என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாசில்தாரை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல்
- தாசில்தாரை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- பெண்கள் உட்பட 21 பேர் கைது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடந்த மாதம் பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
அப்போது வட்டாட்சியார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆகஸ்டு மாதத்திற்குள் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுவரையில் டாஸ்மாக் கடையை நிர்வாகம் அகற்றவில்லை. சொன்னது போல் கடையை அகற்றாத தாசில்தாரை கண்டித்து பா.ஜ.க.வினர் தாலுகா அலுவலகத்தை முற் றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக வடகாடு முக்கத்தில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் அபிமன்யு முருகேசன், மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், நல த்திட்ட பிரிவு மாநில செயலாளர் செல்வகுமார், அமைப்புசாரா தலைவர் குமார், மகளிர் அணி தலைவி அமுதவல்லி, கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பரமேஸ்வரன், சிறுபான்மையினர் அணி தலைவர் அரசு, ஓபிசி அணி மாவட்ட தலை வர் ரவிக்குமார், மகளிர் அணி செயலாளர் சித்ரா, நலத்திட்ட பிரிவு மாவட்ட துணை தலைவர் முத்துக்குமரன், நலத்திட்ட பிரிவு அன்னவாசல் வடக்கு ஒன்றிய தலைவர் வெற்றிவேல், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தலைவர் ஜேசு மாரிமுத்து, ஆலங்குடி நகர தலைவர் நலத்திட்ட பிரிவின் செயலாளர் மதி, இளைஞரணி செயலாளர் காளிதாஸ், கட்சியின் மூத்த நிர்வாகிகள் முத்து வேல் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் கிரீன்குட்டி, திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய மகளிர் அணி தலைவி ஜெயா, திருமணங்குளம் கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய பொருளாளர் மாரியப்பன், மகளிர் அணி மாவட்ட துணை தலைவி மாணிக்கவல்லி ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.






