என் மலர்
புதுக்கோட்டை
- தனியார் ஆஸ்பத்திரி நர்சை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
- ஊசி போட்ட இடத்தில் குழந்தைக்கு வீக்கம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அத்திப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரவேல் (வயது 38). இவரது குழந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குமரவேல் குழந்தையை விராலிமலை காமராஜர் நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.அதைத்தொடர்ந்து டாக்டர் பரிசோதித்து விட்டு மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கினார். மேலும் நர்ஸ் ஒருவர் குழந்தைக்கு ஊசி போட்டார்.இந்த நிலையில் ஊசி செலுத்திய இடத்தில் குழந்தைக்கு வீக்கம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குமாரவேல் மறுநாள் அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பணியில் இருந்த நர்ஸ் மல்லிகா(32) என்பவரை குச்சியால் தாக்கி விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து அந்த நர்ஸ் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பெரியநாயகிபு ரத்தை சேர்ந்த சுப்பையா மகன் லோகநாதன் (வயது 47) விவசாயியான இவருக்கு அவ்வப்போது வயிற்று வலி இருந்து வந்ததாக கூற ப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வலி அதிகமாக இருந்ததால், மனவிரக்தியில் பூச்சி மருந்ததை மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்து வ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக லோகநாதன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சப். இன்ஸ்பெக்டர் பாலசுப் பிரமணியன் வழக்குப்பதிவு செய்து மேல் விசரானை நடத்தி வருகிறார்.
- முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- மகனுடன் கருத்து வேறுபாடு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள களபம் ஊராட்சி துவரன்கொல்லைப்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் பழனிவேல் (வயது 65 ) விவசாயியான இவருக்கும், மகனுடன் கருத்து வேறுபாடு நடந்துள்ளது. இதனால் மன விரக்தியில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை அருந்தி மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பழனிவேல் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீ சில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசரானை நடத்தி வருகிறார்.
- மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தசை இயக்க பயிற்சி வழங்கப்பட்டது.
- உதவி திட்ட அலுவலர் நேரில் ஆய்வு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் வட்டாரவள மையத்தில் மாற்றுத்திறனாளி குழந் தைகளுக்கு தசை இயக்க பயிற்சி வழங்கப்பட்டது. இதனை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும் போது,
திருவரங்குளம் வட்டார வள மையத்தில் மொத்தம் 50 மாணவர்கள் தசை இயக்க பயிற்சிக்காக வருகிறார்கள்.இம் மாணவர்கள் பயிற்சி யின் மூலம் தங்களது உடல் இயக்கத்தில் முன்னேற்றம் கண்டு இருக்கிறார்கள்.
வீடு சார் பயிற்சியில் மொத்தம் 27 மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு இயன்முறை மருத்துவர்கள், அவரவர்கள் வீடுகளுக்கு சென்று தசை இயக்க பயிற்சி வழங்கி அதன் மூலம் மாணவரின் உட ல் இயக்கத்தில் முன்னேற்றம் காண பெரிதும் காரணமாக இருந்து வருகிறார் என்றார்.
நிகழ்ச்சியின் போது திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் கருணாகரன், வளமைய மேற்பார்வையாளர் தங்கமணி, இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- நூறு நாள் பணி வழங்காததை கண்டித்து
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களுக்கு பணி வழங்காததை கணடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒலியமங்கலம் ஊராட்சியில் பணிபுரியும் மகாத்மாகாந்தி நூறுநாள் திட்டப் பணியாளர்களுக்கு கடந்த ஒரு மாதகாலமாக பணி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தியும் நூறுநாள் திட்டப் பணியாளர்கள் ஒலியமங்கலம் - புதுக்கோட்டை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சென்ற அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் பணி வழங்கப்படும் என்று கூறி பேச்சு வார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது
- விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கோட்டத்திற்குட்பட்ட விவசாய மி ன் நுகர்வோருக்கான குறைதீர்க்கும் முகாம் ஆலங்குடி தபால் நிலை யம் அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வைபொறியாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது.
கோட்ட செயற்பொறியாளர் நடராஜன், நகரம் உட் கோட்ட உதவி செயற்பொறியாளர் பிருந்தாவனன் உதவி செயற்பொ றியாளர் வளர்ச்சி மதிவாணன், ஆகியோர்களது முன்னிலை யில் விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்கள் மூலமாக வழங்கியதை பெற்றுக்கொண்டார்கள்.
முகாமில் மின்சாரம் வழங்க முடியாத விவசாயிகளுக்கு சில இடப் பி ரச்சினை உள்ளவர்களுக்கும் அதற்குரிய தீர்வு விளககப்பட்டது. மேலும் விவசாயிகளின் நலன் கருதி மின் வாரிய அலுவலர்கள் 24 மணி நேரமும் தங்குதடையின்றி விவசாயிகளுக்கு சேவை செய்வது இவைகளை தலைமை அதிகாரி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். விவசாயிகள் தங்களது குறைகளை அலுவலகத்தில் தெரிவித்து பு கார் மனு கொடுக்கலாம் என நடராஜன் விவசாயிகளிடம் கூறினார். சுமார் 300க்கும் அதிகமானோர் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
- போலி ரெயில் டிக்கெட்டுகள் அச்சிட்டு விற்பனை செய்யப்பட்டது
- 4 பிரிவுகளின் கீழ் தட்சிணாமூர்த்தி மீது வழக்கு பதிவு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருவரங்குளம் மெயின் வீதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 42). இவர் புதுக்கோட்டையில் மேலராஜவீதியில் சங்கரா என்ற பெயரில் கமப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் போலியாக ரெயில் டிக்கெட் கொடுத்ததாக கூறப்படுகிறது.
8 பயணிகளுக்கு திருச்சியிலிருந்து சென்னை செல்லவும், சென்னையிலிருந்து திருப்பதி செல்லவும் டிக்கட் வழங்கியுள்ளார்.
இதையடுத்து ஏமாற்றப்பட்ட ரெயில் பயணிகள் ரெயில்வே பாதுகாப்பு படையினர் உதவியை நாடினர்.
அதை தொடர்ந்து மதுரை ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த மண்டல பாதுகாப்பு ஆணையர் அன்பரசு கொடுத்த புகாரின்பேரில் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் 4 பிரிவுகளின் கீழ் தட்சிணாமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார். இவர் மீது ஏற்கனவே 2020ல் மதுரையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.
- ஆசிரியை கன்னத்தில் அறைந்த போதை ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
- வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாணக்கன்காட்டை சேர்ந்தவரும் தற்போது ஆலங்குடி மாருதி நகரில் வசித்து வரும் கலையரசன் மனைவி சித்திராதேவி (வயது 47 ) இவர் ஆலங்குடி அருகே உள்ள கனியான்கொல்லை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
வழக்கம்போல் இவர் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது வாணக்கன்காடு வடக்கு பகுதியை சேர்ந்த சித்திரைவேல் (44), என்பவர் குடிபோதையில் பளளியில் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அங்கு நாற்காலியில் அமர்நது இருந்த ஆசிரியை சித்ராதேவியை எழுந்திரு என்று கூறி கன்னத்தில் அறைந்து கொலை மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சித்ராதேவி வடகாடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான சித்திரவேலுவை வலைவீசி தேடி வருகின்றனர்.
- விவசாயிகள் அதிக லாபம் பெற நேரடி நெல் விதைப்பு என்று வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
- அரிசி கஞ்சியுடன் கலந்து, நிழலில் உலர்த்தி விதைக்கலாம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொறுப்பு) சக்திவேல் தெரிவிக்கையில்,
புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்போது போதுமான அளவு மழை பெய்துள்ளது. இந்த மழைநீரைப் பயன்படுத்தி, விவசாயிகள் கோடை உழவு செய்து, நிலத்தைத் தயார் நிலையில் வைத்துள்ளனர். நேரடி நெல் விதைப்பில், நாற்றங்கால் அமைத்துப் பராமரிக்க வேண்டிய தேவை இல்லாததால், இதற்கான பராமரிப்புச் செலவு நீர்ச் செலவு, தொழிலாளர் செலவினம் குறைந்து, விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.
நேரடி நெல் விதைப்பில், விதைகளை விதைப்பிற்கு முன்னதாக, அசோஸ்பைரில்லம் (நெல்) மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகிய உயிர் உரங்களை, தலா 1 பொட்டலம் (200 கிராம்) வீதம் ஒரு ஏக்கருக்குத் தேவையான விதையுடன், கலந்து தேவையான அளவு அரிசிக் கஞ்சியுடன் கலந்து, நிழலில் உலர்த்தி, விதைக்கலாம்.
ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், கடைசி உழவில் இட்டு, நிலத்தை சமப்படுத்தி, விதைப்பு செய்ய வேண்டும். மண்பரிசோதனை ஆய்வு முடிவின்படி, இரசாயன உரம் இடுவது அவசியம். மண்பரிசோதனை செய்ய இயலாத நிலையில், பொதுப் பரிந்துரையாக ஏக்கர் ஒன்றுக்கு 60 கிலோ தழைச்சத்து, 24 கிலோ மணிச்சத்து, 24 கிலோ சாம்பல் சத்தும் இடலாம். பரிந்துரைக்கப்படும் அளவில் முழு அளவு மணிச்சத்தினையும், பாதியளவு சாம்பல் சத்தினையும் அடியுரமாக இட வேண்டும். நேரடி நெல் விதைப்பில், அடியுரமாக தழைச்சத்து இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நேரடி நெல் விதைப்பில், 5 கிலோ நெல் நுண்ணூட்டச் சத்தினை, தேவையான அளவு மணலுடன் கலந்து, விதைத்தவுடன் ஒரு ஏக்கர் பயிரில் மேலாக இட வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், சம்பா பருவத்தில், நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளும் இடங்களில், மேற்கண்ட தொழில் நுட்பங்களைச் செயல்படுத்தி, உயர் விளைச்சல் பெற வேண்டும் என்றார்.
- பள்ளி மாணவன் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- 9-ம் வகுப்பு படித்து வருகிறார்
புதுக்கோட்டை
அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் அருண்பிரபு (வயது 14). இவர் மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவருடைய தாய் முத்துலட்சுமி திங்கட்கிழமை கண்டிப்பாக பள்ளிக்குச் செல்ல வேண்டும் என கூறி கண்டித்துள்ளார். இந்நிலையில் தனது அம்மாவுடன் நேற்று முன்தினம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அருண்பிரபு வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் மாலை வரை அவர் வீட்டிற்கு வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிைடக்கவில்லை. இதுகுறித்து அரிமளம் போலீஸ் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில், அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முத்துமாரியம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடந்தது
- பூஜைக்கு தேவையான பொருட்களை வழங்கினார்கள்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள முத்து மாரியம்மனுக்குத் திருவிளக்கு பூஜையும், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு கருவரை முன்பு யாகசாலை அமைக்கப்பட்டது. பின்னர் முத்துமாரியம்மன் மற்றும் சின்ன சின்ன மாரிய ம்மனுக்கு மஞ்சள், சந்தனம், திரவியம், பால், தயிர், பன்னீர்,தேன், கரும்புச் சாறு போன்ற பொருட்களால் அபி ஷேகம் நடைபெற்றது.அம்மன்கருக்கு பட்டுடுத்தி மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராத னை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில். 201 பெண்கள் கலந்துகொண்டனர். விழாக் கமிட்டியாரால் தேங்காய், பழம், பத்தி, பூ, நெய், திரி தீப்பெட்டி போன்ற பூஜைக்கு தேவையான பொருட்களை வழங்கினார்கள். சிவாச்சிவச்சாரியார் மந்திரங்கள் சொல்ல விளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.
- வெட்டிய மரம் விழுந்து முதியவர் பலியானார்
- மரம் வெட்டும் தொழில் செய்து வந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீரராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 65), இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர், பணியிடத்தில் பலாமரம் ஒன்றை வெட்டியுள்ளார். அப்போது மரம் அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை,
அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நடராஜன் உயிரிழந்தார்.இச் சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்த்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






