search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வக்கோட்டையில் வேளாண்திட்டப்பணிகள் ஆய்வு
    X

    கந்தர்வக்கோட்டையில் வேளாண்திட்டப்பணிகள் ஆய்வு

    • கந்தர்வக்கோட்டையில் வேளாண்திட்டப்பணிகள் ஆய்வு செய்தனர்.
    • மாற்று பயிர் சாகுபடியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம்

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை வட்டாரத்தில் கடந்த 2021-22 ம் ஆண்டில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சுந்தம்பட்டி ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்ட தரிசு நிலத்தொகுப்பினை குடுமியான்மலை ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் தரிசு நிலத்தொகுப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள விவசாயிகளிடம் மாற்று பயிர் சாகுபடியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.

    பின்னர் காட்டுநாவல் கிராமத்தில் தமிழ்நாடு விவசாய நிலங்களின் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கத்தின் கீழ் சுப்ரமணியன் என்பவரது வயலில் நடவு செய்யப்பட்டுள்ள தேக்கு, செம்மரம்,வேங்கை ஆகியவைகளை ஆய்வு செய்தார்.

    வடுகப்பட்டி, வீரடிப்பட்டி ஆகிய கிராமங்களில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பயறு வகைகள் மற்றும் தென்னை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தென்னை மரங்களுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்கள்.

    Next Story
    ×