என் மலர்
நீங்கள் தேடியது "நவீன கழிவறை"
- கோமாபுரத்தில் புதிய துணை மின் நிலையம் அமைத்து, சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படுவதை தடுக்க வேண்டும்,
- கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளை முறையாக பாராமரிக்க வேண்டும
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் திலகவதி, ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கோமாபுரத்தில் புதிய துணை மின் நிலையம் அமைத்து, சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படுவதை தடுக்கவும், ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளை செப்பனிடவும், புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தேவையான மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டித் தர வேண்டும்,
கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் புதிதாக கழிவறைமற்றும் சிமெண்ட் தரைத்தளம் அமைத்து தரவும், வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதற்கு காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் பேசும் பொழுது, உறுப்பினர்கள் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு ஏற்ப விரைவில் நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டியன், ராஜேந்திரன், கலியபெருமாள், திருப்பதி, முருகேசன், பாரதி பிரியா, சுதா, வைரக்கண்ணு, மலர் மற்றும்கந்தர்வகோட்டை தலைமை அரசு மருத்துவர் ராதிகா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதிஉள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






