என் மலர்
புதுக்கோட்டை
- செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடர்ந்து தமிழகத்தில் மகளிர் டென்னிஸ் போட்டி நேற்று நடந்து முடிந்துள்ளது.
- இந்தியாவிலேயே விளையாட்டு தலைநகரமாக சென்னையை மாற்றுவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர்.
இதையடுத்து அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடர்ந்து தமிழகத்தில் மகளிர் டென்னிஸ் போட்டி நேற்று நடந்து முடிந்துள்ளது. வரும் காலங்களில் உலக அளவில் பல்வேறு போட்டிகள் தமிழகத்தில் நடப்பது நடைபெறுவதற்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மதுரையில் உலகத்தரம் வாய்ந்த அளவில் ஜல்லிக் கட்டு மைதானம் கொண்டு வரப்பட உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்க உள்ளது. ஜல்லிக்கட்டை விளையாட்டாக மாற்றுவதற்கு விரைவில் சட்டத்தில் விதிகளை திருத்தி சட்ட முன் வரைவு கொண்டு வரப்படும்.
இந்த ஆண்டு வழக்கம் போல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். வரும் காலங்களில் ஜல்லிக்கட்டை ஒரு விளையாட்டாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். நெகிழி பயன்பாடு ஒழிப்பது என்பது மக்கள் முன் வந்தால் மட்டுமே முடியும். மக்கள் இயக்கமாக இதை மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது.
இந்தியாவிலேயே விளையாட்டு தலைநகரமாக சென்னையை மாற்றுவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாலிபர்களை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கே.ராசிமங்கலம் ஊராட்சி பரப்பான்காட்டை சேர்ந்த தேவா (வயது 23) மற்றும் கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பததை ஊராட்சியை சேர்ந்த ஆதிகிருஷ்ணன் (18) ஆகியோர் ஆலங்குடி அரச மரத்தடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது கீழநெம்மக்கோட்டையை சேர்ந்த வினோத், மேலநெம்மக்கோட்டையை சேர்ந்த பாலமுருகன் (26) ஆகியோர் மது போதையில் தேவா, ஆதிகிருஷ்ணன் ஆகியோரை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்கு பதிவு செய்து பாலமுருகன், வினோத் ஆகியோரை கைது செய்து, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்ற வியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
- கடைகளை உடைத்து கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணம், மடிக்கணினிகளை திருடி சென்றனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் ஊராட்சி இச்சடி கறம்பக்குடி சாலையில் உள்ள செட்டியாப்பட்டி விளக்கு சாலை அருகில் ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான தனியார் காம்ப்ளக்ஸ் ஒன்று உள்ளது. இந்த காம்ப்ளக்ஸ் கடையில் மூன்று கடைகள் வாடகைக்கு இயங்கி வருகின்றன. இந்நிலையில் மூன்று கடைகளில் கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பணம் , மடிக்கணினிகளை திருடி சென்று விட்டது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில், செம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து கடையை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
- வாலிபரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
- மது பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகில் ஆண்டிகுளம்.. எஸ் எஸ் தெருவை சேர்ந்த அரசப்பன் மகன் சங்கர்குமார் (வயது 40 ). இவர் தனது நண்பர்களுடன் ஆண்டிகுளம் மதுபான கடைக்கு சென்றார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பாத்தம்பட்டியை சேர்ந்த அழகு, பாலு, குமார் ஆகிய 3 ே பரும் சங்கர் குமாரைப் பார்த்து, தகாத வார்த்தைகளால் திட்டி, மது பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சங்கர் குமாரை, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
- மின்னல் தாக்கி இளம் பெண் பலியானார்
- வயலுக்கு சென்ற போது பரிதாபம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தகோட்டை ஊராட்சி பிரதகம்பாள்புறத்தைச்சேர்ந்த சாமிக்கண்ணு மகள் பிரியங்கா ( வயது 26) பட்டதாரியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது மழை பெய்துள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் பிரியங்கா அலறியுள்ளார். இவரின் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், பிரியங்காவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் கல்லணைக்கால்வாய் பாசனதார் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மறைந்த மூத்த நிர்வாகிகளுக்கு நினைவேந்தல் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
நாகுடி தனியார் மண்டபத்தில் சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சங்க நிர்வாகிகளாக சிறப்பாக செயலாற்றிய, மறைந்த சங்க செயலாளர் பழசுப்பையா, ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், துணை தலைவர் ஆத்மநாதன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு நினைவு கேடயம் மற்றும் தென்னங்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த 28 ஆயிரம் ஏக்கர் நில விவசாயிகளுக்கு உரிய பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், தனியார் கடைகளில் உரங்களின் விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது, இதனை அரசு கவனத்தில் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி அரசு நிர்ணயித்த விலையிலேயே கூட்டுறவு சங்கம் மூலம் கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும், 100 நாள் வேலை பணியாளர்களை, விவசாய காலங்களில், விவசாய பணிகளில் ஈ.டுபடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் முகமதுஇக்பால், மாதவன், இளைய ஜமீன்தார் ஜெயேந்திரன், ஒருங்கிணைப்பாளர் பொன்கணேசன், கௌரவ தலைவர் கணேசன், ஆலோசகர் ராமசாமி, பொருளாளர் கோவிந்தராஜ், சட்ட ஆலோசகர் சிவசுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கந்தர்வகோட்டை அடுத்த மட்டங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (58). முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்பொழுது சென்னை விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்தார்.
- கந்தர்வகோட்டையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மட்டங்கால் சென்றபோது கருப்பு கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை அடுத்த மட்டங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (58). முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்பொழுது சென்னை விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று கந்தர்வகோட்டையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மட்டங்கால் சென்றபோது கருப்பு கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள். திருநாவுக்கரசு உயிரிழப்புக்கு காரணமான வாகனத்தை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் கந்தர்வகோட்டை காவல் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை விபத்தில் பலியான திருநாவுக்கரசு உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக கந்தர்வகோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மதிவாணன் சாலையின் ஓரத்தில் கொட்டிக்கிடந்த ஜல்லிகற்கள் மீது விழுந்துள்ளார்.
- காலின் கட்டை விரல் பகுதியில் பலத்த காயம் அடைந்தார். அதனை தொடர்ந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பெருங்குடி ஆவணம் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 55). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினரை பார்ப்பதற்காக சொந்த ஊர் வந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், அறந்தாங்கியில் இருந்து பெருங்குடி ஆவணத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சுல்லனி என்ற இடத்தில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் குறுக்கே மாடு ஒன்று திடீரென்று பாய்ந்தது.
அப்போது மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மதிவாணன் சாலையின் ஓரத்தில் கொட்டிக்கிடந்த ஜல்லிகற்கள் மீது விழுந்துள்ளார். இதில் காலின் கட்டை விரல் பகுதியில் பலத்த காயம் அடைந்தார். அதனை தொடர்ந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு கால் பகுதியை சுத்தம் செய்து தையல் போடப்பட்டது.
அதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற அவருக்கு காலில் வலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த மதிவாணன் மறுநாள் தனியார் மருத்துவமனைக்கு சென்று காண்பித்துள்ளார். அப்போது கால் கட்டை விரல் பகுதியில் அடிபட்டதில் ஜல்லி கற்கள் இருப்பது ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டது.
தொடர் சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கற்களை அகற்றி மீண்டும் தையல் போட்டனர். விபத்தில் கால் கட்டை விரல் பகுதியில் அடிபட்டு ஜல்லி கற்கள் உள்ளே இருப்பதை கூட முறையாக கண்டறியாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 2 கடைகள் தீயில் எரிந்து நாசமானது.
- தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
புதுக்கோட்டை
விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாதிரிபட்டி பிரிவு சாலையில் 2 பெட்டிக்கடைகள் உள்ளன. நேற்று அதிகாலை 2 கடைகளும் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அந்த கடைகள் கீற்று கொட்டகையாக இருந்ததால் தீ மளவளவென்று பரவியது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இருப்பினும் கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அக்காளை கத்தியால் குத்திக்கொன்ற தம்பியை கைது செய்தனர்
- செய்வினை செய்ததாக கூறி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் அருகே உள்ள வைத்திக்கோவிலை சேர்ந்தவர் வடிவேலு (வயது 76), விவசாயி. இவரது மனைவி மாரிக்கண்ணு (55). இவருடைய பெரியப்பா சின்னையா மகன் குணசேகரன் (49). இவருக்கு திருமணமாகவில்லை. மேலும், இவர் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து உள்ளார். மாரிக்கண்ணு வீட்டின் அருகே வசித்து வந்த குணசேகரனுக்கு தம்பி என்ற முறையில் அவர் தினமும் சாப்பாடு வழங்கி வந்துள்ளார்.
இந்தநிலையில் ேநற்று காலை வீட்டின் வழியே மாரிக்கண்ணு சென்றபோது அவரை அழைத்த குணசேகரன் எனக்கு தினமும் சாப்பாட்டில் செய்வினை செய்து நீ தானே கொடுக்கிறாய் என கூறி திடீரென தனது கையில் வைத்திருந்த கத்தியால் அவரது வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்தபோது அவரது இடது கையிலும் வெட்டியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் அலறித்துடித்த மாரிக்கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர். பின்னர் அவர் கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டனர்.
- சிறுவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.
புதுக்கோட்டை
அன்னவாசல் ஒன்றியம் ரெங்கம்மாள்சத்திரம் பகுதியில் இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி தலைமையிலான குழுவினர் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 52 சிறுவர்-சிறுமிகள் அருகே உள்ள வடசேரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் அவர்களது பெற்றோரை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்ததோடு கல்வியின் அவசியத்தையும், கல்வி கற்பதால் குழந்தைகளின் எதிர்காலத்தில் ஏற்படும் மாற்றங்களையும் விளக்கி கூறினார். மேலும் சிறுவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.
- கோவிலில் திருடியவர்களை கண்டுபிடிக்க விநோத முயற்சி நடந்தது
- கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள குல மங்கலம் கோயில் உண்டியலை திருடியவர்களை கண்டுபடிக்க பழங்கால முறைப படி முக்காலி இயக்கி திருடர்களை கண்டுபிடிக்கும் விநோத முயற்சியில் நடைபெற்றது.
இதற்காக, மரத்தால் செய்யப்பட்ட முக்காலியை கோயிலில் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து, முக்காலியை இயக்குவதற்காக சிட்டங்காடு பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட பூசாரி நடராஜன் மந்திரங்கள் சொல்லி, முக்காலியை நகரவைத்து திருடனை கண்டு படிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முக்காலி நகர்ந்து திருடியவர்களை கண்டிபிடித்து கொடுக்கும் என கிராம மக்கள் இத்தகைய விநோத முயற்சியில் ஈடுபட்டதை ஏராள மான மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.






