என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் ஆஸ்பத்திரி நர்சை தாக்கிய தொழிலாளி கைது
- தனியார் ஆஸ்பத்திரி நர்சை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
- ஊசி போட்ட இடத்தில் குழந்தைக்கு வீக்கம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அத்திப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரவேல் (வயது 38). இவரது குழந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குமரவேல் குழந்தையை விராலிமலை காமராஜர் நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.அதைத்தொடர்ந்து டாக்டர் பரிசோதித்து விட்டு மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கினார். மேலும் நர்ஸ் ஒருவர் குழந்தைக்கு ஊசி போட்டார்.இந்த நிலையில் ஊசி செலுத்திய இடத்தில் குழந்தைக்கு வீக்கம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குமாரவேல் மறுநாள் அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பணியில் இருந்த நர்ஸ் மல்லிகா(32) என்பவரை குச்சியால் தாக்கி விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து அந்த நர்ஸ் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






