என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தவர் திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
- மன உளைச்சலில் இருந்து வந்த அவர் வீட்டிலும், உறவினர்களிடமும், தான் வேலை பார்க்கும் இடத்திலும் யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்தவர் சங்கரன் மகன் நந்தகுமார். இவர் விராலிமலை அருகே உள்ள ஆவூர் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.வீட்டிலும், உறவினர்களிடமும், தான் வேலை பார்க்கும் இடத்திலும் யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.இதுபற்றி பெற்றோர் காரணம் கேட்டபோது, எதுவும் கூற மறுத்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுபானத்துடன் குருணை மருந்து என்று சொல்லக்கூடிய விஷ மருந்தை கலந்து குடித்து மயங்கியுள்ளார்.இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு கீரனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.அவரது உடலை கைப்பற்றிய விராலிமலை போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதில் ஹரேராம கிருஷ்ண பக்தர்கள் ரதயாத்திரை வடம் பிடித்து சென்றனர்.
- அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஆச்சாரியான பக்தி வேதாந்த ஸ்வாமி ஸ்ரீல பிரபுபாதர் இந்த ஜெகந்நாத ரத யாத்திரையை உலகம் முழுவதும் நடை பெறச் செய்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் முதன்முறையாக ஜெகந்நாத ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. சாந்தநாத சுவாமி ஆலயத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட ரத யாத்திரை தொடங்கியது. நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் தொடங்கி வைத்தார்.
இதில் ஹரேராம கிருஷ்ண பக்தர்கள் ரதயாத்திரை வடம் பிடித்து சென்றனர். நகரில் பல்வேறு வீதிகள் வழியாக ரத யாத்திரை சென்றது. பொதுமக்கள் ரதயாத்திரையினை வரவேற்றனர்.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஆச்சாரியான பக்தி வேதாந்த ஸ்வாமி ஸ்ரீல பிரபுபாதர் இந்த ஜெகந்நாத ரத யாத்திரையை உலகம் முழுவதும் நடை பெறச் செய்தார். இந்த யாத்திரையில் மக்கள் அனைவருக்கும் தன் கருணையை அளிப்பதற்காக பகவான் ஜெகந்நாதர் தாமே ரதத்தில் அமர்ந்தபடி ஊரில் வலம் வருகிறார்.
ஸ்கான் இயக்கம் இந்நிகழ்ச்சியை புதுக்கோட்டை மக்களின் நலனுக்காக ஏற்பாடு செய்திருக்கிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று ராதா கிருஷ்ண–ருக்கு ஆராதனை நாம சங்கீர்த்தனம், பகவத் கீதை உபன்யாசம் மற்றும் ஞாயிறு விருந்து (அன்னதானம்) நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ராதாகிருஷ்ணரின் அருளைப்பெற ஸ்கான் புதுக்கோட்டை அனைவரையும் வரவேற்கிறது.
- ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல் வெப்பம், இசிஜி, கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை, கண் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான பொது மருத்துவம் அரசின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
- நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டு சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வாராப்பூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமை வகித்தார். முகாமில் சிவகங்கை மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனர் ராம்.கணேஷ் வரவேற்புரை ஆற்றினார். முகாமில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியக்கருப்பன் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ஐ.மலர்விழி நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
முகாமில் வாராப்பூர் ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பொதும்மக்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல் வெப்பம், இசிஜி, கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை, கண் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான பொது மருத்துவம் அரசின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இதில் சிங்கம்புணரி பூசலியம்மாள் மருத்துவமனை மருத்துவகுழுவினர்கள், காரைக்குடி ஜே.எஸ்.எஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினர்கள், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டு சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர். சுகாதாரத் துறை சார்பில் முகாமில் கண்காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
மேலும் இதில் தமிழக அரசின் மருந்து பெட்டகத்தினை 5 நபர்களுக்கு முகாமின் சிறப்பு விருந்தினர் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியக்கருப்பன் வழங்கினார். மேலும் இம்முகாமில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சிங்கம்புனரி வட்டாட்சியர் கயல்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கன்னி, சந்திரா, வாராப்பூர் ஊராட்சியின் துணை தலைவர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.
- கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
- கழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் துரைப்பாண்டி, ரெசிதரன், இளங்கோவன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை பகுதியில் அரசு பொதுத்தேர்வில் சிறப்பு இடம் பெற்ற மாணவர்களை முன்னாள் பள்ளி மாணவர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, கோமாபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி 10,12ம் வகுப்புபொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள், மாணவிகளுக்கு கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் துரைப்பாண்டி, ரெசிதரன், இளங்கோவன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- சிவகாசியில் கூடுதல் எஸ்பியாக பணியாற்ற தொடங்கியவர் அதன்பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றியுள்ளார்.
- எந்நேரமும் எந்தவித தகவல் என்றாலும் தொடர்பு கொள்ள தனது செல் நம்பரை வெளியிட்டுள்ளார் 94899 46674. குற்றங்களை தடுக்க தனிப்படை அமைக்கப்படும் என்றார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டாக இருந்த நிஷாபார்த்திபன் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டதால் புதுக்கோட்டைக்கு வந்திதா பாண்டே நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டாக பதவியேற்றுக் கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- நான் உத்தரபிரசேத மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர். 2011 ஆண்டு பேட்ஜில் படித்து முடித்தவர். சிவகாசியில் கூடுதல் எஸ்பியாக பணியாற்ற தொடங்கியவர் அதன்பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றியுள்ளார்.
அதன்பின்னர் கரூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் பட்டாலியன் படையில் பணியாற்றிவிட்டு தற்போது மீண்டும் எஸ்பியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியில் சேர்ந்துள்ளேன் என்றார்.
சட்டம் ஒழுங்கை திறம்பட கையாளுவேன். அதைவிட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களை முழுமையாக குறைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். எந்நேரமும் எந்தவித தகவல் என்றாலும் தொடர்பு கொள்ள தனது செல் நம்பரை வெளியிட்டுள்ளார் 94899 46674. குற்றங்களை தடுக்க தனிப்படை அமைக்கப்படும் என்றார்.
- அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டுநெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
- விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக ஆறு மாத காலம் கால நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :
நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லாபகுதிகளில் 01.01.2011 -ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டுநெறிமுறைகள் வெளியிடப்பட்டன.மேலும் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மீண்டும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன்மூலம் தெரிவிக்கப் படுகின்றது. இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வடகாட்டில் தேசிய அளவிலான வாலிபால் போட்டி தொடங்கியது.
- அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான வாலிபால் போட்டியை மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகத்தின் பொன்விழாவை முன் னிட்டு தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வா லிபால் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது.
ஆண்கள் பிரிவில் கேரளா காவல் துறை, சென்னை எஸ்ஆர்எம், செ ன்னை ஜிஎஸ்டி, பெங்களூர் அணி ஆகிய அணிகள் கலந்துகொள்ள உள்ளன. பெண்கள் பிரிவில் கேரளா கேஎஸ்இபி அணி, கேரளா காவ ல் துறை, சென்னை எஸ்ஆர்எம், சென்னை ஐசிஎப் ஆகிய அணிகள் கலந்துகொள்ள உள்ளன.
போட்டியை மாநில சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழ்நாடு வாலிபால் கழகமானது 3 ஆண்டுகள் முடக்கி வைக்கப்பட் டு இருந்தது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் அ ந்த கழகத்தினரிடம் பேசி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆ ணையத்தின் அனுமதியையும் பெற்று தனித்துவமாக செயல்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.விளையாட்டு துறையில் அனைத்து பிரிவுகளிலும் தமி ழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் சாதித்து வருகின்றனர்.
இந்திய ஹாக்கி அணியில்கூட தமிழகத்தைச்சேர்ந்த 2 வீரர்கள், ஆசிய அளவில் பதக்கம் பெறுவதற்கான பங்களிப்பை செய்திருக்கிறா ர்கள். சென்னையில் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவானது உலகமே வியக்கும் வ கையில் நடைபெற உள்ளது.
இதற்காக 52 ஆயிரம் சதுர அடியில் சர்வதேச தரத்தில் உள் விளையா ட்டு அரங்கம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.சென்னையில் ரூ.700 கோடியில் ஸ்போர்ட்ஸ் சிட்டி விரைவில் உருவாக்கப்பட உள்ளது.
இதேபோன்று தமிழகத்தில் தொகுதிக்கு ரூ.3 கோடியில் சர்வதே தரத்தில் தலா ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்,
வாலிபால் போட்டியை கான அப்பகுதியைசேர்ந்த சுமார் 3000 ஆ யிரத்திற்கும் அதிகமானோர் தொடக்க விழாவில் கலந்து கொண்ட னர் கீரமங்கலம் காவல் ஆய்வாளர் அழகம்மை(பொ)தலமையிலான போ லீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- லாட்டரி டிக்கெட் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது
புதுக்கோட்டை:
ஆலங்குடி பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தனிப்படை அமைத்து நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த ஆலங்குடி அருகே உள்ள கீழநெம்மக்கோட்டை அழகு மகன் சிவா ( வயது 40 ), தெற்கு பாதம்பட்டி ரத்தினவேல் மகன் செல்வம் (35 ), கலிபுல்லா நகர் மஜீத் மகன் அப்துல்லா ( 56), கலிப ல்லாநகர் காலனி கோவிந்தராஜன் மகன் ரவி (52) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து செல் போன்மற்றும் ரூ. 2,824 பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஜல்லிக்கட்டு காளையை விற்றதால் விரக்தி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருக்கட்டளையை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் நரேந்திர குமார் (வயது 22). இவர் சம்பவத்தன்று இரவு மாங்கனாம்பட்டி கோவில் வனப்பகுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தான் வளர்த்து வந்த ஜல்லிக் கட்டு காளையை அவரது தந்தை விற்பனை செய்த விரக்தியில் சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.
- சாலையில் தேங்காய் உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கொப்பரைகளை அரசே கொள்முதல் செய்ய கோரி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி பகுதிகளில் தேங்காய் உற்பத்தி அதிகமாக உள்ளது. கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதகளில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்கள் மற்றும் தென்னை உற்பத்தி பொருட்கள் ெ வளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது, ஆனால் கஜா புயலில் ஒட்டுமொத்தமாக தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது.
இந்த இழப்பிலிருந்து விவசாயிகள் மீள கடன் வாங்கி மீண்டும் ெதன்னங்கன்றுகளை நட்டு வளர்ப்பதுடன் புயலில் எஞ்சிய மரங்களையும் பராமரித்து வருகின்றனர்.
உற்பத்தியாகும் தேங்காய்களை விற்று வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தும் நிலை மாறி தேங்காய் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தென்னை விவசாயிகள் கீரமங்கலத்தில் தேங்காய் கிலோ ரூ.50க்கும், கொப்பரை கிலோ ரூ.150க்கும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். பள்ளிகள், ேரஷன் கடைகளில் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் எண்ணெய்களுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன் தலைமையில் தேங்காய்களை சாலையில் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- அறந்தாங்கியில் ரூ.22 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
- விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் 22 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு சார்பில் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் அறந்தாங்கி அருகே அரசர்குளம், வல்லவாரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிமெண்ட் மற்றும் தார்ச்சாலைகளின் பணிகளை சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார். மேலும் ஆயிங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது கோடை நெல் விவசாயம் அதிக மகசூலை தந்துள்ளது, அதற்கு உரிய விலை கிடைத்திடும் வகையில் அப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்துதர விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். விவசாயிகள் கோரிக்கையையடுத்து ஆயிங்குடியில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மெய்யநாதன் விவசாயிகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில்ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரிசண்முகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் சரிதாமேகராஜன், நகர்மன்றத் துணைத் தலைவர் முத்து, கோட்டாட்சியர் சொர்ணராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீதும் சோதனைகள் நடைபெற்று வந்தன.
- தி.மு.க. அமைச்சர்கள் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு அமைகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இன்று சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்களது வீடுகளில் சோதனை செய்யும் போது பழிவாங்கும் நடவடிக்கை என்று தான் கூறுவார்கள், இது இயல்பான ஒன்று. ஆனால் தற்போது முன்னாள் அமைச்சர் வீடுகளில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. பழிவாங்கும் அரசாக தி.மு.க. அரசு செயல்படவில்லை.
அதேபோல் அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பத்துக்கும், இந்த ரெய்டுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்கள் அளித்து வருகின்றனர். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மை குறித்து தெரிந்த பிறகுதான் முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஐந்து முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்கு சோதனை நடத்தப்பட்டு அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஆய்வுக்கு பிறகு நீதிமன்றத்தில் அவை தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீதும் சோதனைகள் நடைபெற்று வந்தன. அதை தி.மு.க. அமைச்சர்கள் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு அமைகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. மீதமுள்ள ஐந்து பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இவர்களை விடுதலை செய்வதற்கு உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.
அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யும் பட்சத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும்.
தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து சேர நாடு, பாண்டியநாடு என பெயரிடப்படும் என்று முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிகார பலத்தை வைத்து அவர்கள் எத்தனை நாடாக வேண்டுமானாலும் பிரிக்கலாம், ஆனால் திராவிட மாடல் ஆட்சியை அசைத்து கூட அவர்களால் பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.






