என் மலர்
புதுக்கோட்டை
- விஷம் குடித்த வாலிபர் உயிரிழந்தார்
- குடும்பத்தில் கருத்து வேறுபாடு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி டவுன் தென்னகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன். (வயது 35) இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளன. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனம் விரக்தியில் இருந்து பத்மநாதன், விஷம் குடித்து மயங்கியுள்ளார். உடனே அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கறம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- ரூ.6 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக
புதுக்கோட்டை:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா ரெட்டக்குறிச்சி ஊராட்சி வேப்பர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி மகன் வடிவேல் (வயது 40).
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பள்ளத்திவிடுதி ஊராட்சி கீழக்கரும்பி ரான்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பழனிவேலு (வயது 28 ).
இவர்களுக்குள் ஏற்பட்ட பழகத்தில் வடிவேல் தனக்கு வெளிநாட்டில் ஆட்கள் இருக்கிறார்கள், உடனடியாக வேலை வாங்கிவிடலாம். ஆனால் அதற்கு ரூ.6லட்சம் தரவேண்டும் என்று பழனிவேலுவிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை நம்பிய பழனிவேல், அவர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் 4 தவணைகளாக ரூ. 6 லட்சத்தை அனுப்பியதாக தெரியவருகிறது.
இந்நிலையில் நாட்கள் கடந்தும், வேலை கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பழனிவேல், ஆலங்குடி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், வடிவேலுவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர் இது போன்று பல பேரிடம் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- 20 கிராம மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தும்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட குளத்துக்குடியிருப்பு, பெருநாவலூர், வீரமங்களம், பொன்னாலூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முக்கிய கடைவீதிகளுக்கு சென்று வர ஊராட்சி சார்பில் போடப்பட்டிருந்த ஆவுடையார்கோவில்-புதுவயல் தார்ச்சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சாலை போடப்பட்டு 5 ஆண்டுகளே ஆனாலும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவி வருவதாகவும், அவசர மருத்துவ காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் சென்று வரக்கூட முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதோடு மட்டுமல்லாது இவ்வழியாக வந்த அரசு பேருந்துகள் இவ்வழியாக வருவதில்லை. இதனால் பொதுமக்கள் நாங்கள் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றோம் என்று வேதனை தெரிவித்தனர்.
மேலும் இதனை வலியுறுத்தி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு 20 கிராம மக்கள் போக்குவரத்திற்காக உள்ள சாலையை விரிவுபடுத்தி செப்பனிட்டுத்தர கேட்டுக் கொண்டனர்.
- மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எம்.அப்துல்லா எம்.பி. தெரிவித்தார்.
- வெளியுறவுத்துறை மூலம் தொடர் முயற்சி
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நலத்திட்ட வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா கலந்துகொண்டு பள்ளி, மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் நூல்களை பரிசாக வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது மிகவும் மரியாதை உண்டு. ஏனென்றால் இன்று சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடிய அவர்களின் பிள்ளைகள் தான் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.
அவர்களது பெற்றோர்கள் கூட வீட்டில் பாடம் சொல்லிக் கொடுப்பது கிடையாது. பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது மட்டுமே தான். அதை நல்ல முறையில் கற்றுக் கொடுப்பது அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர்கள் இன்று தலையாய கடமையாக செய்து வருகின்றனர்.அவ்வாறு மாணவர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பதே சாதனை, தனியார் பள்ளியில் பாடம் கற்பது சாதனை அல்ல. அத்தகைய சாதனைக்குரியவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்களே.
தமிழகம் மூன்றில் ஒரு பங்கு வரிப்பணத்தை செலுத்தி வருகிறது தமிழகம் வளர்ந்த மாநிலமாக இருந்து வருகிறது. அதற்கு அடிப்படை காரணம் கல்வி கட்டமைப்பு தான். கல்வி உயர்வுதான் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு காரணம். இந்தியாவிலேயே வளர்ந்த மாநிலமாக தமிழகம் இன்று விளங்கிக் கொண்டிருக்கிறது . இந்தியாவிலேயே அதிகம் பேர் உயர்கல்வி பயின்று வருவது தமிழகத்தில்தான் என்று பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன பள்ளிக்கான கூடுதல் வகுப்பறை கட்டிடம் ஸ்மார்ட் கிளாஸ் போன்ற வளர்ச்சிப் பணிகள் இன்னும் ஆறு மாத காலங்களில் முழுமையாக முடித்து கொடுக்கப்படும்.
அயல்நாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் என்ற ஒரு வாரியத்தை தமிழக அரசு அமைக்க உள்ளது. இந்த வாரியம் மூலம் அங்கு வேலை பார்ப்பவர்கள் மற்றும் இங்குள்ள அவர்களுடைய குடும்பத்தினர் பாதுகாப்பு குறித்தும் அதை செயல்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
தமிழர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாட்டில் சிக்கிக்கொள்வது என்பது புது விஷயம் அல்ல, இது அடிக்கடி நடந்துள்ளது. அவர்களை மீட்டும் உள்ளோம். அதேபோன்று தற்போது மியான்மரில் உள்ள 19 நபர்களை மீட்க தூதரகத்திற்கு கடிதம் எழுதி உள்ளேன். தமிழக முதல்வரும் வெளியுறவுத் துறை மூலம் சீறிய முயற்சி எடுத்து வருகிறார்.விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழகத்திலிருந்து அயல்நாடுகளில் பணிபுரியும் தமிழர்களை பாதுகாக்கும் விதமாக அவர்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற தனித்துறையை இந்த அரசு அமைந்தவுடன் அதற்கு தனி அமைச்சரை நியமித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியது
புதுக்கோட்டை
கறம்பக்குடி நகர இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராஜாவை கைது செய்ய கோரி சீனிகடை முக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கருப்பையா தலைமை தாங்கினார். இதில் இந்து முன்னணி, பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்."
- தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45). இவர் நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டை மேல 5-ம் வீதியில் உள்ள நகராட்சி குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
- பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 331 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர்.
இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்ளைகை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், ஒரு பயனாளிக்கு ரூ.8,500 மதிப்புடைய மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.14,000 மதிப்புடைய தக்க செயலிகளுடன் கூடிய கைப்பேசியும், கலெக்டர் வழங்கினார்.
மேலும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, முதற்கட்டமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் 'பாதுகாப்பு பெட்டி" அமைக்கும் வகையில், கலெக்டர் அறிமுகப்படுத்தினார். பெண்கள் தங்கள் மீதான பாலியல் புகார்களை இப்பெட்டியில் போடலாம்.
இக்கூட்டத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) சரவணன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், சித்த மருத்துவ அலுவலர் மரு.காமராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- தாசில்தாரை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- பெண்கள் உட்பட 21 பேர் கைது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடந்த மாதம் பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
அப்போது வட்டாட்சியார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆகஸ்டு மாதத்திற்குள் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுவரையில் டாஸ்மாக் கடையை நிர்வாகம் அகற்றவில்லை. சொன்னது போல் கடையை அகற்றாத தாசில்தாரை கண்டித்து பா.ஜ.க.வினர் தாலுகா அலுவலகத்தை முற் றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக வடகாடு முக்கத்தில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் அபிமன்யு முருகேசன், மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், நல த்திட்ட பிரிவு மாநில செயலாளர் செல்வகுமார், அமைப்புசாரா தலைவர் குமார், மகளிர் அணி தலைவி அமுதவல்லி, கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பரமேஸ்வரன், சிறுபான்மையினர் அணி தலைவர் அரசு, ஓபிசி அணி மாவட்ட தலை வர் ரவிக்குமார், மகளிர் அணி செயலாளர் சித்ரா, நலத்திட்ட பிரிவு மாவட்ட துணை தலைவர் முத்துக்குமரன், நலத்திட்ட பிரிவு அன்னவாசல் வடக்கு ஒன்றிய தலைவர் வெற்றிவேல், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தலைவர் ஜேசு மாரிமுத்து, ஆலங்குடி நகர தலைவர் நலத்திட்ட பிரிவின் செயலாளர் மதி, இளைஞரணி செயலாளர் காளிதாஸ், கட்சியின் மூத்த நிர்வாகிகள் முத்து வேல் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் கிரீன்குட்டி, திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய மகளிர் அணி தலைவி ஜெயா, திருமணங்குளம் கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய பொருளாளர் மாரியப்பன், மகளிர் அணி மாவட்ட துணை தலைவி மாணிக்கவல்லி ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
- வாழைக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- கனமழையால் 100 ஏக்கரில் பயிரிட்ட வாழை நாசம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை நான்கு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையால் அப்பகுதியில் மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
ஆலங்குடி பகுதி விவசாயிகளுக்கு மழை சந்தோசத்தை ஏற்படுத்தினாலும் வாழையை முற்றிலும் அடித்து விட்டதாக புலம்புகின்றனர். ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளான வம்பன், மைக்கேல்பட்டி, வேங்கிடகுளம், தெட்சிணாபுரம், கொத்தகோட்டை, வெண்ணவால்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வாழை குலையுடன் கீழே சாய்ந்து நாசமாகின.இதனை பார்த்த விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
ஆண்டு கணக்கில் உழைத்த உழைப்பிற்கு வருமானம் கிடைக்கும் நேரத்தில் இந்த இயற்கை இடர் காரணமாக மொத்த உழைப்பும் வீணாகி விட்டதாகவும், ஒவ்வொரு முறையும் தாங்கள் பா திக்கப்படும் பொழுது நிவாரணம் தருவதாக சொல்லும் அதிகாரிகள் அதன் பிறகு நிவாரணத்தை தருவதே இல்லை எனவும் விவசாயிக ள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் ஊடுபயிராக பயிரி டப்பட்டிருந்த மற்ற பல வகை மரங்களும் வேரோடு சாய்ந்தது.
அத்தோடு தங்களது இழப்பிற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக் கை எடுத்து இழப்பீட்டை வழங்க வேண்டும் என விவசா யிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
- பெரும்பாலான மீனவர்கள் மீன்வளம் அதிகமுள்ள வங்கக்கடலில் இந்திய கடல் எல்லை பகுதியான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
- இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் வந்த வீரர்கள் தமிழக மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர்.
அறந்தாங்கி:
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையேயும் அந்நாட்டு கடற்படை தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அவ்வப்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை எடுத்துக்கொண்டு அவர்களை விரட்டி அடிப்பதும், விசைப்படகுகளுடன் மீனவர்களை சிறைப்பிடிப்பதும் வாடிக்கையாகவே இருக்கிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்படி துறைமுகத்திலிருந்து நேற்று மீன்துறை அலுவலக அனுமதியுடன் 87 விசைப்படகுகளில் 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
இதில் பெரும்பாலான மீனவர்கள் மீன்வளம் அதிகமுள்ள வங்கக்கடலில் இந்திய கடல் எல்லை பகுதியான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் வந்த வீரர்கள் தமிழக மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர்.
தொலை தூரத்தில் இலங்கை கடற்படை கப்பல் வருவதை அறிந்த ஒருசில விசைப்படகுகள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டன. இந்திய கடல் பகுதியாக இருந்தாலும் அவர்களின் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் அவர்கள் புறப்பட்டனர். இருந்தபோதிலும் ஒரு விசைப்படகை மட்டும் செல்லவிடாமல் தடுத்த இலங்கை கடற்படையினர் அதனை சிறைப்பிடித்தனர்.
இதில் தமிழ்ச்செல்வன் என்பவருக்கு சொந்தமான படகையும், அதிலிருந்த விஜி (வயது 28), தினேஷ் (26), ரஞ்சித் (27), பக்கிரிசாமி (45), கமல் (25), புனுது (41), கார்த்திக் (27) உரிமையாளர் தமிழ்ச்செல்வன் (37) உட்பட 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.
அவர்களுடன் விசைப்படகையும் இலங்கைக்கு கொண்டு சென்றனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் 12 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வருவது மீனவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பிளாஸ்டிக் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடிக்க கூடாது என்று ராமேசுவரம் மீனவர்களை எச்சரித்துள்ளனர்.
மேலும் ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி, அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை அபகரித்துக் கொண்டு மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்து உள்ளனர். இதையடுத்து மீனவர்கள் சோகத்துடன் இன்று காலை ராமேசுவரத்திற்கு திரும்பி வந்தனர்.
50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகள் உள்ளிட்ட மீன்பிடி பொருட்களை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாகவும், ஒவ் வொரு படகிற்கும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
- குடும்பத்தகராறில் தம்பிைய கொலை செய்த அண்ணன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது
- மூவரும் சேர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு அரிவாள், ஈட்டி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு பாலையாவை வெட்டியும், குத்தியும் கொலை செய்துள்ளனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே உள்ள கூகனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு குமார், விக்னேஷ்வரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் குமார் தேவி என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தேவியுடன் குமாரின் சகோதரர் விக்னேஸ்வரன் தகாத உறவு வைத்து அவரை அழைத்துக் கொண்டு திருப்பூரில் வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதனை அறிந்த குமார் இதுகுறித்து தட்டிக் கேட்டும் விக்னேஸ்வரன் கேட்காததால் இவர்களின் சித்தப்பா பாலையாவிடம் தெரிவித்து இதை தட்டிக் கேட்க கூறியுள்ளார்.
இதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு பாலையா, விக்னேஸ்வரனிடம் இதுகுறித்து கேட்டநிலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் விக்னேஸ்வரன் அவரது தந்தை சுப்பிரமணியன் மற்றும் இவர்களது உறவினரான கொடிவயல் கிழக்கு பகுதியைச் வீரமணி உள்ளிட்ட மூவரும் சேர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு அரிவாள், ஈட்டி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு பாலையாவை வெட்டியும், குத்தியும் கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கானது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி அப்துல் காதர், குற்றவாளிகள் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து குற்றவாளிகள் 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.






