என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைந்த வட்டிகடன்"

    • குறைந்த வட்டி கடனுக்கு ஆசைப்பட்டு ரூ.2 லட்சத்தை தொழிலாளி இழந்தார்
    • புதுக்கோட்டையில் தொடர் கதையாகும் ஆன் லைன் மோசடி

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டிணம் ராம் நகரை சேர்ந்தவர் கனிகுமார் (வயது32). கூலி தொழிலாளியான இவரின் கைப்பேசிக்கு, ஒருசதவீத வட்டியில் கடன் தருவதாக குறுந்தகவல் வந்துள்ளது.அதனை நம்பிய கனிகுமார் குறுந்தகவல் அனுப்பப்பட்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு கடன் விபரம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர்கள் தாங்கள் கேட்கும் ஆவணங்கள் உள்ளிட்டவைகளை கொடுத்தால் உங்களுக்கு கடன் வழங்கப்படும் என பதிலளித்துள்ளனர்.

    அதனையடுத்து அவர்கள் கேட்ட ஆதார் நகல், பான் அட்டை நகல் போன்றவற்றை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பியுள்ளார். மேலும் ஆவணங்கள், டிடி, இன்சூரன்ஸ் போன்றவைகளுக்காக அவர்கள் கேட்ட தொகையை ரூ.2 லட்சம் வரை தவணை முறையில் அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் மர்ம நபர்களிடமிருந்து எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. அதனையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கனிகுமார், சம்பவம் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் அடிப்படையில் துணை ஆய்வாளர் கவிதா மற்றும் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் தருவதாக கூறி ஆன்லைன் மூலம் விழிப்புணர்வு இல்லாத பொதுமக்கள் ஏமாற்றப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

    ×