என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர் சாவில் திடீர் திருப்பம்  -ஜாதி ரீதியாக சக மாணவர்கள் திட்டியதால் வேதனையில் தற்கொலை
    X

    மாணவர் சாவில் திடீர் திருப்பம் -ஜாதி ரீதியாக சக மாணவர்கள் திட்டியதால் வேதனையில் தற்கொலை

    • இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட் டில் யாரும் இல்லாத நேரத் தில் விஷ்ணுகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • . அதில் ஜாதி ரீதியாக என் மகனை சக மாணவர்கள் துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்துள்ளார். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட் டம், கீரனூர் அருகே குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் உள்ள கொப்பம் பட்டி ஊராட் சியை சேர்ந்தவர் வீரமுத்து. மகன் வஷ்ணுகுமார் (வயது 16). இவர் கீரனூர் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட் டில் யாரும் இல்லாத நேரத் தில் விஷ்ணுகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இச்சம்பவம் குறித்து அறிந்த உடையாளிபட்டி போலீசார் விரைந்து வந்து விஷ்ணுகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பிவைத்த னர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாணவரின் இறுதி சடங்குகள் நடைபெற்றன.

    காதல் தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் விஷ்ணு குமாரின் பெற்றோர் தாசில்தா தாரிடம் ஒரு மனு அளித்தனர். அதில் ஜாதி ரீதியாக என் மகனை சக மாணவர்கள் துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்துள்ளார். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    இதனை தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரை ஜாதி ரீதியாக துன்புறுத்திய மாணவர்கள் யார்? என்று விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×