என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம்
    X

    விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம்

    • விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது
    • விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கோட்டத்திற்குட்பட்ட விவசாய மி ன் நுகர்வோருக்கான குறைதீர்க்கும் முகாம் ஆலங்குடி தபால் நிலை யம் அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வைபொறியாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது.

    கோட்ட செயற்பொறியாளர் நடராஜன், நகரம் உட் கோட்ட உதவி செயற்பொறியாளர் பிருந்தாவனன் உதவி செயற்பொ றியாளர் வளர்ச்சி மதிவாணன், ஆகியோர்களது முன்னிலை யில் விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்கள் மூலமாக வழங்கியதை பெற்றுக்கொண்டார்கள்.

    முகாமில் மின்சாரம் வழங்க முடியாத விவசாயிகளுக்கு சில இடப் பி ரச்சினை உள்ளவர்களுக்கும் அதற்குரிய தீர்வு விளககப்பட்டது. மேலும் விவசாயிகளின் நலன் கருதி மின் வாரிய அலுவலர்கள் 24 மணி நேரமும் தங்குதடையின்றி விவசாயிகளுக்கு சேவை செய்வது இவைகளை தலைமை அதிகாரி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். விவசாயிகள் தங்களது குறைகளை அலுவலகத்தில் தெரிவித்து பு கார் மனு கொடுக்கலாம் என நடராஜன் விவசாயிகளிடம் கூறினார். சுமார் 300க்கும் அதிகமானோர் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×