என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • திருப்பணிகள் முழுமை பெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பொன்னன் விடுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் பரிவார தெய்வங்களுக்கான ஆலயங்கள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் முழுமை பெற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாஹசாலையை தொடர்ந்து மந்திரம் முழங்க புனித நீர் நிரம்பிய குடங்களை தலையில் சுமந்தவாறு சிவச்சாரியார்கள் செல்ல, கிராம மக்கள் ஊர்வலமாக பின்தொடர மேளதாளங்களுடன் கருடபகவான் வானத்தை வட்டமிட புனிதநீர் கோபுர கலசம் மற்றும் கருவறை கலசங்களி ல் ஊற்றப்பட்டது. அப்போது வாணவேடிக்கைகளும் மேலதாளங்கள் முழங்கின. கும்பாபிஷேகத்தை காண அப்பகுதியை சேர்ந்த பல்லாயிரக்க ணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

    • முன்கூட்டியே மொய் விருந்து நடத்தப்படுகிறது.
    • கொரோனா பரவலால் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, கறம்பக்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட வடகாடு, மாங்காடு, அணவயல், கீழாத்தூர், புள்ளான்விடுதி, நெடுவாசல், கொத்தமங்கலம், கீரமங்கலம், செரியலூர், சேத்தன்குடி, கறம்பக்குடி, அரசர்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் மொய் விருந்து விழா நடத்தப்படுவது வழக்கம். இதில், ஒவ்வொருவரும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை விழா நடத்துவார்கள்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பரவல் கா ரணமாக ஆடி, ஆவணியில் நடத்தப்பட வேண்டிய மொய்விருந்து விழா தள்ளிப்போய், மிகவும் தாமதமாக நடத்தப்பட்டது. இதனால், மொய்விருந்து விழா நடத்த திட்டமிட்டிருந்தோருக்கு பணம் பரிமாற்றத்தில் தொய்வு ஏற்பட்டு, பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலை உருவானது.

    மேலும் சீராக மொய் செய்ய வேண்டிய நிலையில் இருந்து மாறி, ஒரே நேரத்தில் அதிக எண்ணிக் கையிலானோருக்கு மொய் செய்ய வேண்டியிருக்கும் என்பதால், தொகையும் அதிகமாக தேவைப்படும். இதுதவிர, கொரானா பரவல், விவசாயப் பொருட்களுக்கு உரிய விலையின்மை போன்ற காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாகவே மொய் விருந்தில் எதிர்பார்க்கும் அளவுக்கு தொகை வசூலாவதில்லை.

    இந்நிலையில் நடப்பாண்டும் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மீண்டும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்படி கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்குமேயானால் கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் மொய் விருந்து விழா நடத்த தடை விதிக்கும் சூழல் ஏற்படலாம். எனவே அத்தகைய நிலையை தவிர்ப்பதற்காக ஆனி மாதத்திலேயே அனைத்து ஊர்களிலும் மொய் விருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

    • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திறமை இருந்தும் கூலி வேலைக்கு செல்லும் இறகுப்பந்து விளையாட்டு வீரர் அரசு தனக்கு பொருளுதவி அளித்து ஊக்குவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
    • பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்ற ஜனகன் போதிய பொருளாதார வசதியின்மையால், தனது 18-வது வயது முதல் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே முத்துக்குடா கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜனகன் (வயது 27). இறகு பந்து விளையாட்டு வீரரான இவர், தேசிய அளவில் 3 முறை தங்கப்பதக்கமும், சர்வதேச அளவில் 3 முறை தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.

    தந்தை இறந்துவிட்டதால் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். கூலித்தொழிலாளியான தாய் கற்பகம் தன்னால் முடிந்த கூலி வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

    இந்நிலையில் ஜனகன் தனது 13-வது வயதிலிருந்தே இறகுப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனை அறிந்த தாய் அவருக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் கொடுத்தார்.

    அப்போதிலிருந்தே பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்ற ஜனகன் போதிய பொருளாதார வசதியின்மையால், தனது 18-வது வயது முதல் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    அப்போது ஜனகளின் விளையாட்டு ஆர்வத்தை அறிந்த அலுவலர்கள், சக நண்பர்கள் நாங்கள் உதவுகிறோம் விளையாட்டை தொடருமாறு அவரிடம் கூறியுள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து ஜனகன் மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து மாநில அளவில், தேசிய அளவில் என பல்வேறு சாதனைகள் படைத்ததோடு, சர்வதேச அளவில் பூட்டானில் நடைபெற்ற செளத் ஏசியன் போட்டியில் ஒரு முறை தங்கப்பதக்கமும், நேபாளத்தில் நடைபெற்ற ஓபன் இண்டர்நேஷனல் சாம்பியன்ஷிப்பில் 2 முறை தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில் வெளிநாட்டிற்கு சென்று விளையாட போதிய பொருளாதாரம் வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள ஜனகன் கூறுகையில், நான் இறகு பந்து விளையாட்டில் சர்வதேச அளவில் 3 முறை தங்கம் வென்று தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    இருந்த போதிலும் தேசிய அளவில் நடைபெறுகின்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கிலும், வெளிநாடுகளுக்கு சென்று சர்வதேச அளவில் விளையாட லட்சக்கணக்கிலும் செலவாகிறது.

    என்னால் முடிந்தவரை நானே வேலை பார்த்தோ, தாய் மற்றும் நண்பர்கள் உதவியோடு இதுவரை விளையாடி விட்டேன். இனிமேலும் நான் தொடர்ந்து விளையாட தமிழக அரசு எனக்கு பொருளுதவி மற்றும் ஏதேனும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    மேலும் இது தொடர்பாக இன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார். இதற்கிடையில் தந்தையின்றி தவித்து வரும் எனது மகன் விளையாட்டில் மென்மேலும் உயர தமிழக அரசு உதவிட வேண்டும் என தாய் கற்பகம் கேட்டுக்கொண்டார்.

    • ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    • சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது

    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலைக்கு பின் தொற்று படிப்படியாக குறைந்தது. 3-வது அலை உருவாகாமல் தடுக்கப்பட்டது. தொற்று பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு மிகவும் குறைந்திருந்த நிலையில் ஓரிருவர் மட்டும் சிகிச்சையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவுக்கு தற்போது 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சிகிச்சையில் நேற்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்கள் கவனமாக இருக்க அவ்வப்போது அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிசிச்சை பெற்றனர்.

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே மாங்கனாபட்டி கிராமத்தில் இந்திய ஆய்ஷ்குழுமம் இந்திய மருத்துவ ஓமியோபதி துறை சார்பிலும் சித்த மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்ற முகாமிற்கு, ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ராமதாஸ் முன்னிலை வகித்தார். முகாமில் மூட்டு வலி, முதுகு வலி, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகள் மற்றும் தைலம் ஆகியவை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சித்த மருத்துவ அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் காயம்பட்டி கிராம பொதுமக்கள் சார்பில் செய்யப்பட்டிருந்தது அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிசிச்சை பெற்றனர்.

    • வழிபறி சம்பவத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி நந்தினி(வயது23). சம்பவதன்று நந்தினி தனது கணவர் பாண்டியனை புதுக்கோட்டை பேரூந்து நிலையத்தில் இறக்கிவிட்டு விட்டு வீடு நோக்கி தனது இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது செல்லுக்குடி அருகே வந்தபோது பின்னால் இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் நந்தினி அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் நந்தினிக்கு கை, கால்கள் காயமடைந்தன. இதனை பார்த்த அப்பகுதியில் வந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்ய முயன்ற இருவரை தேடி வருகின்றனர்.

    • கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்
    • கண்காணிப்பு கேமராவில் பதிவு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் செம்முனீஸ்வரர், மேல்நிலைப்பட்டியில் பொன் நாச்சியம்மன், நல்லக்குறிச்சி சாய்பாபா கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர் திருடி சென்றுள்ளார். இது குறித்து கோவில் நிர்வாகிகள் கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரைக்குடி கானாடுகாத்தன் அருகே கொத்தமங்கலத்தை சேர்ந்த வீரப்பன் மகன் பாண்டியனை(வயது53) என்பவர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகாராஷ்டிரா மாநில பாடப் புத்தகத்தில் புதுக்கோட்டை மாணவி இடம் பிடித்திருப்பது பலரது பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
    • மாணவியின் சமூக அக்கறை வரவேற்பை பெற்றுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஜெயலெட்சுமி. இவர் தற்போது கல்லூரி ஒன்றில் பி.ஏ. வரலாறு படித்து வருகிறார். இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்த போது அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதற்கான பயணச்செலவை மாணவியே ஏற்க வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

    இது குறித்து தகவல் வெளியானதை தொடர்ந்து பலரும் இம்மாணவிக்கு உதவி செய்தனர். மேலும் அதற்கான முழு தொகையையும் கிராமாலயா என்ற தொண்டு நிறுவனமும் வழங்க முன்வந்தது. அப்போது தனக்கு தேவையான உதவி கிடைத்து விட்டது என்று தொண்டு நிறுவனத்தினரிடம் கூறிய மாணவியிடம் வேறு ஏதாவது உதவி தேவையேனில் கேளுங்கள் என்றது. எங்கள் ஊர் மக்கள் பலர் கழிப்பறை இல்லாமல் அவதிப்பட்டு வருவதால் வீட்டுக்கொரு தனிநபர் கழிப்பறை கட்டிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

    இைத ஏற்ற அந்த நிறுவனம் 126 வீடுகளுக்கு கழிப்ப றையை கட்டிக்கொடுத்தது. வீடு தேடி உதவி செய்ய வந்தவர்களிடம் எனக்கு உதவி வேண்டாம் ஊர் மக்களுக்கு கழிப்பறை கட்டி க்கொடுங்கள் என்று கூறிய அந்த மாணவியை பலரும் பாராட்டினர்.

    ஜெயலெட்சுமியின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து மகாராஷ்டிராவில் உள்ள 7-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் 'கனவு மெய்ப்படும்' எனும் தலைப்பில் 4 பக்கத்தில் ஒரு பாடம் இடம் பெற்றுள்ளது இதை சிவா என்பவர் எழுதியுள்ளார். இவ்வாறு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியின் சமூக அக்கறையானது பிற மாநிலத்தில் பாடமாக அமைந்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

    • அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது
    • தேரோட்டத்தில் ஊர் முக்கியஸ்தர்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார் கோவிலில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற பழமையும், பெருமையும் வாய்ந்த ஆத்மநாத சுவாமி கோவில்.

    இங்கு ஆனிதிருமஞ்சனம் மற்றும் மார்கழி மாத திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தேரோட்டம் நடைபெறும்.

    இந்தாண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 25.06.2022 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அன்று முதல் மாணிக்கவாசக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆபாரதனை மற்றும் வீதி உலா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஊர் முக்கியஸ்தர்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கோவிலை சுற்றி நான்கு வீதிகளில் வலம் வந்த திருத்தேரில் மாணிக்கவாசகர் சாமி பவனி வந்து அருள்பாலித்தார்.

    விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • துக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை 4-ந் தேதி (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை 4-ந் தேதி (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி,

    அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இத்தகவல் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பஸ் ஒன்று கறம்பக்குடி பெரியாற்றுப் பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.
    • இதனால் நிலை தடுமாறிய பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதி சாலையோற பள்ளத்தில் கவிழ்ந்தது.

    புதுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி வழியாக புதுக்கோட்டை வரை செல்லும் தனியார் பஸ் ஒன்று கறம்பக்குடி பெரியாற்றுப் பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.

    அப்போது அதே சாலையில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்ததுள்ளது. மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் திடீர் பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் நிலை தடுமாறிய பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதி சாலையோற பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கறம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
    • மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி பலர் மாவட்ட தலைவர் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன், மாவ ட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் மாவட்ட துணைத் தலைவர் சிவசாமி,தெற்கு ஒன்றிய தலைவர் சேசு மாரிமுத்து ஆகியோா் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு பொதுச்செயலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். புதிதாக பொறுப்பேற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் நியமன கடிதம் வழங்கப்பட்டு சால்வை அணிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கலிராயன் விடுதி ஊராட்சியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி பலர் மாவட்ட தலைவர் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இறுதியாக ஒன்றிய பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.

    ×