search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake train ticket"

    • போலி ரெயில் டிக்கெட்டுகள் அச்சிட்டு விற்பனை செய்யப்பட்டது
    • 4 பிரிவுகளின் கீழ் தட்சிணாமூர்த்தி மீது வழக்கு பதிவு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருவரங்குளம் மெயின் வீதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 42). இவர் புதுக்கோட்டையில் மேலராஜவீதியில் சங்கரா என்ற பெயரில் கமப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் போலியாக ரெயில் டிக்கெட் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    8 பயணிகளுக்கு திருச்சியிலிருந்து சென்னை செல்லவும், சென்னையிலிருந்து திருப்பதி செல்லவும் டிக்கட் வழங்கியுள்ளார்.

    இதையடுத்து ஏமாற்றப்பட்ட ரெயில் பயணிகள் ரெயில்வே பாதுகாப்பு படையினர் உதவியை நாடினர்.

    அதை தொடர்ந்து மதுரை ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த மண்டல பாதுகாப்பு ஆணையர் அன்பரசு கொடுத்த புகாரின்பேரில் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் 4 பிரிவுகளின் கீழ் தட்சிணாமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார். இவர் மீது ஏற்கனவே 2020ல் மதுரையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது. 

    வேலூரில் போலி ரெயில் டிக்கெட்டை தயாரித்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலி ரெயில் டிக்கெட், கணினி, லேப்டாப், ஸ்கேனர், பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனை அருகே 100-க்கும் மேற்பட்ட டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்கள் இயங்கி வருகின்றன.

    இதில் சிலவற்றில் ரெயில் பயணத்துக்கான போலி இ-டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் பாபுராவ் தெரு, மெயின்பஜார், தோட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சிகளில் அதிரடி ஆய்வு நடத்தினர்.

    இதில் பாபுராவ் தெருவில் உள்ள தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி ஒன்றில் வெவ்வேறு பெயர்களில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு செல்லும் விரைவு மற்றும் அதிவிரைவு ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட 300-க்கும் மேற்பட்ட போலி ரெயில்வே டிக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்த ஏஜென்சி உரிமையாளர் சுரேஷ் (வயது 33) என்பவரை ரெயில்வே போலீசார் கைது செய்து அங்கிருந்த போலி ரெயில் டிக்கெட், கணினி, லேப்டாப், ஸ்கேனர், பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபோன்ற செயல்களில் இனியாராவது ஈடுபடுவது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எச்சரித்துள்ளனர்.
    ×