என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்
- அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது
- தேரோட்டத்தில் ஊர் முக்கியஸ்தர்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார் கோவிலில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற பழமையும், பெருமையும் வாய்ந்த ஆத்மநாத சுவாமி கோவில்.
இங்கு ஆனிதிருமஞ்சனம் மற்றும் மார்கழி மாத திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தேரோட்டம் நடைபெறும்.
இந்தாண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 25.06.2022 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் மாணிக்கவாசக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆபாரதனை மற்றும் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஊர் முக்கியஸ்தர்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவிலை சுற்றி நான்கு வீதிகளில் வலம் வந்த திருத்தேரில் மாணிக்கவாசகர் சாமி பவனி வந்து அருள்பாலித்தார்.
விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






