என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • கஞ்சா வைத்திருந்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் ரோந்து சென்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மேலப்புலியூர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 18 வயதுடைய சிறுவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த விஜய் (வயது 22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்த தலா 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • வாகன விபத்தில் ஒருவர் பலியானார்
    • முதியவர் படுகாயம் அடைந்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், மருதடி கிராமத்தை சேர்ந்த கதிரேசன்(வயது 37). இவரும் அதே பகுதியை சேர்ந்த சின்னையன்(65) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் காரை பிரிவு ரோட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி சென்ற கொண்டு இருந்தனர். அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கதிரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சின்னையன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • 14 பேர் குணமாகியுள்ளனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 11 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் 14 பேர் நேற்று குணமாகியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 86 ஆக உள்ளது. மேலும் மாவட்டத்தில் இன்னும் 91 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. இதே போல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்த 2 பேர் குணமாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 272 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

    • கல்வி வளர்ச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    • சப்-இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வரிசைப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளர் தலைமை தாங்கினார். இதில் பள்ளி முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினராக குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். மருதையான் கோவிலில் தொடங்கிய இந்த ஊர்வலம் மேலமாத்தூர் வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தது. இதில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் நடைபெறுகிறது.
    • 20-ந்தேதி வட்டார அளவில் நடக்கிறது

    பெரம்பலூர்:

    சென்னை ஒலிம்பியாட்டை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வட்டார அளவிலான போட்டிகள் 20-ந்தேதி நடக்கிறது.

    சென்னை மாமல்லபுரத்தில் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அரசு மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கூடலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த செஸ் போட்டியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளி அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும், 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளி அளவிலும் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்களுக்கு வருகிற 20-ந்தேதி வட்டார அளவில் செஸ் போட்டிகள் நடைபெறவுள்ளது.

    பெரம்பலூர் வட்டாரத்திற்கு குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் வட்டாரத்திற்கு பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், குன்னம் வட்டாரத்திற்கு குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் வட்டார அளவிலான செஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    வட்டார அளவில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்களுக்கு வருகிற 25-ந்தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடத்தப்படுகிறது. 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் மாநில அளவில் நடைபெறும் பயிற்சி முகாம், போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மேலும் அவர்கள் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி வீரர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெறுவார்கள். 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிப்பவர்கள் ஒலிம்பியாட் செஸ் போட்டிகளை பார்வையிடும் வாய்ப்பை பெறுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலியானது.
    • வயலில் மேய்ந்து கொண்டிருந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை அடுத்துள்ள விஜயகோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு சொந்தமான பசுமாடு அங்குள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது உயர் மின்னழுத்த கம்பத்தில் இருந்த கம்பிகள் காற்றினால் ஏற்பட்ட உராய்வின் காரணமாக அறுந்து பசு மாட்டின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பசுமாடு பலியானது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் நாராயணசாமி, வருவாய் ஆய்வாளர் ரங்கநாதன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது.
    • அவசியமாக போட்டு கொள்ள வேண்டும்

    பெரம்பலூர்:

    தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு பயிலும் 8,335 மாணவ-மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான், ரண ஜென்னி, கக்குவான் இருமல் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் பள்ளிகளில் 5 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மொத்தம் 17,583 மாணவ-மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான், ரணஜென்னி ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை மேற்கண்ட மாணவ-மாணவிகள் தவிர்க்காமல் அவசியமாக போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    • போலீஸ் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
    • 11 மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று முன்தினம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். முகாமில் பெறப்பட்ட 11 மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மணி கூறுகையில், இனி வரும் காலங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும் எனவும், பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

    • குன்னத்தில் ரூ.40 லட்சத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
    • திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர், ஜூலை.15-

    தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் ரூ.40 லட்சம் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டினார். அதனை உள்ள தொடர்ந்து பெருமத்தூர் குடிகாடு சமத்துவபுரம் தார்ச்சாலை திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் திருமாந்துறை ஊராட்சி நோவா நகர் பகுதியில் பகுதி நேர நியாய விலைக்கடையினை திறந்து வைத்தார். இதையடுத்து பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான லெப்பைக்குடிகாடு-ஆத்தூர் புதிய வழித்தட பேருந்து சேவையினை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார். அதேபோல் அத்தியூர்- குடிகாடுதார் சாலை திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.

    இதேபோல், அகரம் சீகூரில் பகுதி நேர நியாய விலைக்கடை அகரம்சீகூர் ஊராட்சி கருப்பட்டாங்குறிச்சி பகுதியில் பள்ளிக் கட்டிடத்திற்கு அடிக்கல், கீழப்பெரம்பலூர் ஊராட்சி வேள்விமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடம் ஆகியவற்றையும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று காலை திறந்துவைத்தார்.

    நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன், குன்னம் தாசில்தார் அனிதா, வேப்பூர் யூனியன் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக 2,000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது.
    • எந்தெந்த வழித்தடங்களில் மினி பேருந்துகள் தேவை என்பதைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூா் மாவட்டம், மேலஉசேன் நகரம் கிராமத்தில் ரூ.1.28 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு குடிநீா் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக 2,000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. அதற்கான ஒப்பந்தம் விரைவில் கோரப்பட்டு, அதில் பங்கேற்கும் நிறுவனங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு புதிய பேருந்துகள் வாங்கப்படும். புதிய பேருந்துகளை விரைந்து அறிமுகப்படுத்த வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதால், அதற்கான நடைமுறைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் தனியாா்மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாணவா்களுக்கு இலவச பயணத் திட்டம், பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். இந்த திட்டங்கள் அனைத்தும் தொடரும்.

    போக்குவரத்து கழக ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 5 ஆம் கட்ட பேச்சுவாா்த்தையில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு சில கோரிக்கைகள் மட்டும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் தீா்வு காணப்படும். சென்னையில் அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்.

    தனியாா் பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னையில் இயக்கப்பட்ட பெரும்பாலான மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், எந்தெந்த வழித்தடங்களில் மினி பேருந்துகள் தேவை என்பதைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநா், நடத்துநா் பணிகளை நிரப்புவதற்காக கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிதாக விடுதி தொடங்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்

    பெரம்பலூா்:

    பெரம்பலூா் மாவட்டத்தில் புதிதாக விடுதி மற்றும் செயல்பாட்டில் உள்ள மகளிா் தங்கும் விடுதி, குழந்தைகள் விடுதிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெரம்பலூா் மாவட்டத்தில் புதிதாக தொடங்க உள்ள விடுதி மற்றும் செயல்பாட்டில் உள்ள மகளிா் தங்கும் விடுதி, குழந்தைகளுக்கான விடுதிகளுக்கு உரிமம் பெறுவதற்கான கருத்துருக்களை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் அல்லது 88388 72443, 75020 34646 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சீரான மின் விநியோகம் செய்யக் கோரி மனு அளித்தனா்.
    • மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது

    பெரம்பலூா்: 

    பெரம்பலூா் கோட்ட மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம், நான்குச் சாலை சந்திப்புப் பகுதியிலுள்ள மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அம்பிகா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெரம்பலூா் சா்க்கரை ஆலை பங்குதாரா்கள் மற்றும் கரும்பு வளா்ப்போா் முன்னேற்றச் சங்க தலைவா் ராமலிங்கம் அளித்த மனுவில்,

    துங்கபுரம் கிராமத்தில் குறைந்தழுத்த மின் விநியோகம், அடிக்கடி மின் தடை மற்றும் மின் பாதைகளில் பழுது ஏற்படுவதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியவில்லை. இதனால், மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனா். மின் பாதைகளில் பழுதுகளை சரி செய்ய போதிய பணியாளா்களை நியமிக்கவும், சீரான மின் விநியோகம் செய்ய அதிக மின் இணைப்புகள் உள்ள பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் அமைத்து, மின் இணைப்புகளை பிரித்து மின் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    வடக்கு மாதவி சாலையிலுள்ள அம்மன் நகா் மக்கள் நல்வாழ்வுச் சங்கத்தினா் அளித்த மனுவில்,

    அம்மன் நகா் பகுதியில் குறைந்தழுத்த மின் விநியோகம் செய்யப்படுவதால், மின் மோட்டாா் போன்ற மின் சாதனங்களை இயக்க முடியவில்லை. மேலும், மின் சாதனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. எனவே, எங்கள் குடியிருப்பு பகுதியில் சீரான மின் விநியோகம் தடையில்லாமல் வழங்கவும், குடியிருப்பு பகுதிகள் முழுவதும் போதுமான மின் விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    ×