என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் தேங்காய் உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டம்
    X

    சாலையில் தேங்காய் உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டம்

    • சாலையில் தேங்காய் உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கொப்பரைகளை அரசே கொள்முதல் செய்ய கோரி நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி பகுதிகளில் தேங்காய் உற்பத்தி அதிகமாக உள்ளது. கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதகளில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்கள் மற்றும் தென்னை உற்பத்தி பொருட்கள் ெ வளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது, ஆனால் கஜா புயலில் ஒட்டுமொத்தமாக தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது.

    இந்த இழப்பிலிருந்து விவசாயிகள் மீள கடன் வாங்கி மீண்டும் ெதன்னங்கன்றுகளை நட்டு வளர்ப்பதுடன் புயலில் எஞ்சிய மரங்களையும் பராமரித்து வருகின்றனர்.

    உற்பத்தியாகும் தேங்காய்களை விற்று வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தும் நிலை மாறி தேங்காய் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தென்னை விவசாயிகள் கீரமங்கலத்தில் தேங்காய் கிலோ ரூ.50க்கும், கொப்பரை கிலோ ரூ.150க்கும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். பள்ளிகள், ேரஷன் கடைகளில் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் எண்ணெய்களுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன் தலைமையில் தேங்காய்களை சாலையில் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×