என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தசை இயக்க பயிற்சி
    X

    மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தசை இயக்க பயிற்சி

    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தசை இயக்க பயிற்சி வழங்கப்பட்டது.
    • உதவி திட்ட அலுவலர் நேரில் ஆய்வு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் வட்டாரவள மையத்தில் மாற்றுத்திறனாளி குழந் தைகளுக்கு தசை இயக்க பயிற்சி வழங்கப்பட்டது. இதனை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும் போது,

    திருவரங்குளம் வட்டார வள மையத்தில் மொத்தம் 50 மாணவர்கள் தசை இயக்க பயிற்சிக்காக வருகிறார்கள்.இம் மாணவர்கள் பயிற்சி யின் மூலம் தங்களது உடல் இயக்கத்தில் முன்னேற்றம் கண்டு இருக்கிறார்கள்.

    வீடு சார் பயிற்சியில் மொத்தம் 27 மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு இயன்முறை மருத்துவர்கள், அவரவர்கள் வீடுகளுக்கு சென்று தசை இயக்க பயிற்சி வழங்கி அதன் மூலம் மாணவரின் உட ல் இயக்கத்தில் முன்னேற்றம் காண பெரிதும் காரணமாக இருந்து வருகிறார் என்றார்.

    நிகழ்ச்சியின் போது திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் கருணாகரன், வளமைய மேற்பார்வையாளர் தங்கமணி, இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×