search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    புதுக்கோட்டையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • புதுக்கோட்டையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பழைய அ.தி.மு.க.வாக செயல்பட வேண்டும்

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி பொதுசெயலாளர் ஆவது உறுதி என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சட்டரீதியான நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில் பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகிற நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் முக்கிய நிர்வாகிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் புதுக்கோட்டையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அ.தி.மு.க.வினர் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அறந்தாங்கி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதி தலைமை தாங்கி பேசினார். புதுக்கோட்டை நகராட்சி முன்னாள் தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். கண்டன கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். அதன்பின் ரெத்தினசபாபதி நிருபர்களிடம் கூறுகையில், ''வருகிற 11-ந் தேதி கூட்டப்படும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கண்டிப்பாக செல்லாது. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீா்செல்வம் தான். சசிகலா, டி.டி.வி. தினகரன் என அனைவரும் ஒருங்கிணைந்து பழைய அ.தி.மு.க.வாக செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம்' என்றார்.

    ராஜசேகரன் கூறுகையில், ''அ.தி.மு.க.வில் கட்சி நலனுக்காக இரட்டை தலைமை கொண்டு வரப்பட்டது. தற்போது ஒற்றை தலைமை ஏன் தேவை. 1½ கோடி தொண்டர்கள் உள்ளதில் நிர்வாகிகள் ஆயிரம் பேர் மட்டும் தான் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தான் உள்ளனர்'' என்றார்.

    Next Story
    ×