என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.22 லட்சத்தில்"

    • அறந்தாங்கியில் ரூ.22 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
    • விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் 22 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

    தமிழக அரசு சார்பில் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் அறந்தாங்கி அருகே அரசர்குளம், வல்லவாரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிமெண்ட் மற்றும் தார்ச்சாலைகளின் பணிகளை சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார். மேலும் ஆயிங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது கோடை நெல் விவசாயம் அதிக மகசூலை தந்துள்ளது, அதற்கு உரிய விலை கிடைத்திடும் வகையில் அப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்துதர விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். விவசாயிகள் கோரிக்கையையடுத்து ஆயிங்குடியில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மெய்யநாதன் விவசாயிகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில்ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரிசண்முகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் சரிதாமேகராஜன், நகர்மன்றத் துணைத் தலைவர் முத்து, கோட்டாட்சியர் சொர்ணராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×