என் மலர்
பெரம்பலூர்
- சொத்து தகராறில் விவசாயியை அடித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
- பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே சொத்து தகராறில் விவசா யியை அடித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்ட னை விதித்து கோர்ட் உத்த ரவிட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் ஊராட்சி க்குட்பட்ட நாவலூரைச் சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது67). விவசாயி. இவரது உறவினர் பரமசிவம் மகன் பாக்கியராஜ் (33). இரு குடு ம்பத்தி னருக்கும் பொதுவாக இருந்த நிலத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ப்பிரிவினை செய்யப்ப ட்டது.அதில் தனக்கு முறையாக பங்கு பிரித்து வழங்கவில்லை எனக்கூறிய பாக்கியராஜ் அடிக்கடி தகராறில் ஈடுப ட்டு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் இரவு வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த சிங்காரவேலுவிடம் பாக்கிய ராஜ் வாக்குவாதத்தில் ஈடுப ட்டார். இதில் ஆத்தரமடைந்த பாக்கியராஜ் கட்டையால் சிங்காரவேலுவை தாக்கி னார். இதனால் படுகாய மடைந்த சிங்காரவேலு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்ப ட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் இன்ஸ் பெக்டர் (பொ) சுகந்தி வழ க்குப்பதிந்து பாக்கியராஜை கைது செய்து சிறையில் அடைத்தார். பின்னர் பாக்கி யராஜ் ஜாமீ னில் வெளியே வந்தார்.இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்தது வந்தது. அரசு தரப்பில் வக்கீல் செந்தில்நாதன் ஆஜரானார். நேற்று இந்த வழக்கை இறுதி விசாரணை செய்த நீதிபதி பல்கீஸ் சொத்து தகராறில் விவசாயியை அடித்து கொலை செய்த பாக்கிய ராஜிக்கு ஆயுள்தண்டனை யும், 500 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தர விட்டார். இதையடுத்து பாக்கியராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்ப ட்டார்.
- ஆவணி மாத முதல் பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது
- பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிபட்டனர்
பெரம்பலூர்,
ஆவணி மாத முதல் பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பிரதோஷத்தில் நந்தீஸ்வரரை வழிபட்டால் நல்லது நடக்கும் என்ற ஐதீகத்தால், சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திகேஸ்வரருக்கு நேற்று மாலை பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் பிரதோஷத்தையொட்டி பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடந்தது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிபட்டனர்.
- பெரம்பலூரில் நடந்த அரசு விழாவில் 987 பயனாளிகளுக்கு ரூ.20 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு அமைச்சர் சிவசங்கர், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அரசு செயலாளர் தரேஸ் அஹமது, கலெக்டர் கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சிறப்பு திட்டம் செயல்பாடுகள், நலதிட்ட உதவிகள், கடனுதவிகள் போன்றவை குறித்து ஆய்வு நடத்தினார்.
வருவாய்த்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதல்வரின் முகவரி திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
இதை தொடர்ந்து பல்வேறு துறைகளின் மூலம் 987 பயனாளிகளுக்கு ரூ.20.85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
கூட்டத்தில் எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் முத்தமிழ்செல்வி, எஸ்பி ஷ்யாம்ளாதேவி, டிஆர்ஓ வடிவேல்பிரபு, ஆர்டிஓ நிறைமதி, நகராட்சி தலைவர் அம்பிகா, யூனியன் சேர்மன்கள் மீனாம்பாள், பிரபா, ராமலிங்கம், கிருஷ்ணமூர்த்தி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அந்தூர் கிராம மக்கள் திடீர் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- ராட்சத கிணறு வெட்டப்படுவதால் தண்ணீர் பிரச்சினை ஏற்படும் என்று குற்றம் சாட்டி போராட்டம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள அந்தூர் கிராமத்தில் தண்ணீர் பிரச்சினை காரணமாக ஆய்க்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் 2 மாதங்களாக கிணறு வெட்டப்பட்டு வருகிறது. இதனால் தங்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்றும், எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆய்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று ஆய்குடி மக்கள் அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இது பற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு வந்து, ஆய்குடி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இங்கு கிணறு வெட்டப்படுவதால் எங்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட காரணமாக அமையும். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது. மறியலால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வடக்குமாதவி கிராமத்தை சேர்ந்த முதியவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார்
- கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே வடக்குமாதவி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 80). அதே ஊரை சேர்ந்தவர் காமராஜ் மகன் ராமமூர்த்தி (23). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இருவரது வயல்காடும் அருகே அருகே உள்ளது. இருவரும் வரப்பில் மாடு மேய்க்கும் பொழுது இரு தரப்பினருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை நாராயணன் வரப்பில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது ராமமூர்த்தி எனது வயலில் எதற்கு மாடு மேய்கிறாய் எனக் கேட்டதால் இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கி கொண்டனர். அப்போது நாராயணனின் கழுத்தை பிடித்து ராமமூர்த்தி நெறித்துள்ளார். அதனை தூரத்தில் இருந்து பார்த்த நாராயணன் மனைவி அழகம்மாள் விடுடா என கூறிக் கொண்டே ஓடிவந்துள்ளார். இதற்குள் நாராயணன் மயக்கம் போடவே கீழே விட்டுவிட்டு ராமமூர்த்தி ஓடிவிட்டார். அழகம்மாள் வந்து பார்த்தபோது நாராயணன் இறந்துகிடந்தது தெரியவந்தது.இது பற்றி தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன நாராயணணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்த புகாரன்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து நாராயணண்னை கொலை செய்த ராமமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர்பிரம்மரிஷி மலையில் கோபூஜை தொடங்கியது
- தொடர்ந்து பெரம்பலூரில் 51 நாள் தொடர் கோபூஜை நடைபெறுகிறது
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோயிலில் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் உலக மக்கள் நலன் கருதி, முறையான மழை வேண்டி 51 நாட்கள் தொடர் கோமாதா பூஜை நேற்று தொடங்கியது.
மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோயிலில் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் உலக மக்கள் நலன் கருதி, முறையான மழை வேண்டி 51 நாட்கள் தொடர் கோமாதா பூஜைகள் நடந்து வருகிறது. இதன்படி நேற்று 51 நாள் தொடர் கோபூஜை தொடங்கியது.
இதில் உலக மக்கள் நலன் கருதியும், மாதம் முறையாக மழை பொழிய வும்,இயற்கை சீற்றங்களில் இருந்தும்,மக்கள் உடல் நலத்தோடு வாழ்வும், ஆளுமையில் உள்ளவர்கள் சிறப்பாக ஆட்சி செய்யவும், அனைத்து அரசாங்கத்தில் உள்ள கஜானாவில் லட்சுமி கடாக்ஷம் நிறைந்து மக்கள் பணிகள் சிறக்க, மக்கள் எவ்விதமான துன்பங்கள், கஷ்டங்கள் இல்லாமல் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்று, அனைத்து விதமான தோஷங்கள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் ரோகிணி மாதாஜி, தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், மாதாஜி ராதா மற்றும் மகா சித்தர்கள் டிரஸ்ட் மெய்யன்பர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர்
மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தனியார் கல்லூரி, பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார் சார்பில் ஒன்றிணைவோம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் அந்த பிரிவின் போலீஸ் துணை சூப்பிரண்டு வளவன் கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசுகையில், சக மாணவர்களிடம் சகோதரத்துவத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். மேலும் தீண்டாமை, சாதிய பாகுபாடுகள், இரட்டை குவளை முறை மற்றும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மனிதாபிமான மிக்க சமூகத்தை உருவாக்க வேண்டுமெனில் மாணவர்களாகிய நீங்கள் தான் சாதிய முரண்களை பற்றி எடுத்துரைத்து தீண்டாமையை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இந்த சமூகத்தில் அனைவரும் சமம் என்பதையும் ஒவ்வொருவரும் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும். இந்த சமுதாய மாற்றத்தை தனி நபரின் மாற்றத்தாலேயே உறுதி செய்ய முடியும் என்பதையும், இம்மாற்றத்தை மாணவர்களாகிய நீங்கள் தான் கொண்டு வர வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் மனித நேயத்தை வளர்க்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், என்றார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள 31 சாதாரண கல்குவாரிகளில் இருந்து சாதாரண கல் உடைக்க குத்தகை உரிமம் பெற முன்னுரிமை அடிப்படையில் பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கங்களிடமிருந்து நேரடியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.1959-ம் ஆண்டு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின் விதி 8-ன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கண்ட கல் குவாரிகளிலிருந்து கட்டுமானப் பணிகளுக்கு உபயோகப்படுத்தப்படும் சாதாரண கட்டுக்கல், சக்கை கல், வேலிகல், ஜல்லி ஆகியவற்றை குவாரி செய்வதற்காக குத்தகை உரிமம் பெற விருப்பம் உள்ள உரிய அங்கீகாரம் பெற்ற பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கங்கள் ஆகியவற்றுக்கு குத்தகை உரிமம் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் இணைப்பு 6-பி-யில் கண்டுள்ளவாறு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்.21-ல் உள்ள மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது தபாலிலோ நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 5 மணி வரை வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பெரம்பலூர் ஆர்.டி.ஓ. மற்றும் பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டு உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்யப்படுகிறது. போதியளவு ஆற்றுப்பாசனம் வசதி கிடையாது. மழைக்காலங்களில் தான் அந்த ஆற்றுப்பாசனமும் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் காவிரி ஆறும் கிடையாது. ஆனாலும் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி, நெல், நிலக்கடலை, கரும்பு முதலியவை விளைவிக்கப்படும் முக்கியமான பயிர்கள் ஆகும்.
தமிழ்நாட்டில் சின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மக்காச்சோளம், பருத்தி அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதியில் போதியளவு மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. மேலும் இந்த ஆண்டு தொடக்கத்திலும் போதியளவு மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே இருக்கிறது.
கோடை காலத்தில் இருந்த வெயிலின் தாக்கத்தை விட தற்போது கடந்த சில நாட்களாகவே அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதனால் ஏற்கனவே வானம் பார்த்த பூமியான வறட்சி மாவட்டமான பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் அதாள பள்ளத்துக்கு சென்று விட்டன. மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாய கிணறுகளில் தண்ணீர் அடியில் சென்று விட்டது. குறிப்பாக மலையடிவாரங்களில் உள்ள விவசாய கிணற்றுகளில் தண்ணீர் இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு அங்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் சில விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பாய்ச்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி சென்றால் விவசாயிகள் விளை நிலங்கள் விலை நிலங்களாக மாற வாய்ப்புள்ளது. பெரம்பலூர் மாவட்டத்துக்கு காவிரி ஆற்றுப்பாசனம் கொண்டு வந்தால் விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறையும் இருக்காது. நிலத்தடி நீர்மட்டமும் உயரும். திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து காவரி நீரை கால்வாய் மூலம் பெரம்பலூருக்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன்:-
திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து பெரம்பலூருக்கு கால்வாய் மூலம் காவிரி நீர் கொண்டு வரும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கால்வாய் மூலம் பெரம்பலூருக்கு கொண்டு வரப்படும் காவிரி நீரை பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் நிரப்பி ஏற்கனவே உள்ள பாசன வாய்க்கால்கள் மூலம் காவிரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். இந்த திட்டத்தை விரைந்து கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாடு கிணற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் நாரயணசாமி:- திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து துறையூர் மார்க்கமாக கீராம்பூர் ஏரி அல்லது பெரம்பலூர் மாவட்டம், மங்கூன் வழியாக காவிரி நீரை கால்வாய் மூலம் களரம்பட்டி ஏரிக்கு கொண்டு வரப்பட்டால் லாடபுரம் 2 ஏரிகளும், அதனை தொடர்ந்து குரும்பலூர், செஞ்சேரி, அரணாரை, பெரம்பலூர் பெரிய ஏரி, வெள்ளந்தாங்கியம்மன் ஏரி, துறைமங்கலம் பெரிய ஏரி, சிறிய ஏரி வரை காவிரி நீரை கொண்டு செல்ல வாய்க்கால் வசதி இருக்கிறது. பின்னர் காவிரி நீர் மருதையாற்றில் கலந்து விடும். சாத்திய கூறுகள் இருந்தால் களரம்பட்டி ஏரிக்கு காவிரி நீரை கொண்டு வரலாம். அல்லது லாடபுரம் ஏரிக்கு காவிரி நீரை கொண்டு வரலாம். மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் காவிரி நீரை கொண்டு செல்லலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது ஒரு தனியார் டயர் தொழிற்சாலை மட்டுமே உள்ளது. அதிலும் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாவட்ட மக்களுக்கு எப்போதும் விவசாயம் தான் கைகொடுக்கும். பெரும்பாலும் கிணற்று பாசனம் உள்ள பெரம்பலூர் மாவட்டத்துக்கு காவிரி நீரை கொண்டு வந்தால் விவசாயம் இன்னும் வளர்ச்சி அடையும். வீணாக கடலுக்கு போகிற போது தான் காவிரி நீரை பெரம்பலூர் மாவட்டத்துக்கு திருப்பி விட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டால் ஏற்கனவே காவிரி நீர் பாசனம் பெறும் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
ஆலத்தூர் தாலுகா, நாட்டாமங்கலத்தை சேர்ந்த விவசாயி பாபநாசன்:- காவிரி ஆற்றின் நீரை கால்வாய் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு கொண்டு வந்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். நிலத்தடி நீர் மட்டமும் உயரும், குடிநீர் பிரச்சினையும் ஏற்படாது. இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.200 முதல் ரூ.300 கோடி வரை செலவாகலாம். இதை மாநில அரசு அல்லது மத்திய அரசு செயல்படுத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே மேட்டூர் அணையின் உபரி நீரான காவிரி நீரை இணைப்பு கால்வாய் துறையூர், தா.பேட்டை வரை உள்ள ஏரிகளில் தேக்கி விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தும் விதமாக சரபங்கா நதி, திருமணிமுத்தாறு மற்றும் அய்யாறு ஆறுகளை இணைத்து கீராம்பூர் ஏரி வரை நீர் வழங்கும் திட்டம் தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தையும் இணைத்தால் எளிதாக காவிரி நீரை கொண்டு வந்து விடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை பராமரிக்க போதிய நிதி இல்லை என்று கூறி, சில நீர் நிலைகளில் தான் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்துக்கு கால்வாய் மூலம் காவிரி நீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு பெரிய நிதி தேவைப்படும். இந்த திட்டம் கொண்டு வர சாத்திய கூறுகள் இருக்கிறதா? என்று முதலில் தமிழக அரசு சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களை கொண்டு குழு அமைத்து முறையாக ஆய்வு செய்ய வேண்டும். சாத்திய கூறுகள் இருந்தால் நிதி ஒதுக்கி விரைந்து திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
பெரம்பலூர் லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, பெரும்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சின்னதம்பி (வயது 33), லாரி டிரைவர். இவர் பெரம்பலூர் மாவட்டம், விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் சரக்கு ஏற்றுவதற்காக நேற்று முன்தினம் மாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அருகே லாரியை நிறுத்தி விட்டு காத்திருந்தார்.அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் சின்னதம்பியை அரிவாளை காட்டி மிரட்டி, அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.1,000-ஐ பறித்து சென்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக சின்னதம்பி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சின்னதம்பியிடம் பணம் பறித்தது பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு, சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜாவின் மகன் சந்துரு (23), பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு, புதிய காலனியை சோ்ந்த தனசேகரின் மகன் விஷ்ணு (19), பாடாலூர் அண்ணா நகரை சேர்ந்த சதக்கத்துல்லாவின் மகன் சாதிக் பாட்சா (22) என்பது தெரியவந்தது.இதையடுத்து தலைமறைவாக இருந்த சந்துரு, விஷ்ணுவை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சாதிக் பாட்ஷாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- பெரம்பலூர் சிற்பிக்கு பாராட்டு
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2 இஞ்ச் உயரத்தில் விரிந்த காதுகளுடன் விநாயகர் மர சிற்பம் அழகாக செதுக்கியுள்ளார்
பெரம்பலூர்,-
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் அருகே உள்ளது தழுதாழை கிராமம். இது மரச் சிற்பத்திற்கு பெயர் பெற்றது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மர சிற்ப கலைஞர்கள் வசித்து வருகின்றனர்.தமிழகத்தின் பிரம்மாண்ட தேர்கள், தெய்வச் சிலைகள், அலங்கார கதவுகள் கலை நயத்துடன் நேர்த்தியாக வடிவமைக்கிறார்கள்.இங்கு உற்பத்தியாகும் சிலைகள் வெளிமாநிலங்களுக்கு மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்க தயாரித்த மர சிற்பங்கள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த கைவினை பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றது.தேக்கு இலுப்பை வாகை மாவலிங்கை மரங்களில் இந்த கலைஞர்களால் செதுக்கப்படும் தெய்வங்களின் சிற்பங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.அரை அடி முதல் ஆறடி உயரமுள்ள சிற்பங்களை வடிவமைக்கின்றனர்.இந்த மாவட்டத்தின் அடையாளமாக திகழும் மரச் சிற்பங்களுக்கு கடந்த 2021ல் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியது.சமீப காலமாக கையளவு களில் செதுக்கப்படும் கடவுள்கள் சிற்பங்கள் மற்றும் திருவள்ளுவர் சிற்பங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தங்களின் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கீர் செயின்களில் சிற்பங்களை மாட்டி விடுகிறார்கள்.இந்த கலைஞர்களில் சாமிநாதன் வயது 37 என்பவர் பூவரசு மரத்தில் கடவுள்கள் சிலைகளை செதுக்கி பாராட்டு பெற்றார்.சமீபத்தில் வெட்கப்படும் ஒரு பெண்ணின் முகத்தை தத்ரூபமாக வடிவமைத்திருந்தார்.அது மட்டுமில்லாமல் ஒன்றே முக்கால் அடியில் கருங்காலி மரத்தில் வராகி அம்மனை வடிவமைத்தார்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அந்த விழாவை வரவேற்கும் விதமாக சாமிநாதன் 2 இஞ்ச் உயரத்தில் விரிந்த காதுகளுடன் அழகாக செதுக்கியுள்ளார்.இதனை பூஜை அறையில் வைத்து வழிபடலாம். மாட்டிக் கொள்ளலாம். 3 நாட்களில் இந்த சிலையை வடிவமைத்ததாக சாமிநாதன் கூறினார்.
- தமிழகத்தின் பிரம்மாண்ட தேர்கள், தெய்வச் சிலைகள், அலங்கார கதவுகள் கலைநயத்துடன் நேர்த்தியாக வடிவமைக்கிறார்கள்.
- சமீபத்தில் வெட்கப்படும் ஒரு பெண்ணின் முகத்தை தத்ரூபமாக வடிவமைத்திருந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் அருகே உள்ளது தழுதாழை கிராமம். இது மரச்சிற்பத்திற்கு பெயர் பெற்றது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மர சிற்ப கலைஞர்கள் வசித்து வருகின்றனர்.
தமிழகத்தின் பிரம்மாண்ட தேர்கள், தெய்வச் சிலைகள், அலங்கார கதவுகள் கலைநயத்துடன் நேர்த்தியாக வடிவமைக்கிறார்கள்.
இங்கு உற்பத்தியாகும் சிலைகள் வெளிமாநிலங்களுக்கு மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்க தயாரித்த மர சிற்பங்கள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த கைவினை பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றது.
தேக்கு இலுப்பை வாகை மாவலிங்கை மரங்களில் இந்த கலைஞர்களால் செதுக்கப்படும் தெய்வங்களின் சிற்பங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அரை அடி முதல் ஆறடி உயரமுள்ள சிற்பங்களை வடிவமைக்கின்றனர்.
இந்த மாவட்டத்தின் அடையாளமாக திகழும் மரச் சிற்பங்களுக்கு கடந்த 2021ல் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியது.
சமீப காலமாக கையளவுகளில் செதுக்கப்படும் கடவுள்கள் சிற்பங்கள் மற்றும் திருவள்ளுவர் சிற்பங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தங்களின் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கீ செயின்களில் சிற்பங்களை மாட்டி விடுகிறார்கள்.
இந்த கலைஞர்களில் சாமிநாதன் (வயது 37) என்பவர் பூவரசு மரத்தில் கடவுள்கள் சிலைகளை செதுக்கி பாராட்டு பெற்றார்.
சமீபத்தில் வெட்கப்படும் ஒரு பெண்ணின் முகத்தை தத்ரூபமாக வடிவமைத்திருந்தார்.
அது மட்டுமில்லாமல் ஒன்றே முக்கால் அடியில் கருங்காலி மரத்தில் வராகி அம்மனை வடிவமைத்தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அந்த விழாவை வரவேற்கும் விதமாக சாமிநாதன் 2 இஞ்ச் உயரத்தில் விரிந்த காதுகளுடன் அழகாக செதுக்கியுள்ளார்.
இதனை பூஜை அறையில் வைத்து வழிபடலாம். மாட்டிக்கொள்ளலாம். 3 நாட்களில் இந்த சிலையை வடிவமைத்ததாக சாமிநாதன் கூறினார்.






