என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக்கை முற்றுகையிட்ட மது பிரியர்கள்"

    • கடை திறக்க தாமதமானதால் டாஸ்மாக்கை மது பிரியர்கள் முற்றுகையிட்டனர்
    • போலீசார் சமாதானம் செய்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மரமடக்கி சாலையில் இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. நகரை விட்டு ஒதுக்குப்பு றமாக இந்த கடைகள் அமைந்துள்ளதால் சுற்றுவட்டாத பகுதிகளை சேர்ந்த

    மது பிரியர்கள் அதிகம் இங்கு வந்து மது அருந்தி செல்வார்கள். பொதுவாக இந்த டாஸ்மாக் கடைகளுக்கு காலை 10 மணி முதலே குடிமகன்கள் வர தொடங்கிவிடுவார்கள்.

    இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் 11:30 மணிமுதல் மது பிரியர்கள், கடை திறப்பதற்காக காத்திருந்த நிலையில், 12 மணிக்கு மேல் ஆகியும் கடை திறக்கபடவில்லை. இதனால் மது பிரியர்கள் ஆத்திரமடைந்து கடையை முற்றுகையிட்டனர்.

    இதனை அறிந்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். இவர்களை கண்டதும் மது பிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானபடுத்தி அங்கிருந்து அவர்களை கலைந்து போக செய்தனர். இதனை தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாக கடை திறக்கப்பட்டது. கடை விற்பனையாளர்கள் விற்பனை பணத்தை செலுத்த தாமதமானதால், கடை திறக்க தாமதமானதாக தெரியவந்தது.மதுபிரியர்களின் கடை முற்றுகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×