என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CHESS TOURNAMENTS"

    • இஸ்லாமிய ஷரியாவில் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.
    • "நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்" படி தடைசெய்யப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது.

    இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி கூறுகையில், இஸ்லாமிய ஷரியாவின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.

    இது நாட்டின் "நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்" படி தடைசெய்யப்பட்டுள்ளது. சதுரங்கத்திற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ளன.

    இந்த ஆட்சேபனைகள் தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும்" என்று கூறினார்.

    இந்த முடிவு சதுரங்க ஆர்வலர்கள் மற்றும் தொடர்புடைய வணிகங்கள் மத்தியில் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. முன்னதாக பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்கத் தாலிபான் அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

    • போட்டிகள் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் பேராசிரியைகள் சாவித்திரி, மகா, கல்லூரி மாணவி தன்னார்வர்கள் உதவியால் நடைபெற்றது.
    • ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த சிறுவர் மற்றும் சிறுமிகள் தென்காசி மாவட்ட பிரதிநிதிகளாக தமிழ்நாடு மாநில அளவில் நடைபெறும் சதுரங்க போட்டிகளில் பங்கு கொள்வார்கள்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட சதுரங்க வட்டம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகளில் பங்கு பெறுவதற்கு 7 பிரிவுகளில் தேர்வு போட்டிகள் நடைபெற்றன. தென்காசி மாவட்ட சதுரங்க வட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டிகள் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் பேராசிரியைகள் சாவித்திரி, மகா, கல்லூரி மாணவி தன்னார்வர்கள் உதவியால் நடைபெற்றது.

    தேர்வு போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த சிறுவர் மற்றும் சிறுமிகள் தென்காசி மாவட்ட பிரதிநிதிகளாக தமிழ்நாடு மாநில அளவில் நடைபெறும் சதுரங்க போட்டிகளில் பங்கு கொள்வார்கள்.

    வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு தென்காசி மாவட்ட சதுரங்க வட்ட தலைவர் பெருமாள் தலைமையில், தமிழ்நாடு மாநில சதுரங்க கழக துணை செயலாளர் ஆக்சியம் அப்துல் காதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். தென்காசி மாவட்ட சதுரங்க கழக செயலர் சுந்தரராஜன் நன்றி கூறினார்.

    • அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் நடைபெறுகிறது.
    • 20-ந்தேதி வட்டார அளவில் நடக்கிறது

    பெரம்பலூர்:

    சென்னை ஒலிம்பியாட்டை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வட்டார அளவிலான போட்டிகள் 20-ந்தேதி நடக்கிறது.

    சென்னை மாமல்லபுரத்தில் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அரசு மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கூடலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த செஸ் போட்டியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளி அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும், 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளி அளவிலும் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்களுக்கு வருகிற 20-ந்தேதி வட்டார அளவில் செஸ் போட்டிகள் நடைபெறவுள்ளது.

    பெரம்பலூர் வட்டாரத்திற்கு குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் வட்டாரத்திற்கு பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், குன்னம் வட்டாரத்திற்கு குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் வட்டார அளவிலான செஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    வட்டார அளவில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்களுக்கு வருகிற 25-ந்தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடத்தப்படுகிறது. 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் மாநில அளவில் நடைபெறும் பயிற்சி முகாம், போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மேலும் அவர்கள் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி வீரர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெறுவார்கள். 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிப்பவர்கள் ஒலிம்பியாட் செஸ் போட்டிகளை பார்வையிடும் வாய்ப்பை பெறுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×