என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டரிடம் பாஜகவினர் புகார் மனு
- கலெக்டரிடம் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்
- நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் அவல நிலை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன். தலைமையில் எலுமிச்சம்பழம் மாலை அணிந்துக் கொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு முழுமையான சிகிச்சை இல்லை, உடல்நிலை சரியில்லாமல் வருகின்ற நோயாளிகளை இங்கே பார்க்க முடியாது என்று தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் அவல நிலை உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்க்கக்கூடிய சிகிச்சை கூட புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரியில் பார்ப்பது இல்லை. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
மனு கொடுக்க சென்ற போது, அரசியல் தொடர்பு மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் பாலா ரமேஷ் மற்றும் செல்லத்துரை. தண்டாயுதம், பாலு, சூர்யா, ஊடகப்பிரிவு மாவட்டத்தலைவர் சந்துரு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.






