என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டையிலிருந்து லண்டனுக்கு கல் சிற்பங்கள் கொண்டு செல்லப்படுகிறது
    • சிற்ப கலைஞரிடம் ஒப்படைத்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் கிடைக்கும் பாறைகள் கற்சிலைகள் செய்ய ஏதுவாக இருப்பதால், இங்கு அதிகமான இடங்களில் சுவாமி, அம்மன் சிலைகள், கல் சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து பல்வேறு மாட்டங்கள், மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் சிற்பங்கள் கொண்டு செல்லப்படுவதால், இம்மாவட்டம் சிலை வடிப்பில் முன்னோடியாக விளங்குகிறது.

    இந்நிலையில் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள பழமையான பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, இக்கோவிலில் அம்மனுக்கு ெசலுத்தப்பட்ட காணிக்கை, பக்தர்களின் நன்கொடை மூலம் கோவிலின் அனைத்து பகுதிகளையும் 7 அடி உயரத்துக்கு கல்லால் அமைக்க திட்டமிட்ட அந்த கோவிலின் நிர்வாகிகள், இக்கோவிலுக்கான கல் சிற்பங்கள் செய்யும் பணியை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை சேர்ந்த சிற்ப கலைஞரிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக அறந்தாங்கி அருகே உள்ள ராஜேந்திரபுரம் பகுதியில் லண்டன் பத்ரகாளி அம்மன் கோவில் கட்டுமானத்து தேவையான சிற்பங்கள் செய்ய கற்கள் கொண்டுவரப்பட்டு, கல்சிற்பங்கள் செதுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    தற்போது ஆழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கல்சிற்பங்கள் செதுக்கும் அனைத்து பணிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து, அனைத்து சிற்பங்களும் தனித்தனியாக 51 மரப்பெட்டிகளுக்குள் வைத்து அடைக்கப்பட்டன. அந்த பெட்டிகள் கிரேன் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டு, சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. இவை அங்கிருந்து கப்பல் மூலம் லண்டனுக்கு கொண்டு செல்லப்படடவுடன், கோவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    • மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 7-ந் தேதி காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை செயற்பொறியாளர், இயக்குதலும் காத்தலும் புதுக்கோட்டை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
    • புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்பார்வைபொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் மின்வாரிய சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், புதுக்கோட்டை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வைபொறியாளர் சேகர் தலைமையில் புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, இலுப்பூர் மற்றும் கந்தர்வகோட்டை பகுதிக்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 7-ந் தேதி காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை செயற்பொறியாளர், இயக்குதலும் காத்தலும் புதுக்கோட்டை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

    இதில் புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்பார்வைபொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் மின்வாரிய சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய காசநோய் தடுப்பு கழகம் சார்பில் இலவச காச நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • தொடர் சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கு அவர்களது இல்லங்களிலேயே மருந்து மாத்திரைகள் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் விராலிப்பட்டி ஊராட்சியில் இந்திய காசநோய் தடுப்பு கழகம் சார்பில் இலவச காச நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமை விராலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முத்துக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த பரிசோதனை முகாமில் புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் 500க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர்.

    மேலும் தொடர் சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கு அவர்களது இல்லங்களிலேயே மருந்து மாத்திரைகள் கிடைக்க ஏற்பாடு செய்தனர். இந்த முகாமில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரபணிகள் இயக்குனர் அறிவுருத்துதலின்படி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகலிங்கம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், ராமலிங்கம், உத்தமன் உள்ளிட்ட குழுவினர்கள் பொன்னமராவதியில் பேரூந்து நிலைய வளாகம், அண்ணாசாலை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை, தேனீர் கடை, மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு மேற்க்கொண்டனர்.

    அப்போது சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் கூலிப் என்ற புகையிலை பொட்டலத்தை பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே அவற்பறை ள்ளி மாணவர்களுக்கு விற்கக்கூடாது. மீறி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகா தாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்

    • வடகாட்டில் தேசிய அளவிலான வாலிபால் போட்டி நடைபெற உள்ளது.
    • அமைச்சர் தொடங்கிவைக்கிறார்

    புதுக்கோட்ைட:

    புதுக்கோட்ைட மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு நேசிய அள விலான வாலிபால் போட்டி வரும் 8-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. போட்டியை மாநில சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைக்க உள்ளார்.

    வடகாடு காவல் நிலையம் எதிரில் உள்ள மைதானத்தில் இரவு நேரத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் ஆண் மற்றும் பெண் என இரு பிரிவாக அணிகளாக கலந்துகொள்ள உள்னனர்.

    அதில் ஆண்கள் பிரிவில் கேரளா காவல்துறை சென்னை எஸ்ஆர் எம், சென்னை ஜிஎஸ்டி, பெங்களூரு அணி ஆகிய அணிகள் கலந்து கொள்ள உள்ளன. பெண்கள் பிரிவில் கேரளா கே எஸ் இ பி அணி, கேரளா காவல்துறை, சென்னை எஸ் ஆர் எம், சென்னை ஐ சி எப் ஆகிய அணிகள் கலந்து கொள்ள உள்ளன

    போட்டியை ஒரே நேரத்தில் 5000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டு வருகிறது. மைதானத்தில் இரவை பகலாக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட அதிக ஒளி உமிழும் மின்விளக்கு கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தவிர வாகனங்களை நிறுத்துவத ற்காக ஆங்காங்கே வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    தினமும் மாலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணி வரை போட்டி நடைபெறும். அண்ணா கைப்பந்து கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவாக நடைபெறும் இந்த போட்டியை மாநில சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையா ட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்.

    மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமை ச்சர் எஸ் .ரகுபதி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

    வெற்றி பெறும் அணியினரு க்கு ரொக்க பரிசு, அண்ணா கைப்பந்து கழகத்தின் மறைந்த வீரர்களின் நினைவாக பரிசு கோப்பை ஆகியன வழங்கப்பட உள்ளன. போட்டிக்கான முன்னேற்பாடுகளை அண்ணா கைப்பந்து கழகத்தினால் செய்து வருகின்றனர்.

    • குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகேயுள்ள நகரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் வழங்கப்படுவதில்லையாம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை ஏதும் இல்லையாம். இந்நிலையில், உடனே குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் நகரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற கீரமங்கலம் போலீசார், பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சட்டவிரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார்
    • 25 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருகின்றனர் என ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்றுக்கொண்டிருந்த கீழாத்தூர் தங்கவேல் மகன் மோகன் ( வயது 53 ) என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 25 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

    • குளத்தில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
    • குளத்துப்பகுதியில் சென்றவர் திடீரென காணவில்லை.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் காட்டுப்பட்டி ஊராட்சி நல்லம்மாள் நகர் பகுதி சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் ஆனந்த் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் புதுவளவு பகுதியில் உள்ள ஹாலோ பிளாக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் பொன்-புதுப்பட்டி அருகே அம்பலகாரன் கண்மாயில் நேற்று மதியம் கடையில் வைத்திருந்த தனக்கு சொந்தமான சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்வதாக கிளம்பி உள்ளார். சேங்கை ஊரணி மேற்கு பகுதியில் உள்ள அம்பலகாரன் கண்மாய் அருகே சென்றதை உறவினர்கள் பார்த்துள்ளனர். மேலும் குளத்துப்பகுதியில் சென்றவர் திடீரென காணவில்லை.

    மேலும் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளும் அவர் அணிந்திருந்த செருப்பும் கரையில் கிடந்தது தெரிய வந்தது. நீண்ட நேரம் ஆகியும் கரைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் ஆனந்தை தேட ஆரம்பித்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்புப்படை வீரர்கள் பாதாலக்கரண்டி மூலம் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது ஆனந்த்தின் உடல் சிக்கியது. சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்வம் பொன்-புதுப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

    • எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தாலும், இலங்கை கடற்படை எங்களை வேண்டுமென்றே கைது செய்கிறது.
    • ஒரு விசைப்படகு மற்றும் 5 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், கைது செய்யப்பட்ட படகின் அருகே மீன்பிடித்த எங்களை குச்சியால் ஆளுக்கு 5 அடி அடித்தார்கள்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் பகுதிகளில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள். அவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து நேற்று 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கரையில் இருந்து 26 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய எல்லை கடல்பகுதியான நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அங்கே வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை சுற்றி வளைத்தனர். இதனால் பதட்டம் அடைந்த மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் அவர்களை மறித்த இலங்கை கடற்படையினர் இங்கு மீன்பிடிக்க கூடாது, இது எங்கள் நாட்டு எல்லை என்றனர்.

    மேலும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக்கூறி மதன் (வயது 26) என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் அதில் சென்ற மகேந்திரன் (20), சத்தியராஜ் (37), மதன் (26), வசந்த் (20), மெல்லின் (24) ஆகிய 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன்பின்னரே மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது தெரியவரும்.

    இதுகுறித்து சக மீனவர்கள் தெரிவிக்கையில், கடன் வாங்கிக் கொண்டுதான் நாங்கள் தொழிலுக்கு செல்கிறோம். ஆனால் இந்திய எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தாலும், இலங்கை கடற்படை எங்களை வேண்டுமென்றே கைது செய்கிறது. அடித்து துன்புறுத்துகிறது. இன்று நடைபெற்ற சம்பவத்தில் ஒரு விசைப்படகு மற்றும் 5 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், கைது செய்யப்பட்ட படகின் அருகே மீன்பிடித்த எங்களை குச்சியால் ஆளுக்கு 5 அடி அடித்தார்கள்.

    மேலும் நாங்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், சமைப்பதற்காக வைத்திருந்த அரிசி, காய்கறிகளையும் பறித்து சென்றனர். இது தொடர்ந்து வாடிக்கையான நிகழ்வாகியும் வருகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.

    எனவே மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகையும் விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடைகளில் விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொ ருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகலிங்கம் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ரவீந்திரன், தியாகராஜன், ராமலிங்கம், உத்தமன், முகேஷ்கண்ணன், வசந்தராமன், பிரேம்குமார் ஆகியோர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் தடையை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்."

    • புதுக்கோட்டையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பழைய அ.தி.மு.க.வாக செயல்பட வேண்டும்

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி பொதுசெயலாளர் ஆவது உறுதி என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சட்டரீதியான நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில் பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகிற நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் முக்கிய நிர்வாகிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் புதுக்கோட்டையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அ.தி.மு.க.வினர் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அறந்தாங்கி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதி தலைமை தாங்கி பேசினார். புதுக்கோட்டை நகராட்சி முன்னாள் தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். கண்டன கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். அதன்பின் ரெத்தினசபாபதி நிருபர்களிடம் கூறுகையில், ''வருகிற 11-ந் தேதி கூட்டப்படும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கண்டிப்பாக செல்லாது. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீா்செல்வம் தான். சசிகலா, டி.டி.வி. தினகரன் என அனைவரும் ஒருங்கிணைந்து பழைய அ.தி.மு.க.வாக செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம்' என்றார்.

    ராஜசேகரன் கூறுகையில், ''அ.தி.மு.க.வில் கட்சி நலனுக்காக இரட்டை தலைமை கொண்டு வரப்பட்டது. தற்போது ஒற்றை தலைமை ஏன் தேவை. 1½ கோடி தொண்டர்கள் உள்ளதில் நிர்வாகிகள் ஆயிரம் பேர் மட்டும் தான் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தான் உள்ளனர்'' என்றார்.

    • தூக்குப்போட்டு பெண் தற்கொலை கொண்டார்.
    • வேலை பார்த்து வந்தார்.

    புதுக்கோட்டை:

    ஆவுடையார்கோவில் தாலுகா கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (வயது 60). இவரது மூன்றாவது மகள் ரஞ்சனா (25). இவர் பி.எஸ்.சி., பி.எட் படித்துவிட்டு ஆவுடையார்கோவிலில் ஜெராக்ஸ் கடையில் கடந்த 3 ஆண்டுகளாக, வேலை பார்த்து வந்தார். வீட்டில் உள்ளவர்கள் நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்த போது ரஞ்சனா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர்கள் ரஞ்சனாவை மீட்டு சிகிச்சைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரஞ்சனா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சனாவிற்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது."

    ×