அரசு பள்ளியில் ஐம்பெரும் விழா

அரசு பள்ளியில் ஐம்பெரும் விழா நடைபெற்றது மாணவர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டும்
அரசு பள்ளியில் ஐம்பெரும் விழா
Published on

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆத்தங்கரை விடுதி அரசு உயர்நிலை பள்ளி மற்றும் தொடக்க பள்ளி இணைந்து துளிர் இல்லம் தொடக்க விழா, அண்ணா பிறந்த நாள் விழா, உலக பொறியாளர் தினம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு என ஜம்பெரும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்றார். ஆத்தங்கரைவிடுதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி, கந்தர்வகோட்டை ஒன்றிய அறிவியல் இயக்க வட்டார தலைவர் ரகமதுல்லா வட்டார செயலாளர் சின்ன ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட தலைவர் வீரமுத்து, அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதற்கு மாணவர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க த்தின் புதுக்கோட்டை மாவட்ட இணை செயலாளர் சிவானந்தம், கந்தரவகோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல் லா, வட்டார செயலாளர் சின்ன ராஜா, தலைமை ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் பேசினர்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஆகியோர் செய்து இருந்தனர். கணித பட்டதாரி ஆசிரியர் நன்றி கூ றினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com