என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • 260 கிராம் கஞ்சாைவ பறிமுதல் செய்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் தனிப்படை அமைத்து குன்னம், வேப்பூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் சோதனை நடத்தினர். அப்போது நன்னை கிராமத்தில் கஞ்சா விற்றவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், அதே பகுதியை சேர்ந்த வேலாயுதத்தின் மகன் முருகானந்தம்(வயது 24) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து, அவரிடம் இருந்து சுமார் 260 கிராம் கஞ்சாைவ பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். இதையடுத்து தனிப்படை போலீசாரை சூப்பிரண்டு பாராட்டினார்."

    • வாகன விபத்தில் வாலிபர் பலியானார்.
    • கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் 5-வது வார்டுக்குட்பட்ட தேவேந்திரகுல வேளாளர் தெருவை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் விஜயன் (வயது 23), டிரைவர். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அம்மாபாளையத்தில் உள்ள பேச்சாயி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது துறையூர்-பெரம்பலூர் சாலையில் அம்மாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த விஜயனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜயன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    பெரம்பலூர்:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். ஆடி மாத பிறப்பையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டு மதியம் உச்சிக்கால பூஜை நடைபெற்றது. இதில் பெரம்பலூர் துறைமங்கலம் நியூ காலனியில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மஞ்சள் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தப்பட்டது.
    • மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சாமி இளங்கோவன், மாவட்ட பொதுசெயலாளர்கள் முத்தமிழ்செல்வன், ராமச்சந்திரன், பொருளாளர் பாலமுருகன் உட்பட பலர் பேசினர். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட பார்வையாளர் இல.கண்ணன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சிகவிதாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டத்தில் சின்ன வெங்காயம் பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும், தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதியான கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும்.

    பெரம்பலூரில் பாரத பிரதமரின் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடுகளை கண்டறிந்து, உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ெரயில் பாதை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்.

    பெரம்பலூர் நகரில் பார்க்கிங் வசதியில்லாத வணிக வளாகங்களை முறைப்படுத்த வேண்டும், தனியார் டயர் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் கழிவு நீரால் பாதிக்கப்படும் நிலத்தடி நீரை பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாயிகளின் நலன் கருதி மஞ்சள் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாவட்ட பொதுசெயலாளர் ஜெயபால் வரவேற்றார். நகர மண்டல தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

    • உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    • கே.பாலகிருஷ்ணன் பேட்டி

    பெரம்பலூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க நிதியளிப்பு பொதுக்கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம்வகுப்பு படித்த மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் விசாரணை நடத்தவும், நடவடிக்கை எடுக்கவும் தமிழக முதல்வர் டி.ஜி.பி., உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளை சம்பவிடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கக்கூடியதாக உள்ளது. ஆனாலும் அரசின் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதால் இதுபோன்ற வன்முறை நிகழ்ந்துள்ளது.

    சம்பவத்தில் தொடர்பில்லாத பலரை போலீசார் கைது செய்து வழக்கு போட்டு வருகிறார்கள். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இந்த நடவடிக்கையை போலீஸ் கைவிட வேண்டும். அந்த மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் நிவாரணம் தொகை வழங்க வேண்டும். போட்டி தேர்வு மற்றும் தேர்வு பயத்தால் அல்லது தேர்வில் தோல்வி அடைந்தால் மாணவர், மாணவிகள் தற்கொலை முடிவை எக்காரணம் கொண்டும் தேடக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வு அல்ல. தற்கொலை முடிவை மாணவர்கள் கைவிட வேண்டும். மாணவர்களின் உயிரோடு இனியும் விளையாடாமல் தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் தேர்வை முழுவதுமாக கைவிட வேண்டும்.

    இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி போடும் அவலநிலை உள்ளது. எல்லாவற்றுக்கும் வரி போட்டுக்கொண்டே போனால் இலங்கையில் நிகழும் நிலை இந்தியாவிலும் ஏற்படும். காவிரி - குண்டாறு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். காவிரியில் பல இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். காவிரி நீரை கடலுக்கு செல்லாமல் தடுக்க வேண்டும்

    பெரம்பலூர் மாவடத்தில் 2006-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதே போல் 15 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் இத்திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது
    • மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, ஐ.சி.டி. அகாடமியுடன் இணைந்து மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொண்டது.

    ஐ.சி.டி. அகாடமி என்பது மாநில அரசுகள் மற்றும் தொழில்துறைகளுடன் இணைந்து மத்திய அரசின் மூலம் மாணவர்களின் திறன் மேம்பாட்டை வளர்க்க உதவும் ஒரு அமைப்பாகும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பயிற்சியை முதன்மை நோக்கமாக கொண்டு, ஐ.சி.டி. அகாடமி ஆசிரிய மேம்பாடு, மாணவர் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மேம்பாடு, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு, டிஜிட்டல் துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் ஆகிய துறைகளில் 7 தூண் திட்டத்தின் மூலம் செயல்பட்டு வருகிறது.

    இதன் மூலம், மெக்கா–னிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், ஏரோநாட்டிகல் என்ஜினீ–யரிங், ஏரோஸ்பேஸ்என்ஜி–னீயரிங் மற்றும் ரோபா–ட்டிக்ஸ் மற்றும்ஆட்டோ–மேஷன் என்ஜினீய ரிங் மூன்றாம் மற்றும் இறுதியாண்டு மாண–வர்களுக்கு ஆட்டோ–கேட் பயிற்சி அளிக்கப்பட்டு சர்வதேச சான்றிதழ்வ–ழங்கப்ப–டுகிறது.

    இப்பயிற்சி மாணவ–ர்களுக்கு புராஜக்ட் ஒர்க் மற்றும் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள உதவுகிறது. மேலும், பேராசிரி யர்களு–க்கு ஆராய்ச்சி மற்றும் கன்சல்டன்சி புராஜக்ட் மேற் கொள்ள ஏதுவாக அமைகிறது. இப்பயிற்சி, மாணவர்களை நவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி, அவர்களை ஆட்டோடெ–ஸ்க்சான்றளிக்கப்பட்ட பொறியாளர்களா–கமாற்றுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 500 மாணவர்கள் இந்த பயிற்சியின் மூலம் பயன–டைவார்கள்.

    புரிந்துணர்வு ஒப்பந்த சான்றிதழை தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வேந்தர் சீனிவாச–னிடமிருந்து கல்லூரி முதல்வர்இளங் கோவன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் போது, கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து அது கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதில் தனிக்கவனம் செலுத்துவதனால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனையில் இருந்து மங்கூன் வழித்தட நீட்டித்த சேவையினையும், செட்டிகுளம் பகுதிக்கு கூடுதல் நடை பஸ் சேவையினையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடி யசைத்து தொடங்கிவைத்தார்.

    இதையடுத்து அவர் செட்டிகுளத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற வெல்கம் டு நம் ஊர் சென்னை என்ற விழிப்புணர்வு குறும்பட காட்சி செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிநவீன மின்னனு வீடியோ வாகனத்தில் திரையிடப்படுவதை பார்வையிட்டார்.

    பின்னர் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு செல்பி புகைப்படம் எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பொதுமக்களுடன் பார்வையிட்டு போட்டோ எடுத்துக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா, எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில்,

    தி.மு.க. ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து அது கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதில் தனிக்கவனம் செலுத்துவதனால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

    எங்கெல்லாம் பேருந்து போகாத கிராமம் இருக்கிறதோ அங்கெல்லாம் பஸ் இயக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் பஸ் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சிகளில் டி.ஆர்.ஓ. அங்கையற்கண்ணி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி, ஒன்றிய குழுத்தலைவர்கள் ராமலிங்கம், மீனாம்பாள், மாவட்ட கவுன்சிலர் சோமுமதியழகன், தி.மு.க ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஆண்டி முத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை இயக்குநர்கள் சிவசண்முகம், கலியபெருமாள், ஊராட்சி தலைவர்கள் கவிதா, கலா, ஒன்றிய கவுன்சிலர் தேவகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெங்கடேசன் எசனை வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
    • விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 43), விவசாயி. இவர்பெரம்பலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் வெங்கடேசன் எசனை வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
    • ஒவ்வொரு நாளும் மகாபாரதம் படிக்கும் நிகழ்ச்சி மற்றும் விநாயகர் வனம், அட்சய பாத்திரம், அர்ச்சுனன் தவசு, பூவெடுப்பு, குறவஞ்சி நாடகம், திணை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தீமிதி திருவிழா நடத்துவது என கிராமமக்கள் முடிவு செய்தனர்.

    இதையொட்டி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மகாபாரதம் படிக்கும் நிகழ்ச்சி மற்றும் விநாயகர் வனம், அட்சய பாத்திரம், அர்ச்சுனன் தவசு, பூவெடுப்பு, குறவஞ்சி நாடகம், திணை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான அரவான் களப்பலி, மாடு திருப்புதல் மற்றும் தீமிதி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

    • இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக புகார் எழுந்தது.
    • பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர். கவிக்குமார் உத்தரவி ன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சின்னமுத்து சம்பவ இடத்திற்கு சென்று துரைராஜியின் பெட்டிக்கடையின் உணவு பாதுகாப்பு பதிவு எண்ணை ரத்து செய்து கடைக்கு சீல் வைத்து எக்காரணம் கொண்டு கடையை திறக்ககூடாது என உத்தரவிட்டு நோட்டீஸ் ஒட்டி சென்றார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமம், வடக்குமாதவி சாலை சமத்துவபுரத்தில் பகுதியில் துரைராஜ் என்பவர் பெட்டிக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக புகார் எழுந்தது. இதன்பேரில் பெரம்பலூர் மதுவிலக்கு மற்றும் போதை பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த கடைக்கு சென்று ஆய்வு செய்தபோது குட்கா, பான்மசாலா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்ததையடுத்து அப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர். கவிக்குமார் உத்தரவி ன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சின்னமுத்து சம்பவ இடத்திற்கு சென்று துரைராஜியின் பெட்டிக்கடையின் உணவு பாதுகாப்பு பதிவு எண்ணை ரத்து செய்து கடைக்கு சீல் வைத்து எக்காரணம் கொண்டு கடையை திறக்ககூடாது என உத்தரவிட்டு நோட்டீஸ் ஒட்டி சென்றார்.

    பின்னர் மாவட்ட நியமன அலுவலர் கவிக்குமா கூறுகையில், துரைராஜ் என்பவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்காக மற்றும் பான்மசாலா பொருட்கள் விற்பனைக்கு இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடைக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் எண்ணை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    மறு அறிவிப்பு வரும் வரை இக்கடையில் வணிகம் செய்வது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் படி சட்ட விரோதமானதாகும். இந்த அறிவிப்பாணையே அல்லது பூட்டின் மீதுள்ள அரக்கு சீலையோ அகற்றுவது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவித்தார்.

    • நேற்று முன்தினம் தம்பியின் வீட்டில் தூங்கிவிட்டு நேற்று தனது வீட்டிற்கு சென்றார்.
    • அதிர்ச்சி அடைந்த பரிதாபேகம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியவடகரை-கவர்பணை சாலையில் வசித்து வருபவர் பரிதாேபகம் (வயது 42). இவரது கணவர் ரகமத்துல்லா. இவர் திருச்சி மாவட்டம் கோட்டப்பாளையம் பள்ளிவாசலில் ஹஜ்ரத் ஆக பணியாற்றி வருகிறார்.

    இந்தநிலையில் பரிதாபேகம் கணவர் ஊருக்கு வராத போது அருகே உள்ள தம்பி அப்துல்நசீர் வீட்டில் தங்குவது வழக்கம். நேற்று முன்தினம் தம்பியின் வீட்டில் தூங்கிவிட்டு நேற்று தனது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பரிதாபேகம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 1¼ பவுன் நகை மற்றும் ரூ.1¼ லட்சம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • அரசு பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் சிதம்பரம் தலைமையில் நடந்தது. இதில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை ராகமஞ்சரி வரவேற்றார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கர், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றியும் நுகர்வோர்கள் எவ்வாறு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்பது பற்றியும் விளக்க உரையாற்றினார். இதில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவரும், பெரம்பலூர் மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான எஸ்.கே.கதிரவன் சிறப்புரையாற்றி பேசும்போது, நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும்போது அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தர முத்திரைகளை கவனித்தும், உணவு பொருட்கள் வாங்கும்போது அதன் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை கவனமாக பார்த்து வாங்க வேண்டும். வாங்கும் பொருட்களுக்கு தவறாமல் பில் கேட்டு வாங்க வேண்டும் என்று தெரிவித்தார். பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடங்கப்பட்டதன் நோக்கங்கள் குறித்தும், அதில் மாணவர்களின் பங்கேற்பு பற்றியும் விளக்கப்பட்டது. மேலும் நுகர்வோர் பாதுகாப்பு பற்றி சொற்பொழிவாற்றிய 11-ம் வகுப்பு மாணவி அனுதேவிக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    ×