என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர் தனிக்கவனம்"

    • பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து அது கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதில் தனிக்கவனம் செலுத்துவதனால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனையில் இருந்து மங்கூன் வழித்தட நீட்டித்த சேவையினையும், செட்டிகுளம் பகுதிக்கு கூடுதல் நடை பஸ் சேவையினையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடி யசைத்து தொடங்கிவைத்தார்.

    இதையடுத்து அவர் செட்டிகுளத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற வெல்கம் டு நம் ஊர் சென்னை என்ற விழிப்புணர்வு குறும்பட காட்சி செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிநவீன மின்னனு வீடியோ வாகனத்தில் திரையிடப்படுவதை பார்வையிட்டார்.

    பின்னர் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு செல்பி புகைப்படம் எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பொதுமக்களுடன் பார்வையிட்டு போட்டோ எடுத்துக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா, எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில்,

    தி.மு.க. ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து அது கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதில் தனிக்கவனம் செலுத்துவதனால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

    எங்கெல்லாம் பேருந்து போகாத கிராமம் இருக்கிறதோ அங்கெல்லாம் பஸ் இயக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் பஸ் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சிகளில் டி.ஆர்.ஓ. அங்கையற்கண்ணி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி, ஒன்றிய குழுத்தலைவர்கள் ராமலிங்கம், மீனாம்பாள், மாவட்ட கவுன்சிலர் சோமுமதியழகன், தி.மு.க ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஆண்டி முத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை இயக்குநர்கள் சிவசண்முகம், கலியபெருமாள், ஊராட்சி தலைவர்கள் கவிதா, கலா, ஒன்றிய கவுன்சிலர் தேவகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×