என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
- கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்
- கண்காணிப்பு கேமராவில் பதிவு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் செம்முனீஸ்வரர், மேல்நிலைப்பட்டியில் பொன் நாச்சியம்மன், நல்லக்குறிச்சி சாய்பாபா கோவில் உள்ளது.
இக்கோவிலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர் திருடி சென்றுள்ளார். இது குறித்து கோவில் நிர்வாகிகள் கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரைக்குடி கானாடுகாத்தன் அருகே கொத்தமங்கலத்தை சேர்ந்த வீரப்பன் மகன் பாண்டியனை(வயது53) என்பவர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






