என் மலர்
உள்ளூர் செய்திகள்

சித்த மருத்துவ முகாம்
- சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
- 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிசிச்சை பெற்றனர்.
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே மாங்கனாபட்டி கிராமத்தில் இந்திய ஆய்ஷ்குழுமம் இந்திய மருத்துவ ஓமியோபதி துறை சார்பிலும் சித்த மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்ற முகாமிற்கு, ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ராமதாஸ் முன்னிலை வகித்தார். முகாமில் மூட்டு வலி, முதுகு வலி, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகள் மற்றும் தைலம் ஆகியவை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சித்த மருத்துவ அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் காயம்பட்டி கிராம பொதுமக்கள் சார்பில் செய்யப்பட்டிருந்தது அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிசிச்சை பெற்றனர்.
Next Story






