடைகளில் தொடர்ந்து இக்குழு ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டு புகையிலைப் பொருட்கள் விற்பணை செய்வது கண்டறி யப்ப ட்டால் அக்கடை உரிமை யாளர்மீது தக்க நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்.

    Next Story
    ×