என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முதியவர் கழுத்தை நெறித்து கொலை
  X

  முதியவர் கழுத்தை நெறித்து கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வடக்குமாதவி கிராமத்தை சேர்ந்த முதியவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார்
  • கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை

  பெரம்பலூர்

  பெரம்பலூர் அருகே வடக்குமாதவி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 80). அதே ஊரை சேர்ந்தவர் காமராஜ் மகன் ராமமூர்த்தி (23). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இருவரது வயல்காடும் அருகே அருகே உள்ளது. இருவரும் வரப்பில் மாடு மேய்க்கும் பொழுது இரு தரப்பினருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை நாராயணன் வரப்பில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது ராமமூர்த்தி எனது வயலில் எதற்கு மாடு மேய்கிறாய் எனக் கேட்டதால் இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கி கொண்டனர். அப்போது நாராயணனின் கழுத்தை பிடித்து ராமமூர்த்தி நெறித்துள்ளார். அதனை தூரத்தில் இருந்து பார்த்த நாராயணன் மனைவி அழகம்மாள் விடுடா என கூறிக் கொண்டே ஓடிவந்துள்ளார். இதற்குள் நாராயணன் மயக்கம் போடவே கீழே விட்டுவிட்டு ராமமூர்த்தி ஓடிவிட்டார். அழகம்மாள் வந்து பார்த்தபோது நாராயணன் இறந்துகிடந்தது தெரியவந்தது.இது பற்றி தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன நாராயணணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்த புகாரன்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து நாராயணண்னை கொலை செய்த ராமமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×