என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ வீரர். Soldier"

    • கந்தர்வகோட்டை அடுத்த மட்டங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (58). முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்பொழுது சென்னை விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்தார்.
    • கந்தர்வகோட்டையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மட்டங்கால் சென்றபோது கருப்பு கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டை அடுத்த மட்டங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (58). முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்பொழுது சென்னை விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று கந்தர்வகோட்டையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மட்டங்கால் சென்றபோது கருப்பு கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

    கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள். திருநாவுக்கரசு உயிரிழப்புக்கு காரணமான வாகனத்தை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் கந்தர்வகோட்டை காவல் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

    காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை விபத்தில் பலியான திருநாவுக்கரசு உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக கந்தர்வகோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×