என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரம்மரிஷி மலையில் கோபூஜை தொடக்கம்
- பெரம்பலூர்பிரம்மரிஷி மலையில் கோபூஜை தொடங்கியது
- தொடர்ந்து பெரம்பலூரில் 51 நாள் தொடர் கோபூஜை நடைபெறுகிறது
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோயிலில் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் உலக மக்கள் நலன் கருதி, முறையான மழை வேண்டி 51 நாட்கள் தொடர் கோமாதா பூஜை நேற்று தொடங்கியது.
மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோயிலில் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் உலக மக்கள் நலன் கருதி, முறையான மழை வேண்டி 51 நாட்கள் தொடர் கோமாதா பூஜைகள் நடந்து வருகிறது. இதன்படி நேற்று 51 நாள் தொடர் கோபூஜை தொடங்கியது.
இதில் உலக மக்கள் நலன் கருதியும், மாதம் முறையாக மழை பொழிய வும்,இயற்கை சீற்றங்களில் இருந்தும்,மக்கள் உடல் நலத்தோடு வாழ்வும், ஆளுமையில் உள்ளவர்கள் சிறப்பாக ஆட்சி செய்யவும், அனைத்து அரசாங்கத்தில் உள்ள கஜானாவில் லட்சுமி கடாக்ஷம் நிறைந்து மக்கள் பணிகள் சிறக்க, மக்கள் எவ்விதமான துன்பங்கள், கஷ்டங்கள் இல்லாமல் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்று, அனைத்து விதமான தோஷங்கள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் ரோகிணி மாதாஜி, தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், மாதாஜி ராதா மற்றும் மகா சித்தர்கள் டிரஸ்ட் மெய்யன்பர்கள் பலர் கலந்துகொண்டனர்.






