என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொடிக்கால்பட்டி குளம் தூர்வாரும் பணி- கலெக்டர் நேரில் ஆய்வு
  X

  கொடிக்கால்பட்டி குளம் தூர்வாரும் பணி- கலெக்டர் நேரில் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொடிக்கால்பட்டி குளம் தூர்வாரும் பணியினை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
  • 75 குளங்களில் பணிகள் நடை முறைப்படுத்தப்படவுள்ளது

  புதுக்கோட்டை :

  புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், விராலூர் ஊராட்சி, கொடிக்கால்பட்டி குளத்தில் ஐடிசி நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.5,22,470 மதிப்பில் குளம் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

  ஒன்றிய அரசின் அம்ருத் சரோவர் திட்டத்தின்படி, ஐடிசி நிறுவன பங்களிப்புடன் இத்திட்டம் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை வீணாக்காமல் சேமித்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும். விராலிமலையில் தொடங்கப்பட்ட இத்திட்ட பணிகளின்கீழ், மாவட்டத்தில் உள்ள 75 குளங்களில் பணிகள் நடை முறைப்படுத்த ப்படவுள்ளது.

  விராலிமலையில் இயங்கி வரும் தனியார; உணவு பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஐடிசி நிறுவனம், மிஷன் சுனேரா கல் மற்றும் தானம் அறக்கட்டளை ஆகியோர; பங்களிப்புடன், கொடிக்கால்பட்டி குளம் தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு துவக்கி வைத்தார்.

  இந்நிகழ்ச்சியில் உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு.மணி, ஐடிசி நிறுவன மேலாளர் சரவணன், பத்மநாதன் (மனிதவளம்), தான அறக்கட்டளை சிஇஒ வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், ரவிச்சந்திரன், ஊராட்சிமன்றத் தலைவர் போஸ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  Next Story
  ×