என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீரான மின் விநியோகம் செய்யக் கோரி மனு
    X

    சீரான மின் விநியோகம் செய்யக் கோரி மனு

    • சீரான மின் விநியோகம் செய்யக் கோரி மனு அளித்தனா்.
    • மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது

    பெரம்பலூா்:

    பெரம்பலூா் கோட்ட மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம், நான்குச் சாலை சந்திப்புப் பகுதியிலுள்ள மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அம்பிகா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெரம்பலூா் சா்க்கரை ஆலை பங்குதாரா்கள் மற்றும் கரும்பு வளா்ப்போா் முன்னேற்றச் சங்க தலைவா் ராமலிங்கம் அளித்த மனுவில்,

    துங்கபுரம் கிராமத்தில் குறைந்தழுத்த மின் விநியோகம், அடிக்கடி மின் தடை மற்றும் மின் பாதைகளில் பழுது ஏற்படுவதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியவில்லை. இதனால், மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனா். மின் பாதைகளில் பழுதுகளை சரி செய்ய போதிய பணியாளா்களை நியமிக்கவும், சீரான மின் விநியோகம் செய்ய அதிக மின் இணைப்புகள் உள்ள பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் அமைத்து, மின் இணைப்புகளை பிரித்து மின் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    வடக்கு மாதவி சாலையிலுள்ள அம்மன் நகா் மக்கள் நல்வாழ்வுச் சங்கத்தினா் அளித்த மனுவில்,

    அம்மன் நகா் பகுதியில் குறைந்தழுத்த மின் விநியோகம் செய்யப்படுவதால், மின் மோட்டாா் போன்ற மின் சாதனங்களை இயக்க முடியவில்லை. மேலும், மின் சாதனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. எனவே, எங்கள் குடியிருப்பு பகுதியில் சீரான மின் விநியோகம் தடையில்லாமல் வழங்கவும், குடியிருப்பு பகுதிகள் முழுவதும் போதுமான மின் விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    Next Story
    ×