என் மலர்
புதுக்கோட்டை
- புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி தனியார் மில் அருகில் மளிகை ஸ்டோரில் புகையிலை பொட்டலம் விற்பதாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கல்லாலங்குடி பாரதி நகரைச்சேர்ந்த அப்துல் காதர் மகன் சம்சுதீன் ( வயது 39) மற்றும் வடக்கு கொத்தகோட்டையை சேர்ந்த வீரையா மகன் முருகேசன் (வய து 37) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகையிலை பொட்டலம் 26 மற்றும் ரூபாய் 1290 இவைகளை பரிமுதல் செய்து ஆலங்குடி காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
- தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- கூலி வேலை பார்த்து வந்தார்
புதுக்கோட்டை
காரைக்குடி கழனிவாசலை சேர்ந்தவர் ஷேக் சுல்தான் (வயது 40). இவர் ஆதனூர் அருகே கோவில்பட்டியில் கூலி வேலை பார்த்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த ஷேக் சுல்தான் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குறைந்த வட்டி கடனுக்கு ஆசைப்பட்டு ரூ.2 லட்சத்தை தொழிலாளி இழந்தார்
- புதுக்கோட்டையில் தொடர் கதையாகும் ஆன் லைன் மோசடி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டிணம் ராம் நகரை சேர்ந்தவர் கனிகுமார் (வயது32). கூலி தொழிலாளியான இவரின் கைப்பேசிக்கு, ஒருசதவீத வட்டியில் கடன் தருவதாக குறுந்தகவல் வந்துள்ளது.அதனை நம்பிய கனிகுமார் குறுந்தகவல் அனுப்பப்பட்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு கடன் விபரம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர்கள் தாங்கள் கேட்கும் ஆவணங்கள் உள்ளிட்டவைகளை கொடுத்தால் உங்களுக்கு கடன் வழங்கப்படும் என பதிலளித்துள்ளனர்.
அதனையடுத்து அவர்கள் கேட்ட ஆதார் நகல், பான் அட்டை நகல் போன்றவற்றை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பியுள்ளார். மேலும் ஆவணங்கள், டிடி, இன்சூரன்ஸ் போன்றவைகளுக்காக அவர்கள் கேட்ட தொகையை ரூ.2 லட்சம் வரை தவணை முறையில் அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் மர்ம நபர்களிடமிருந்து எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. அதனையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கனிகுமார், சம்பவம் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் துணை ஆய்வாளர் கவிதா மற்றும் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் தருவதாக கூறி ஆன்லைன் மூலம் விழிப்புணர்வு இல்லாத பொதுமக்கள் ஏமாற்றப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
- தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
தற்பொழுது தேங்காய் கொப்பரையின் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 550 மெ.டன் அரவை கொப்பரையும், அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 550 மெ.டன் அரவை கொப்பரையும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைய ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினை அணுகி தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் கொப்பரைக்கான தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த கொப்பரை கொள்முதல் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- அய்யனார் கோவில் வருடாபிஷேக விழா நடந்தது
- அன்னதானம் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ பூர்ணகலா புஷ்ப கலா சமேத ஸ்ரீ ஐயனார் ஆலய வருடாபிஷேக விழா நடைபெற்றது. கோவிலை சுற்றியுள்ள பைரவர்நாகர், மதுரைவீரன், காலியாகப்பர், கொம்புக்காரர், செம்மீனேஸ்வரர், கருமுனீஸ்வரர், முத்துமருங்கர், பட்டாணி பெரி கருப்பன் மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர்அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாச்சிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
- கடை திறக்க தாமதமானதால் டாஸ்மாக்கை மது பிரியர்கள் முற்றுகையிட்டனர்
- போலீசார் சமாதானம் செய்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மரமடக்கி சாலையில் இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. நகரை விட்டு ஒதுக்குப்பு றமாக இந்த கடைகள் அமைந்துள்ளதால் சுற்றுவட்டாத பகுதிகளை சேர்ந்த
மது பிரியர்கள் அதிகம் இங்கு வந்து மது அருந்தி செல்வார்கள். பொதுவாக இந்த டாஸ்மாக் கடைகளுக்கு காலை 10 மணி முதலே குடிமகன்கள் வர தொடங்கிவிடுவார்கள்.
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் 11:30 மணிமுதல் மது பிரியர்கள், கடை திறப்பதற்காக காத்திருந்த நிலையில், 12 மணிக்கு மேல் ஆகியும் கடை திறக்கபடவில்லை. இதனால் மது பிரியர்கள் ஆத்திரமடைந்து கடையை முற்றுகையிட்டனர்.
இதனை அறிந்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். இவர்களை கண்டதும் மது பிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானபடுத்தி அங்கிருந்து அவர்களை கலைந்து போக செய்தனர். இதனை தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாக கடை திறக்கப்பட்டது. கடை விற்பனையாளர்கள் விற்பனை பணத்தை செலுத்த தாமதமானதால், கடை திறக்க தாமதமானதாக தெரியவந்தது.மதுபிரியர்களின் கடை முற்றுகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- 10-ம் வகுப்பு படித்து வந்தார்
புதுக்கோட்டை
கறம்பக்குடி அருகே உள்ள மேல மழையூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், டைலர். இவரது மகள் பவானி (வயது 14). இவர் மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பவானி தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மழையூர் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவி எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்."
- மளிகைக்கடைக்காரரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- பணத்தை கொடுக்காமல் தகராறு செய்துள்ளார்
புதுக்கோட்டை
விராலிமலை ஒன்றியம், நீர்பழனி ஊராட்சிக்குட்பட்ட காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாமிஅய்யா (வயது 45). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை அதேஊரை சேர்ந்த சக்திவேல் என்பவர் சாமிஅய்யாவின் கடைக்கு சென்று பொருட்களை வாங்கியுள்ளார். பின்னர் அதற்கான பணத்தை கொடுக்காமல் தகராறு செய்ததுடன் சாமி அய்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மண்டையூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து மளிகைக்கடைக்காரரை தாக்கிய சக்திவேலை வலைவீசி தேடி வருகிறார்.
- 10 ஆடுகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் ஊராட்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 53). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் வீட்டின் பின்புறத்தில் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 10 ஆடுகளை மர்ம கும்பல் திருடி சென்றது. இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆட்டின் உரிமையாளர் ஆறுமுகம், செம்பட்டிவிடுதி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- அரசு பள்ளியில் ஐம்பெரும் விழா நடைபெற்றது
- மாணவர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டும்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆத்தங்கரை விடுதி அரசு உயர்நிலை பள்ளி மற்றும் தொடக்க பள்ளி இணைந்து துளிர் இல்லம் தொடக்க விழா, அண்ணா பிறந்த நாள் விழா, உலக பொறியாளர் தினம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு என ஜம்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்றார். ஆத்தங்கரைவிடுதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி, கந்தர்வகோட்டை ஒன்றிய அறிவியல் இயக்க வட்டார தலைவர் ரகமதுல்லா வட்டார செயலாளர் சின்ன ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட தலைவர் வீரமுத்து, அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதற்கு மாணவர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க த்தின் புதுக்கோட்டை மாவட்ட இணை செயலாளர் சிவானந்தம், கந்தரவகோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல் லா, வட்டார செயலாளர் சின்ன ராஜா, தலைமை ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் பேசினர்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஆகியோர் செய்து இருந்தனர். கணித பட்டதாரி ஆசிரியர் நன்றி கூ றினார்.
- ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்
- இந்து மதத்தை இழிவாக பேசியதற்கு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சரக காவல் நிலையத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பட்டியல் அனி ஆடிட்டர் ராஜா தலைமையில், மாவட்ட அமைப்புசாரா பதிவு பொறுப்பாளர் குமார் மற்றும் வர்த்தக பிரிவு துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினியிடம் புகார் மனு அளித்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆராசா எம்.பி. இந்து மதத்தையும், இந்து மத மக்களையும், இந்து மத நம்பிக்கையையும் பற்றி தொடர்ந்து இழிவாகவும், அவமரியாதையாகவும், இந்து மத மக்களுக்கு எதிராகவும் பேசி வருகிறார்.இந்தியாவில் இருக்க கூடிய ஒட்டுமொத்த இந்த்துக்களையும் கொச்சை படுத்தும் விதமாக இழிவுபடுத்தி அறுவெறுக்கத்தக்க வார்த்தைகள் மற்றும் சர்வமத மக்களிடையேயான நல்லிணக்கத்தையும், நாட்டின் அமைதியையும் சீர்குலைக்கும் விதத்தில் தொடர்ந்து ஆ.ராசா பேசிவருகிறார்.எனவே இவர்மீது தண்டனைகுரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
- போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை:
விராலிமலை அருகே மாதிரிபட்டி பகுதியில் மது விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த வானதிராயன்பட்டி அத்திப்பள்ளத்தை சேர்ந்த மாமுண்டி மகன் கோபால் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்."






