என் மலர்
புதுக்கோட்டை
- அனுமதியின்றி மது பானங்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து 22 மது பாட்டிகள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி செம்பட்டிவிடுதி ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மது பானங்கள் விற்க படுவதாக வந்த தகவலின் பேரில் ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை மற்றும் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்ேபாது ஆலங்குடி காவல் நிலையத்துக்குட்பட்ட அரசடிப்பட்டி மதுபான கடை அருகே திருவரங்குளம் இம்மனாம்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 49) மற்றும் ஆண்டிகுளம் மதுபனை கடை அருகே கறம்பக்குடி தாலுகா கருப்பட்டிப்பட்டி இந்திரா நகரைச்சேர்ந்த சதீஷ்குமார் (30)ஆகிய இருவரும் அனுமதியின்றி மது பாட்டில் விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து10 மது பாட்டிகள்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் செம்பட்டிவிடுதி காவல் நிலையத்துக்குட்பட்ட மாங்கோட்டை மேலப்பட்டியைச்சேர்ந்த ரெங்கசாமி (வயது 34) என்பவரை அனுமதியின்றி மதுபானம் விற்ற வழக்கில் கைது செய்தனர். இவரிடமிருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னி பாத் விளக்க பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமை தாங்கினார்.
- பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி500க்கும் மேற்பட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர்.
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அக்னி பாத் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னி பாத் விளக்க பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமை தாங்கினார்.
முன்னதாக அனைவரையும் ஒன்றிய தலைவர் டி ஆர் தவமணி வரவேற்றார்.அக்னி பாத் விளக்க பொதுக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பொதுக் கூட்டத்தில் விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் ஏற்பாட்டில் விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி500க்கும் மேற்பட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட மேற்பார்வையாளர் புரட்சி கவிதாசன் மாவட்ட பொதுச் செயலாளர்கள் விஜயகுமார், முரளி, பார்த்திபன், மாவட்ட பொருளாளர் சுகன்யா, மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக பவுன்ராஜ் நன்றி கூறினார்.
- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள விராலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்.
- தினமும் காலையிலேயே இவர்கள் இருவரும் ஒன்றாக வேலைக்கு புறப்பட்டு செல்வார்கள்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள விராலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 50), பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். விராலூர் அ.தி.மு.க. கிளைச் செயலாளராகவும் இருந்தார்.
இவரது மனைவி கல்யாணி (45). இவரும் கட்டிட சித்தாள் வேலைக்கு செல்வது வழக்கம். இந்த தம்பதிக்கு 4 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். 3 மகள்களின் படிப்பு, திருமணம், குடும்ப செலவை சமாளிக்கவே இருவரும் வேலைக்கு சென்று வந்தனர்.
தினமும் காலையிலேயே இவர்கள் இருவரும் ஒன்றாக வேலைக்கு புறப்பட்டு செல்வார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் செல்வத்துக்கு வேலை இல்லை.
ஆனால் அவரது மனைவி கல்யாணி திருச்சிக்கு வேலைக்கு செல்ல தயாராகினார். இதனால் அவரை பஸ் ஏற்றி விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். இதையடுத்து வீட்டில் இருந்து புறப்பட்ட அவர்கள் விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலை விராலூர் பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக திருப்பதியில் இருந்து மதுரை நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற கார் சாலையோரம் பேருந்துக்காக காத்து கொண்டிருந்த தம்பதியினர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் அவர்கள் மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார் ஓட்டுநர் மதி (45) மற்றும் காரில் இருந்த பழனியப்பன் (52), அவரது மனைவி சித்ரா (44), மகள் சரண்யா (23) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு சென்ற மனைவியும், அவரை அனுப்பி வைக்க சென்ற கணவரும் விபத்தில் பலியானது அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோரை இழந்து நிர்கதியான அவர்களது மகள்கள் 4 பேரும் கதறித்துடித்தது காண்போரை கண்கலங்க வைத்தது
- புதுக் கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதி விசைப்படகு மீனவர்களுக்கு நேற்றும், இன்றும் மானிய விலையில் டீசல் வழங்கப்படவில்லை
- கோட்டைப்பட்டினத்தில் இருந்து தினமும் கடலுக்கு செல்லும் 300 விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
புதுக்கோட்டை:
தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கு அவர்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு விசைபடகுக்கு மாதம் 1,800 லிட்டர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த டீசல் பற்றாக்குறையாகவே இருந்து வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சராசரியாக ஒரு விசைப் படகுக்கு மாதம் 3,200 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. 12 முறை கடலுக்கு செல்வதால் அரசு வழங்கும் மானிய விலையிலான டீசல் பற்றாக்குறையாக இருப்பதால் வெளி மார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து டீசல் வாங்கும் நிலைக்கு விசைப்படகு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே குறைந்தது ஒரு விசைப்படகுக்கு மாதம் 3 ஆயிரம் டீசலாவது மானிய விலையில் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் புதுக் கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதி விசைப்படகு மீனவர்களுக்கு நேற்றும், இன்றும் மானிய விலையில் டீசல் வழங்கப்படவில்லை.
அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்று புகார் தெரிவித்துள்ள விசைப்படகு மீனவர் கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். கோட்டைப்பட்டினத்தில் இருந்து தினமும் கடலுக்கு செல்லும் 300 விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதற்கிடையே மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங் கப்பட்டதால் ஸ்டிரைக் வாபஸ் ஆனது.
- மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து 7-ம் வகுப்பு மாணவன் பலியானார்
- சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் இறந்தார்.
புதுக்கோட்டை:
கறம்பக்குடி அருகே உள்ள கரும்புலி காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 12). இவர் இலைகடி விடுதி அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரவீன்குமார், வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் அவரது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு சூரக்காட்டிற்கு சென்றார்.
சூரக்காடு வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த பிரவீன்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் யோகரெத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கொடிக்கால்பட்டி குளம் தூர்வாரும் பணியினை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
- 75 குளங்களில் பணிகள் நடை முறைப்படுத்தப்படவுள்ளது
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், விராலூர் ஊராட்சி, கொடிக்கால்பட்டி குளத்தில் ஐடிசி நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.5,22,470 மதிப்பில் குளம் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய அரசின் அம்ருத் சரோவர் திட்டத்தின்படி, ஐடிசி நிறுவன பங்களிப்புடன் இத்திட்டம் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை வீணாக்காமல் சேமித்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும். விராலிமலையில் தொடங்கப்பட்ட இத்திட்ட பணிகளின்கீழ், மாவட்டத்தில் உள்ள 75 குளங்களில் பணிகள் நடை முறைப்படுத்த ப்படவுள்ளது.
விராலிமலையில் இயங்கி வரும் தனியார; உணவு பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஐடிசி நிறுவனம், மிஷன் சுனேரா கல் மற்றும் தானம் அறக்கட்டளை ஆகியோர; பங்களிப்புடன், கொடிக்கால்பட்டி குளம் தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு.மணி, ஐடிசி நிறுவன மேலாளர் சரவணன், பத்மநாதன் (மனிதவளம்), தான அறக்கட்டளை சிஇஒ வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், ரவிச்சந்திரன், ஊராட்சிமன்றத் தலைவர் போஸ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றுகளை கலெக்டர் வழங்கினார்
- தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு காணொளி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சிறுநீரகத்துறை சிறப்பு மருத்துவர்சரவணக்குமார் மற்றும் தனியார் மருத்துவமனையின்இருதய நோய் துறை சிறப்பு மருத்துவர் மனோஜ் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
- முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் பலியானார்.
- சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ரசாக் (வயது 54). முன்னாள் ராணுவ வீரரான இவர் நேற்று முன்தினம் காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். புதுக்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திருக்கோகர்ணம் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு முன்னால் சென்ற லாரி ஒன்று திடீரென பிரேக் போட்டு நின்றது. இதனால் பின்னால் வந்த ரசாக், லாரியின் பின்பக்கம் மோதினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பக்ரீத் பண்டிகையையொட்டி லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
- வியாபாரிகள் ஆடுகளை வாங்க சந்தைக்கு திரண்டனர்.
புதுக்கோட்டை:
முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வருகிற 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிறப்பு தொழுகை நடத்துவார்கள். குர்பானி எனப்படும் இறைச்சி ஏழைகள், நண்பர்களுக்கு கொடுப்பது வழக்கம். மேலும் பிரியாணி சமையலும் உண்டு.
அன்றைய தினம் இறைச்சி கடைகளிலும் ஆட்டிறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறும். இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை சந்தைபேட்டையில் நேற்று ஆட்டு சந்தையில் ஆடுகள் வியாபாரம் களை கட்டியது. இறைச்சிக்கடைக்காரர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் ஆடுகளை வாங்க சந்தைக்கு திரண்டனர். மேலும் விற்பனையாளர்களும் ஆடுகளை அதிகம் கொண்டு வந்திருந்தனர். இதில் பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ள சந்தையிலும் ஆடுகள் விற்பனை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மீனாட்சி (வயது 60). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
- இந்த நிலையில் வீட்டில் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை விஷம் குடித்த பெண் சாவுஅன்னவாசல் அருகே உள்ள காந்துப்பட்டியை சேர்ந்தவர் பொன்னையா. இவரது மனைவி மீனாட்சி (வயது 60). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவதன்று வீட்டில் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.
இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நல்லசாமி நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கீரனூர் வந்து விட்டு திருச்சி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கீரனூர் அருகே வடக்குபட்டியை சேர்ந்தவர் நல்லசாமி (வயது 39). தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கீரனூர் வந்து விட்டு திருச்சி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நல்லசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையறிந்த கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நல்லசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் அரசு பஸ் டிரைவர் கரியாபட்டியை சேர்ந்த அழகர் (55) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
- தொழிலாளர்களின் குறைகளுக்கும், ஓய்வு பெற்றவர்கள் கோரிக்கைக்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும்
- பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.தங்கமணி தலைமை வகித்தார்.
புதுக்கோட்டை:
ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவங்கி நடத்தி முடிக்க வேண்டும், ஓய்வு பெறும் தொழிலாளியை வெறும் கையோடு அனுப்பக் கூடாது,
தொழிலாளர்களின் குறைகளுக்கும், ஓய்வு பெற்றவர்கள் கோரிக்கைக்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என கேட்டு பொன்னமராவதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மற்றும் சிஐடியு பொன்னமராவதி கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.தங்கமணி தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் சிவஞானம், ராஜேந்திரன், சின்னச்சாமி, மனோகரன், வீரய்யா,சிஐடியு கிளை செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






