என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் குழந்தையை 108 ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயரிழந்தது.
    • இதுகுறித்த தகவலின்பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    விராலிமலை:

    ஈரோட்டை சேர்ந்தவர்கள் சீனிவாசன்-திவ்யா தம்பதி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் இருந்தனர். சீனிவாசன் கூலி வேலைக்கும், திவ்யா அங்குள்ள ஒரு செங்கற்சூளைக்கும் வேலைக்கு சென்று வந்தனர்.

    அதே சூளையில் வேலைபார்த்த ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளியான ஜெகன் என்பவருடன் திவ்யாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. வயது குறைந்தவர், மாற்றுத்திறனாளி என்பதையெல்லாம் மறந்து அவருடன் ஒன்றாக வாழ முடிவு திவ்யா முடிவு செய்தார்.

    இதையடுத்து 3 வயது மகளை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு கள்ளக்காதலன் ஜெகனுடன் ஈரோட்டை விட்டு வெளியேறி கள்ளக்குறிச்சியில் குடியேறினர். அங்கும் செங்கற்சூளை வேலைக்கு சென்ற இந்த ஜோடி ஊர் பிடிக்காததால் அங்கிருந்து கடந்த மாதம் 29-ந்தேதி மதுரை மாவட்டம் அய்யூர் பகுதியில் குடியேறினர்.

    அப்போது ஜெகனின் நண்பரான பழனியப்பன், இவர்களுடன் ஒரே வீட்டில் தங்கினார். இதில் கள்ளக்காதல் ஜோடி உல்லாசம் அனுபவிப்பதை நேரில் பார்த்த பழனியப்பன் தனது காம இச்சைக்கு ஒன்றுமறியாத 3 வயது குழந்தையை பயன்படுத்த தொடங்கினார்.

    இதைப்பார்த்த தாய் திவ்யா கண்டித்தார். ஆனால் ஜெகன் கண்டுகொள்ளாததோடு, பழனியப்பனை கண்டிக்க கூட இல்லை. இதில் பாதிக்கப்பட்ட குழந்தையின் உடல் நாளுக்கு நாள் மிகவும் சோர்வடைய தொடங்கியது.

    கடந்த 1-ந்தேதி குழந்தையின் தந்தையிடமே மகளை ஒப்படைத்து விடலாம் என்று முடிவு செய்த திவ்யா, கள்ளக்காதலன் ஜெகன் மற்றும் பழனியப்பன் ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி புறப்பட்டனர். வழியில் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் விராலிமலை அருகே கொடும்பாளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் குழந்தையை 108 ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயரிழந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நடந்த பிரேத பரிசோதனையில் 3 வயது குழந்தை பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதற்கிடையே குழந்தை இறந்த தகவல் கிடைத்ததும் தாய் திவ்யா, கள்ளக்காதலன் ஜெகன், பழனியப்பன் ஆகிய 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இறந்த குழந்தையின் உடலை வாங்க கூட வரவில்லை.

    இந்த நிலையில் திவ்யாவின் சகோதரர் ஆறுமுகம் என்பவர் மூலம் திருச்சியில் தங்கியிருந்த திவ்யாவை பிடித்த போலீசார், மற்ற இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தீவிர விசாரணை நடத்தினார்.

    விராலிமலை போலீஸ் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்ட பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இன்று காலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கொஞ்சமும் இரக்கமின்றி தனது காம இச்சையால் 3 வயது குழந்தையின் உயிரை பறித்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

    • கோமாபுரத்தில் புதிய துணை மின் நிலையம் அமைத்து, சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படுவதை தடுக்க வேண்டும்,
    • கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளை முறையாக பாராமரிக்க வேண்டும

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் திலகவதி, ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கோமாபுரத்தில் புதிய துணை மின் நிலையம் அமைத்து, சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படுவதை தடுக்கவும், ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளை செப்பனிடவும், புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தேவையான மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டித் தர வேண்டும்,

    கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் புதிதாக கழிவறைமற்றும் சிமெண்ட் தரைத்தளம் அமைத்து தரவும், வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதற்கு காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

    கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் பேசும் பொழுது, உறுப்பினர்கள் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு ஏற்ப விரைவில் நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டியன், ராஜேந்திரன், கலியபெருமாள், திருப்பதி, முருகேசன், பாரதி பிரியா, சுதா, வைரக்கண்ணு, மலர் மற்றும்கந்தர்வகோட்டை தலைமை அரசு மருத்துவர் ராதிகா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதிஉள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில்மேலாளராக பணியாற்றிய கணேசன் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது.
    • விழாவில் கந்தர்வகோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் பாண்டியன், முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் காட்டு நாவல் சின்னப்பா, சொக்கம்பேட்டை ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 35 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் வளவம்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன். இவரின் பணி ஓய்வு பாராட்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவில் கந்தர்வகோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் பாண்டியன், முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் காட்டு நாவல் சின்னப்பா, சொக்கம்பேட்டை ரங்கராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் நியூஸ் ராஜேந்திரன், திமுக நகர செயலாளர் ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன், வளவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன்மற்றும் பலர் ஓய்வு பெற்ற மேலாளர் கணேசனுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஆலங்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி - முதல்வர் திறந்து வைத்தார்
    • அமைச்சர் மெய்யநாதன் குத்துவிளக்கேற்றினார்

    புதுக்கோட்டை: :

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, திருமயம் என 2 அரசுக் கல்லூரிகள் தொடங்கப்படும் என கடந்த சட்டப்பேரவையில் அறிவிக்கப்படடது. தொடர்ந்து ஆலங்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்காக கீழாத்தூர் சமத்துபுரம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. நடப்பாண்டு கல்லூரிக்கான சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து ஆலங்குடி சந்தைப்பேட்டைபகுதியில் வாடகை கட்டடத்தில் கல்லூரிக்கான தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், கணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் கல்லூரியை திறந்து வைத்தார்.

    விழாவில், பங்கேற்று சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உஷா செல்வம், திருவர ங்குளம் ஒன்றிய ஆணையர் ஆயிஷா ராணி, கிராம வட்டார வளர்ச்சி கோகுல கிருஷ்ணன், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் முதல்வர் திருச்செல்வம், ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், அறந்தாங்கி சேர்மன் மகேஸ்வரி சண்முகநாதன், மகளிர் திட்ட இயக் குனர் ரேவதி, புதுக்கோட்டை அஞ்சுகா மீனாட்சிசுந்தரம், வீரமணி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆலங்குடி சுற்றியுள்ள ஊராட்சி மன்ற தலைவர்க ள் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் ஏராளமான கலந்துகொண் னர் ஆலங்குடி நகர தலைவர் பழனிகுமார் நன்றி கூறினார்.

    கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவிலில் சமையல் எரிவாயு உருளை விலையேற்றத்தினைக் கண்டித்து, ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் எரிவாயு உருளைக்கு ஒப்பாரி வைத்து, கும்மியடித்து சுடுகாட்டிற்கு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

    ஒன்றியத் தலைவர் அமுதா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டத் தலைவர் சுசீலா முன்னிலை வகித்தார். அப்போது மத்திய மோடி ஆட்சியில் நாளுக்குநாள் விலைவாசி உயர்வு வின்னை முட்டுகிறது. நாளுக்கு நாள் எரிவாயு உருளையின் விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி பதவியேற்கும் போது ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ650 இருந்தது. தற்போது 1150 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    எனவே சமையல் எரிவாயு உருளையின் விலையேற்றத்தைக் கண்டித்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் எரிவாயு உருளைக்கு ஒப்பாரி வைத்து அழுதும்,கும்மியடித்தும், அதனை தொடர்ந்து சுடுகாட்டிற்கு அனுப்பும் நூதன போராட்டத்தில் மாதர் சங்கத்தினர் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஒன்றியச் செயலாளர் நாகூரம்மாள், மவட்டச் செயலாளர் சலோமி, மாவட்ட பொருளாளர் பாண்டிச்செல்வி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • புத்தக திருவிழா நடைபெற உள்ளது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள நகர்மன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வரும் 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை 5-வது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. கலெக்டரை தலைவராக கொண்டு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்தப்பட உள்ள இந்த புத்தகத் திருவிழாவில் 80 அரங்ககளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற உள்ளன.

    இந்த புத்தகத் திருவிழா குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நேற்று கா லை 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை புத்தக வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஆலங்குடி அருகே கல்லாலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மலர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். கல்லாலங்குடி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலெட்சுமி மற்றும் ஸ்ரீ சுபபாரதி பள்ளியின் முதல்வர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஊராட்சி செயலர் ஜெனித் அரிஸ்டாட்டில், மக்கள் நலப் பணியாளர், தூய்மைப் பணியாளர்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ஐயப்பன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் ஆகிய இடங்களில் புத்த கவாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றன.

    • கலெக்டரிடம் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்
    • நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் அவல நிலை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன். தலைமையில் எலுமிச்சம்பழம் மாலை அணிந்துக் கொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு முழுமையான சிகிச்சை இல்லை, உடல்நிலை சரியில்லாமல் வருகின்ற நோயாளிகளை இங்கே பார்க்க முடியாது என்று தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் அவல நிலை உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்க்கக்கூடிய சிகிச்சை கூட புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரியில் பார்ப்பது இல்லை. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    மனு கொடுக்க சென்ற போது, அரசியல் தொடர்பு மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் பாலா ரமேஷ் மற்றும் செல்லத்துரை. தண்டாயுதம், பாலு, சூர்யா, ஊடகப்பிரிவு மாவட்டத்தலைவர் சந்துரு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    • புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால் சாதனை படைக்கலாம் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
    • லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற உள்ளன.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள நகர்மன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வரும் 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை 5-வது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. கலெக்டரை தலைவராக கொண்டு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்தப்பட உள்ள இந்த புத்தகத் திருவிழாவில் 80 அரங்ககளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற உள்ளன.

    இந்த புத்தகத் திருவிழா குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நேற்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை புத்தக வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 1976 பள்ளிகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட கலை அறிவியல், பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரிகளிலும், 92 நுலகங்களிலும் நேற்று காலை 11.30 மணியிலிருந்து 12.30 வரை ஒரு மணி நேரம் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் தனக்குப் பிடித்த புத்தகங்களை வாசித்தனர்.

    புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்தை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, பொது அறிவு வளர வேண்டுமானால் மாணவர்கள் பாடத்திட்டத்தைத் தாண்டிய புத்தகங்களையும் வாசிக்க வேண்டும். நீங்கள் உங்களுக்குப் பிடித்த எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் வாசிக்கலாம். சிறிய வயதில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளர்களாக வளராலம். என்றார்.

    • ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் ஆய்வு செய்தார்.
    • உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்ட பட்ட சிறு மின்விசை குடிநீர் தொட்டிகளை திறந்து வைக்க வருகை தந்த மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா சமுத்துவ புரத்தில் தற்காலிகமாக கட்டப்படவுள்ள பஸ் நிறுத்த இடத்தை பார்வையிட்டார். அதன்பின்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி 1996ல் துவக்கி வைத்த ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது அப்பள்ளி ஆசிரியர்கள் பாம்பு தொல்லை இருப்பதாகவும், அதே போல் குடிதண்ணீர் பிரச்சினை உள்ளது எனவும், பள்ளிக்கு சுற்றுசுவர் கட்டி தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். பார்வையிட்ட எம்பி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றர். பள்ளி மாணவ, மாணவிகள் எம்பிக்கு விடுகதை போட்டு விடை கேட்டு ஆச்சரியபடுத்தினர். ஆய்வின் போது புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜன், பொறியாளர் சேகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் மதியழகன், சுப.சரவணன், பழனிவேல், மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ரூபஸ் சாந்தகுமார், பள்ளி ஆசிரியை சத்யா, ஐடி விங்க் இதயம் அப்துல்லா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.


    • கந்தர்வக்கோட்டையில் வேளாண்திட்டப்பணிகள் ஆய்வு செய்தனர்.
    • மாற்று பயிர் சாகுபடியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம்

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை வட்டாரத்தில் கடந்த 2021-22 ம் ஆண்டில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சுந்தம்பட்டி ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்ட தரிசு நிலத்தொகுப்பினை குடுமியான்மலை ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் தரிசு நிலத்தொகுப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள விவசாயிகளிடம் மாற்று பயிர் சாகுபடியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.

    பின்னர் காட்டுநாவல் கிராமத்தில் தமிழ்நாடு விவசாய நிலங்களின் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கத்தின் கீழ் சுப்ரமணியன் என்பவரது வயலில் நடவு செய்யப்பட்டுள்ள தேக்கு, செம்மரம்,வேங்கை ஆகியவைகளை ஆய்வு செய்தார்.

    வடுகப்பட்டி, வீரடிப்பட்டி ஆகிய கிராமங்களில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பயறு வகைகள் மற்றும் தென்னை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தென்னை மரங்களுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்கள்.

    • மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது
    • பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தார்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே கும்மங்குளம் மெக்கேல் சம்மனசு ஆலய கோவில் வளாகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது.

    முகாமில் முத்து மீனாட்சி மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சையில் மருத்துவ நிபுணர் சரவணன் கலந்துகொண்டு அப்பகுதி யில் உள்ள பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தார். பின்னர் பரிசோதனையில் மருந்து மாத்திரைகள் வழ ங்கினார். முகாமில் நூற்றுக்கு அதிகமானோர் கலந்து கொண்டனர்.

    • கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • அவரது அறைக்கு பீட்டர் சென்று பார்த்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வேங்கிட குளம் பகுதியை சேர்ந்தவர் பீட்டர். இவருடைய மகன் ரெத்தினம் ஆன்றோ (வயது 28). இவர் கத்தக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் இவர் உணவு சாப்பிட வராததால் வீட்டின் மாடியில் உள்ள அவரது அறைக்கு பீட்டர் சென்று பார்த்தார். அப்போது ரெத்தினம் ஆன்றோ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத:துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×